இன்றைய முக்கிய நிகழ்வுகள் (25.12.2024)
பா.வே. மாணிக்க நாயக்கர் காலமான தினமின்று!
1871-1931 ஆகிய இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த பொறியியல் அறிஞராகவும்,தமிழறிஞராகவும் பா.வே.மாணிக்க நாயக்கரைப் பற்றி இந்தத் தலைமுறையினருக்குத் தெரிய வாய்ப்பில்லை. ஆங்கில மொழிப்பற்றும் தமிழுணர்வு இன்மையும் நிறைந்துள்ள இந்தக் காலகட்டத்தில் மாணிக்க நாயக்கரை நினைத்துப் பார்ப்பது தேவையான ஒன்றாகும். மாணிக்க நாயக்கர் சேலம், பாகல்பட்டி என்னும் சிற்றூரில் பெற்றோர் வேங்கடசாமி நாயக்கர் – முத்தம்மையார் தம்பதிக்குப் பிறந்தார். சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் பயின்று, 1896ல் தமது 24ம் வயதில் பொதுப்பணித் துறையில் கட்டுமானப் பொறியாளராகப் பணியில் சேர்ந்தார். மறைமலையடிகளார் தொடங்கிய “தனித்தமிழ்” இயக்கத்துக்கு மாணிக்க நாயக்கர் புரவலராக இருந்துள்ளார். மாணிக்க நாயக்கர் திருச்சிராப்பள்ளியில் செயற்பொறியாளராகப் பணியாற்றியபோது ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் புலவர்களை வரவழைத்து இலக்கிய உரையாடல் நடத்துவது வழக்கம். 1919ம் ஆண்டு தமிழ்ப் புலவர்களின் மாநாடு ஒன்றைக் கூட்டினார். “தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒன்று உருவாக வேண்டும்,” என்னும் தமது கருத்தை 1931ம் ஆண்டுக்கு முன்பே நாயக்கர் கொண்டிருந்தார். “அறிவியல் தமிழ்ச் சொற்களின் அகராதி” என்னும் தலைப்பில் இவரது தொகுப்புகள் சென்னை மறைமலையடிகள் நூலகத்தில் இன்றும் உள்ளன. நாமக்கல் கவிஞரின் ஓவியத் திறமையை அறிந்த பா.வே.மாணிக்க நாயக்கர் அவரை தில்லிக்கு அழைத்துச் சென்று, ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்துகொள்ளச் செய்தார். முடிசூட்டு விழா நிகழ்ச்சியை ஓவியமாகத் தீட்டிய நாமக்கல் கவிஞருக்குத் தங்கப்பதக்கம் கிடைக்கக் காரணமாகவும் இருந்துள்ளார். 1923 – 24ல் “செந்தமிழ்ச்செல்வி” இதழ் ஆசிரியர் குழு உறுப்பினராகவும் இருந்து பல, தமிழ் ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் அந்த இதழில் எழுதிவந்துள்ளார். தமிழ் உச்சரிப்பு (Tamil Phonology) என்னும் தலைப்பில் அமைந்த சொற்பொழிவுகளை தமிழ் நாட்டின் பல ஊர்களிலும் நிகழ்த்தியுள்ளார். ஆந்திர நாட்டில் பணியாற்றியபோது “திராவிடர் – ஆரியர் நாகரிகம்” என்னும் சொற்பொழிவை தெலுங்கு மொழியில் உரையாற்றினார். மாணிக்க நாயக்கரின் சொற்பொழிவுகள் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே அமைந்தன. காரணம், ஆங்கிலேயரிடையே தமிழ் மொழியின் சிறப்பைப் பரப்ப வேண்டும் என்பதே. “தமிழ் எழுத்துகளின் நுண்பொருள் விளக்கம்” என்னும் தமது நூலில் தமிழ் எழுத்துகளுக்கெல்லாம் முளை எழுத்து (Root letter)”ஓ” என்றும் அது எல்லா வடிவங்களும் பிறக்கக் காரணமானது என்றும் கூறி ஓங்காரத் தத்துவத்தை வலியுறுத்தியுள்ளார். சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் அணைக்கான வரைமுறை அமைத்தவர் அவர்தான் என்றும் செவிவழிச் செய்தி உண்டு. இவர் சோதிடக் கலையில் தேர்ச்சி பெற்றிருந்ததால் தமது ஆயுட்காலத்தைக் கணக்கிட்டு, தமது ஆயுள் 60 ஆண்டுகள் என்று குறித்து வைத்திருந்தார். அதன்படி தமது அறுபதாம் வயதில் (25.12.1931) நள்ளிரவில் இயற்கை எய்தினார் என்பது வியப்பான செய்தி. தமிழ்ச் சமுதாயம் அவரை மறந்துவிட்டாலும் அவரது படைப்புகளும், ஆய்வுப் பணிகளும் மூத்த தமிழறிஞர்களின் மனதில் பதிந்துதான் உள்ளது. அவற்றை எதிர்கால இளைஞர்களுக்குக் கொண்டு செல்வது அரசின் கடமையாகும்.
மூதறிஞர் ராஜாஜி காலமான தினமின்று
தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக இரண்டு முறை பதவி வகித்தவர் ராஜாஜி. “இந்தியாவின் ஒரே இந்திய கவர்னர் ஜெனரல்” என்ற பெருமைக்கு உரியவர். “என் மனச்சாட்சியின் காவலர்” என்று மகாத்மா காந்தியால் புகழப்பட்டவர். உலகின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவர். ரத்தத்துடன் சிறுநீர் கலந்துவிடும் “யூரிமியா” என்ற நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக, 17.12.1972 அன்று சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியில் ராஜாஜி சேர்க்கப்பட்டார். தொடக்கத்தில் அவர் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டபோதிலும், பிறகு பின்னடைவு ஏற்பட்டது. மூன்று நாட்கள் மரணத்துடன் போராடினார். டாக்டர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும், குணம் ஏற்படவில்லை. டிசம்பர் 25ந்தேதி மாலை 5.44 மணிக்கு ராஜாஜி மரணம் அடைந்தார். உயிர் பிரியும்போது சி.ஆர்.நரசிம்மன், மகள்கள் நாமகிரி, லட்சுமி, பேரப்பிள்ளைகள், முதல் அமைச்சர் கருணாநிதி ஆகியோர் அருகில் இருந்தனர். ராஜாஜி மரணம் அடைந்த செய்தியை, டாக்டர் சத்தியநாராயணா அறிவித்தார். அப்போது, ஆஸ்பத்திரியில் கூடி இருந்தவர்கள் கண்ணீர் விட்டு அழுதனர். ராஜாஜியை பார்க்க, நிருபர்கள் அனுமதிக்கப்பட்டனர். இறந்த பின்னும் தூங்குவது போலவே ராஜாஜியின் முகம் அமைதியாக காட்சி அளித்தது. அருகே, ராஜாஜியின் மகன் நரசிம்மன், மகள்கள் நாமகிரி, லட்சுமி, குடும்ப நண்பர் “கல்கி” சதாசிவம், எம்.எஸ்.சுப்புலட்சுமி ஆகியோர் கதறி அழுதபடி இருந்தனர். ராஜாஜியின் உடலைப் பார்த்து முதல் அமைச்சர் கருணாநிதி, பழைய காங்கிரஸ் தலைவர் காமராஜர் ஆகியோரும், அமைச்சர்களும், சுதந்திரா கட்சி பிரமுகர்களும் கண் கலங்கிய படி நின்றனர். ராஜாஜியின் உடல் மீது, டாக்டர்கள் சார்பில் மலர் மாலை ஒன்று வைக்கப்பட்டது. சில மதச் சடங்குகளுக்குப்பின், மாலை 6.50 மணிக்கு ஆஸ்பத்திரியில் இருந்து ராஜாஜி மண்டபத்துக்கு ராஜாஜியின் உடல் கொண்டு போகப்பட்டது. ராஜாஜியின் உடலை ராணுவ அதிகாரிகள் ஒரு “ஆம்புலன்ஸ்” வண்டியில் ஏற்றினார்கள். இந்த ஆம்புலன்சுக்கு முன்னால் 4 ராணுவ வீரர்கள் மோட்டார் சைக்கிளில் சென்றார்கள். அதன் பிறகு போலீஸ் அதிகாரிகள் 2 “ஜீப்” களில் சென்றார்கள். இதன்பின் “ஆம்புலன்ஸ்” வண்டி சென்றது. “ஆம்புலன்ஸ்” வண்டியில் ராஜாஜியின் மகன் நரசிம்மன், பேரன் ராஜ்மோகன் காந்தி, சுதந்திரா கட்சித் தலைவர் ஹண்டே ஆகியோர் இருந்தார்கள். ராஜாஜி உடல் வந்து சேருவதற்கு முன்பாகவே முதல் அமைச்சர் கருணாநிதியும், மற்ற அமைச்சர்களும், தலைவர்களும் ராஜாஜி மண்டபத்திற்கு வந்து இருந்தார்கள். ராஜாஜியின் உடல் கொண்டு வந்து வைக்கப்பட்டதும் அதன் மீது கருணாநிதி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மற்றவர்களும் மலர் வளையம் வைத்தனர். 6 அடி உயர மேடை மீது ராஜாஜி உடல் வைக்கப்பட்டது. உடல் மீது தேசியக்கொடி போர்த்தப்பட்டது. மேடையின் 4 பக்கங்களிலும் ராணுவ வீரர்கள் துப்பாக்கியை தலைகீழாக பிடித்தபடி நின்றார்கள். ராஜாஜி மரணச்செய்தி சென்னை நகரில் காட்டுத்தீ போல் பரவியது. மக்கள் இறுதி மரியாதை செலுத்துவதற்காக ராஜாஜியின் உடல் மேடை மீது வைக்கப்பட்டதும், ஆண்களும், பெண்களும் சாரி சாரியாகச் சென்று இறுதி மரியாதை செலுத்தினார்கள். ராஜாஜியின் உடல் அருகே மகன் நரசிம்மன், மகள்கள், பேரன் பேத்திகள் சோகமே உருவாக அமர்ந்திருந்தனர். ராஜாஜி மறைவுக்கு தமிழக அரசு சார்பில் 7 நாள் துக்கம் கடைப்பிடிக்கப்படும் என்று, முதல் அமைச்சர் கருணாநிதி அறிவித்தார். “இந்த 7 நாட்களும், அரசு விழாக்கள் ரத்து செய்யப்படும். எல்லா கொடிகளும் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்” என்று அவர் அறிவித்தார். மத்திய அரசும், 7 நாள் துக்கம் கடைப்பிடிக்கப்படும் என்று அறிவித்தது. ரேடியோவில், வழக்கமான நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு, சோக இசை இசைக்கப்பட்டது. ராஜாஜி மறைவையொட்டி, மறுநாள் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டது. கடைகள் மூடப்பட்டன. ராஜாஜியின் உடல் ராஜாஜி மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்ட சிறிது நேரத்திற்கெல்லாம், ஜனாதிபதி வி.வி.கிரி வந்து, மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது அவர் கறுப்பு உடை அணிந்திருந்தார். சிறிது நேரம் வரை ராஜாஜியின் உடலைப் பார்த்தபடி கைகூப்பி நின்றார். அப்போது அவர் கண்கள் கலங்கின. பிறகு கவர்னர் கே.கே.ஷா ராஜாஜியின் உடல் மீது மலர் வளையம் வைத்து வணங்கினார். கைகூப்பியபடி மூன்று முறை மேடையை சுற்றி வந்தார். பழைய காங்கிரஸ் தலைவர் காமராஜர், டெல்லி மந்திரிகள் சி.சுப்பிரமணியம், மோகன் குமாரமங்கலம், தமிழ்நாடு தலைமை போலீஸ் அதிகாரி (ஐ.ஜி.) அருள், எம்.ஜி.ஆர். ஆகியோரும் மலர் வளையம் வைத்து வணங்கினார்கள். ராஜாஜிக்கு அனைத்து கட்சிகள் சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.
சர். ஐசக் நியூட்டன் பிறந்த நாளின்று!
இயற்கையும் அதன் விதிகளும் இருளில் கிடந்தன: கடவுள்… நியூட்டன் பிறக்கட்டும் என்றார் – ஒளி பிறந்தது*”>>> போப்* 1687-இல் ஈர்ப்பு சம்பந்தமான விளக்கங்களை உள்ளடக்கிய, Philosophiae Naturalis Principia Mathematica என்னும் நூலை வெளியிட்டார். இவருடைய இயக்க விதிகள் மூலம், (classical mechanics) என்னும் துறைக்கு வித்திட்டார். பூமியின் புவி ஈர்ப்புத் தன்மையைப் பற்றி முதன் முதலில் கண்டறிந்தவர் நியூட்டன் என்றே பலர் எண்ணினாலும், அதற்கு முன்பாகவே, பலர் பூமியின் தன்மை இழுப்பதாலேயே பொருள்கள் கீழே விழுகின்றன என்பதைக் கண்டறிந்தனர். இருப்பினும், கிரகங்களின் இயக்கத்துக்கு இந்த புவி ஈர்ப்பு விசையே காரணம் என்றும், கிரகங்கள் சூரியனிடமிருந்து எவ்வளவு தூரமுள்ளனவோ அவ்வளவுக்கு மாறாக வேகம் சலன கதியில் வித்தியாசப் படுகிறது என்றும் முதன் முதலாகக் கண்டறிந்தவர் ஐசக் நியூட்டனே. நியூட்டன் பற்றிய குறிப்புகளை அவரது நண்பர் வால்டோ எழுதி வைக்கவில்லையென்றால், நியூட்டனின் ஆப்பிள் பழச் சம்பவம் நமக்குத் தெரியாமலே போயிருக்கும். ஒருநாள் நியூட்டன் தன் தோட்டத்தில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள ஆப்பிள் மரத்திலிருந்து ஆப்பிள் பழம் ஒன்று கீழே விழுந்தது. அதைப் பார்த்த நியூட்டனின் சிந்தனை ஆப்பிள் மரத்தின் மீது சென்றது. அப்போது அவர் ஆப்பிள் மரத்திலிருந்து விழுந்த ஆப்பிள் நேராக பூமியில் வந்து விழக் காரணம் என்ன? அந்தக் கனி மரத்தின் மீது ஏன் செல்லவில்லை என்று சிந்தித்தார். ஆக, பூமி சாதாரண பொருட்களை மட்டுமின்றி கிரகங்களையும் தன் வசம் இழுக்கிறது என்பதை உணர்ந்தார். அன்று அவர் சிந்தையைத் தூண்டச் செய்யக் காரணமாயிருந்த சம்பவமே அவர் கண்டுபிடித்த இயக்கம் மற்றும் புவி ஈர்ப்பு விதிக்குக் கட்டுப்பட்ட கிரகச் சுழற்சி நியதிக்கும் காரணமாக அமைந்தது. சூரியனைச் சுற்றிய பாதையில் கோளின் இயக்கத்துக்குக் காரணமான விசை மரத்திலிருந்து ஆப்பிள் கனியை விழச் செய்யும் என்ற முடிவிற்கு வந்தார். இவர் தம் 24வது வயதில் 1666ம் ஆண்டில் ஈர்ப்பியலைப் பற்றிய விதியை வெளியிட்டு மிகப்பெரும் புகழ் பெற்றார்.
அடல்பிகாரி வாஜ்பாய் பர்த் டே டுடே
வாஜ்பாய் ஆட்சிக் கால நிஜச் சாதனைகள்
தங்கத்தை இங்கிலாந்தில் அடமானம் வைத்து அரசாங்கம் நடத்திய இந்தியாவில் இவர் பிரதமராக பதவியேற்ற பின்தான்… தங்கம் விலை பவுன் 4470/-இல் இருந்து 3300/- ஆக குறைந்தது .. இவர் ஆட்சியில்தான் 4.5 ஆண்டுகள் விலைவாசி உயரவில்லை. இவர் ஆட்சியில்தான் பெட்ரோலிய பொருட்கள் விலை எகிற வில்லை … petrol 36/- rs per litre rate. இவர் ஆட்சியில்தான் செல்வந்தர்கள் மட்டுமே 3000O/- 0YT 3 மாதம் 15000/- 6மாதம் கழித்து கிடைத்த தொலைபேசி இனைப்பை 1000ரூபாய் செலுத்தி உடனடியாக சாமானிய மக்கள் பெற்றார்கள்… இந்தியா முழுவதும் விபத்தில்லா நான்கு வழி சாலை வந்தது.. சர்வசிக்ஷ் அபியான் மூலம் இந்தியாவின் கடைசி கிராமம் வரை கல்வி வளர்ச்சி அடைந்தது. பிரதான்மந்திரி கிராம் சடக் யோஜனா மூலம் கடைக்கோடி கிராமம் வரை சாலைகள் கண்டது . இவர் ஆட்சியில்தான் வங்கி வீட்டு கடன் வட்டி குறைந்து பலர் வீடு கட்டினார்கள்.. வாகன உற்பத்தியும் இந்தியாவில் அதிகரிக்கப்பட்டு வாகன கடனும் தாராளமாக கிடைத்ததன் பலனாக மிதிவண்டியை மட்டுமே பார்த்த பலர் வாகனங்கள் வாங்கினார்கள்: விறகு அடுப்பு மண்ணெண்ணெய் அடுப்புமே பயன்படுத்திய இந்திய குடி மக்கள் பலர் இவர் ஆட்சியில்தான் கேஸ் அடுப்பு வாங்கி உபயோகித்து நிம்மதி பெருமூச்சு விட்டார்கள்.. இவர் ஆட்சியில் தான் அதிகப்படியாக இருளில் இருந்த பலருக்கு காற்றாலை மின் உற்பத்தி மூலம் தடையில்லா மின்சாரம் கிடைத்தது .. இவர் ஆட்சியில்தான் போக்குவரத்திற்கு இந்தியா முழுவதும் தரமான தேசிய நெடுஞ் சாலை கள் கிடைத்தது . அதில் தமிழகத்தில் NH.66 கிருஷ்ணகிரி to பாண்டிச்சேரி NH,68 சேலம் to உளுந்தூர்பேட்டை NH 208 மதுரை to கொல்லம் NH 45A விழுப்புரம் to நாகப்பட்டனம் NH 206 …NH 67 திருச்சி to ராமேஸ்வரம் NH 207 NH 209 சாம்ராஜ்நகர் to திண்டுக்கல் மற்றும் NH 45B ஆகியவை. இவர் ஆட்சியின் போதுதான் மதுரை சின்னப்பிள்ளை காலில் விழுந்து ஊக்குவித்து மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலம் மகளிர் வாழ்வு மேம்பாடு அடைந்தது.. இவர் ஆட்சியில் தான் அமெரிக்காவின் கண்ணில் மண்ணை தூவி பொக்ரான் அணுகுண்டு வெடித்து இந்தியா உலக அரங்கில் தலை நிமிர்ந்தது,. இவர் ஆட்சியில் நம்மூர் மேதை விஞ்ஞானி அப்துல்கலாம் ஜனாதிபதியானார்,. இவர் ஆட்சியில் தான் பனிமலை கார்கிலில் ஆக்கிரமிக்க நினைத்த அந்நிய நாட்டினரை துரத்தியடித்து வெற்றிவாகை சூடப்பட்டது.. இவர் ஆட்சியில் தான் சுற்றுலா கூட போக முடியாத ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் (ஸ்ரீநகரில்) தீவிரவாதிகளை அடக்கி சுற்றுலா சுலபமானது.. இவர் ஆட்சியில் தான் வெளிநாடுகளில் திட்டங்களுக்கு கையேந்திய இந்தியாவை அந்நிய செலாவணி கையிருப்பு 1.5லட்சம் கோடியாக உயர்த்தி நாம் அவர்களுக்கு கடன் கொடுக்கும் நிலை உருவானது.. இவர் ஆட்சியில்தான் எதிர்கட்சியாக இருந்தாலும் S.M.கிருஷ்ணா கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரை சிலிகான்vally யாக்க 1500 கோடி உடன் ஒதுக்கி மென்பொருள் உற்பத்தியை தன்னிறைவாக்கி இந்தியாவில் உள்ள படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு குறை போக்கப்பட்டது.. இவர் ஆட்சியில் தான் இந்தியா பால் உற்பத்தியில் முதலிடம் பிடித்தது .. இவர் ஆட்சியில்தான் டெல்லியில் முதல் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டது இவர் ஆட்சியில்தான் மிகச்சிறப்பான நிறைய சுரங்கபாதைகள்.. கடல் பாலங்கள் கொண்ட கொங்கன் ரயில்வே மங்களூர்to மும்பை பாதை அமைக்கப்பட்டது .. இவர் ஆட்சியில்தான் ஏழைகளுக்கு அந்தியோதையா அன்னபூர்னா திட்டத்தில் ஏழைகள் பசியைபோக்க மாதம் 25கிலோ அரிசி இலவசமாக தரப்பட்டது,.. இவர் ஆட்சியில்தான் வால்மீகி அம்பேத்கார் ஆவாஸ்யோஜனாஅய்யா திட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீடு கட்டி தரப்பட்டது,. இவர் ஆட்சியில் தான் அம்பேத்கார் பிறந்தநாள் அரசு விடுமுறை நாள் ஆக்கப்பட்டது.. இவர் ஆட்சியில்தான் மிலாடிநபி விடுமுறை நாளாக ஆக்கப்பட்டது… நாட்டு மக்களுக்காக மெய்யாலுமே திருமணமே செய்து கொள்ளாத வாஜ்பாய் அவர்களின் பல சாதனைகள் சொல்லி கொண்டே போகலாம்.
முகம்மது அலி ஜின்னா பிறந்த நாள்
டிசம்பர் 25 இந்தியப் பிரிவினை, தனி நாடு கோரிக்கையாளர் முகம்மது அலி சின்னா ஒரு இசுலாமிய அரசியல்வாதி ஆவார். அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியில் ஒரு தலைவராக இருந்த ஜின்னா இந்தியா பிரிக்கப்பட்டு, பாகிஸ்தான் என்ற தனிநாடு ஏற்பட்ட பின் அந்த நாட்டின் தந்தையார் (பாபா-ஏ-கௌம்) என்றழைக்கப்படுகிறார். இவரின் பிறந்த நாள் பாகிஸ்தானில் ஒரு தேசியத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. இவர் பாகிஸ்தானின் முதல் தலைமை ஆளுநர் (Governor-General) ஆவார்.
கீழ்வெண்மணிப் படுகொலைகள் நிகழ்ந்த நாளின்று
தஞ்சை மாவட்டம் மிகுந்த செழுமையான மாவட்டமாக இருந்தது அங்கு பாசன வசதி மிகுந்து. விளைநிலங்கள் செழுமையாகவும் அதிக விளைச்சலை தருபவை ஆக இருந்தது. தமிழ்நாட்டின் மொத்த நெல் உற்பத்தியில் முப்பது சதவிகித விளைநிலங்கள் தஞ்சை மாவட்டத்தின் கீழ் இருந்தது. தஞ்சையில் பல நிலங்களில் வேலை செய்யும் கூலித் தொழிலாளர்கள் இருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே இருந்தனர். அங்கு இருந்த நிலக்கிழார்கள் அவர்களை அடிமையாக எண்ணி நடத்திவந்தனர். அங்கு இருந்த பண்ணை ஆட்கள் அராஜக போக்கால் அவர்கள் மிக குறைந்த ஊதியம் மிக குறைந்த வேளை உணவு வழங்க பட்டது. கூலி ஆட்களுக்கு கொடுக்கப்பட்ட குறைந்த சம்பளம் அவர்கள் வழக்கை முறை வெகுவாக மன உளைச்சலை ஏற்படுத்தியது. அவர்கள் நல்ல வழக்கை முறை அடைய பல முறை முயற்சி செய்தும் அவர்கள் அடிமை நிலையும் குறைந்த ஊதியமும் அவர்களை முன்னேற விடவில்லை. அவர்கள் நியாமான கோரிக்கை எதுவும் அவர்களை பணி அமர்தியவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. 1960 ஆம் ஆண்டு இந்திய சீனா போரால் எங்கும் ஏற்பட்ட பஞ்சம் இவர்களை பெரிதும் வாட்டியது.தஞ்சை மண்ணில் “பண்ணையாள் முறை” ஆழமாக வேரூன்றியிருந்த காலம். சாணிப்பால், சாட்டையடி என்பதெல்லாம் சர்வ சாதாரணமான தண்டனைகளாக இருந்தன .கம்யூனிஸ்ட் தலைவர்களான மணியம்மையும்பி.சீனிவாசராவ்வும். சங்க உணர்வை உருவாக்கினார்கள். விவசாயிகள் பலரும் ஒன்று சேர்ந்து விவசாயிகள் சங்கத்தை உருவாக்கினார்கள். நிலச்சுவான் தார்களும் ஒன்றுகூடி நெல் உற்பத்தியாளர் சங்கத்தை உருவாக்கினார்கள். உழைப்புக்கு ஏற்ற கூலியைக் கேட்டார்கள் விவசாயிகள். ஒப்புக் கொள்ளாமல் பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அதற்குள் கீழ்வெண்மணியை சேர்ந்த இருவரை நிலச்சுவான்தார்கள் கட்டி வைத்து அடித்ததும் கலவரம் மூண்டது. கோபாலகிருஷ்ண நாயுடு மற்றும் நில உடமையாளர்கள் அவர்களின் அடியாட்கள், விவசாயத் தொழிலாளர்களை ஒடுக்குவதற்காகவே அமைக்கப்பட்ட கிஷான் போலீஸ் துணையுடன் படுகொலையை அரங்கேற்றினார்கள். 1968 இதே டிசம்பர் 25. கிறித்துமசு நாள். நாட்டுத் துப்பாக்கிகளுடன் சிலர் கீழ்வெண்மணிக்குள் புகுந்தார்கள். விவசாயிகளைத் தாக்கினார்கள், விவசாயிகள் திருப்பித் தாக்கினார்கள். நில உடமையாளர்களின் அடியாட்கள் துப்பாக்கியால் சுட்டதில் பலர் ஓடினார்கள். ஓடியவர்கள் தெருவொன்றின் மூலையில் “ராமையன்”என்பவரின் குடிசைக்குள் ஓடி ஒளிந்தார்கள். எட்டடி நீளம், ஐந்தடி அகலமுள்ள அந்தக் குடிசையில் 48 பேர் அடைந்திருந்தனர். கதவு அடைக்கப்பட்டுத் தீ வைக்கப்பட்டதில் அக்குடிசை எரிந்து சாம்பலானது. பெண்கள், குழந்தைகள் உட்பட 44 பேர் உடல் கருகி மாண்டனர். இதையொட்டி 106 பேர் கைதானார்கள் – வழக்கம் போல் ரிலீஸாகி விட்டார்கள்.