பிரதமர் நரேந்திர மோடி இன்று குவைத் பயணம்..!
பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக இன்று குவைத் புறப்படுகிறார். பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக இன்று மற்றும் நாளை (டிச.21,22) என இரண்டு நாள் பயணமாக குவைத் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். சுமார் 43 ஆண்டுகளுக்குப் பிறகு வளைகுடா நாட்டிற்கு இந்தியப் பிரதமர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். கடைசியாக 1981-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி குவைத் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதன்பிறகு தற்போதுதான் பிரதமர் மோடி செல்லவிருக்கிறார்.
பிரதமர் மோடி வளைகுடா நாடுகளில் குவைத் தவிர மற்ற அனைத்து நாடுகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். சமீபத்தில் குவைத் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா அலி அல்-யாஹ்யா இந்தியா வருகை தந்தார். அப்போது பிரதமர் மோடியின் இந்த சுற்றுப்பயணம் குறித்து திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பிரதமர் மோடி மேற்கொள்ளும் இந்த சுற்றுப்பயணம் இரு நாடுகளுக்கு இடையிலான நல்லுறவை மேம்படுத்துவதுடன், புதிய வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவும் வாய்ப்புகள் இருப்பதாக பேசப்படுகிறது.
இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
“பிரதமர் மோடி டிசம்பர் 21 மற்றும் 22 ம் தேதிகளில் குவைத் நாட்டின் அமீர் ஷேக் மெஷல் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவின் அழைப்பின் பேரில் குவைத்துக்குப் பயணம் மேற்கொள்கிறார். இது 43 ஆண்டுகளில் முதல்முறையாக அந்நாட்டிற்கு செல்லும் ஒரு இந்தியப் பிரதமரின் பயணத்தை குறிக்கிறது. எனவே, இது கணிசமான முக்கியத்துவத்தைப் பெறுகிறது” எ
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.