பிப்ரவரி 25 – திரைப்படத் தயாரிப்பாளர் பி.நாகிரெட்டி நினைவு தினம் இன்று.
பி. நாகிரெட்டி என அழைக்கப்படும் பொம்மிரெட்டி நாகிரெட்டி (டிசம்பர் 2, 1912 – பிப்ரவரி 25, 2004) இவர் ஒரு திரைப்படத் தயாரிப்பாளர், பத்திரிகையாளர், தொழிலதிபர் மற்றும் சமூக சேவகரும் ஆவார்.
நாகிரெட்டி ஆந்திர மாநிலத்தில் கடப்பை மாவட்டம் பொட்டிம்பாடு என்ற கிராமத்தில் டிசம்பர் 2, 1912ஆம் ஆண்டு பிறந்தார். இவரது குடும்பம் பிறகு சென்னையில் குடியேறியது.
‘பி.என்.கே’ என்ற அச்சகத்தை தொடங்கினார்.
‘ஆந்திரஜோதி’ என்ற தெலுங்கு மாத இதழைத் தொடங்கினார்.
நாகிரெட்டியின் மனைவி சேசம்மா. வேணுகோபாலரெட்டி, விசுவநாத் ரெட்டி, வெங்கட்ராம ரெட்டி என்ற 3 மகன்களும் ஜெயம்மா, சாரதா என்ற 2 மகள்களும் உள்ளனர்.
குழந்தைகளுக்காக தெலுங்கில் ‘சந்தமாமா’ என்ற சிறுவர் இதழைத் தொடங்கினார். இது பின்னர் ‘அம்புலி மாமா’ என்ற பெயரில் தமிழில் வெளியிடப்பட்டது.
சினிமாத்துறையில் ஈடுபட விரும்பி, வடபழனி அருகே நிலம் வாங்கி, வாகினி ஸ்டூடியோவைத் தொடங்கினார்கள்.
இங்கு தயாரான படங்கள் வெற்றிகரமாக ஓடின.
நாகிரெட்டியின் மகள் பெயர் விஜயா. அவர் பெயரால் ‘விஜயா புரொடக்ஷன்ஸ்’ என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை நாகிரெட்டியும், சக்ரபாணியும் தொடங்கி, ‘பாதாள பைரவி’ என்ற படத்தைத் தயாரித்தனர்.
. வாகினி ஸ்டூடியோவின் பெயர், விஜயா -வாகினி ஸ்டூடியோ என்று பிறகு மாறியது.
தென்கிழக்கு ஆசியாவிலேயே பெரிய ஸ்டூடியோவாக இது திகழ்ந்தது.
ஆந்திராவில் முதல்-மந்திரிகளாக இருந்த சஞ்சீவரெட்டி, பிரமானந்தரெட்டி ஆகியோர், ‘உங்கள் ஸ்டூடியோவை ஆந்திராவுக்கு கொண்டுவந்து விடுங்கள். எல்லா வசதிகளும் செய்து தருகிறோம்’ என்று அழைத்தார்கள்.
ஆனால், நாகிரெட்டி மறுத்துவிட்டார். ‘தமிழ் மண்தான் என்னை வாழவைத்தது. கடைசி மூச்சு உள்ளவரை தமிழ்நாட்டில்தான் வாழ்வேன்’ என்று கூறிவிட்டார்.
விஜயா -வாகினி
ஸ்டூடியோ இருந்த இடங்களில் விஜயா ஆஸ்பத்திரி, விஜய சேச மகால் திருமண மண்டபம் ஆகியவற்றைக் கட்டினார்.
தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபைத் தலைவர், இந்திய திரைப்படக் கழகத் தலைவர் போன்ற பதவிகளை பல முறை வகித்தவர்.
பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட நாகிரெட்டி தனது நினைவாற்றலை இழந்தார்.
25-2-2004 அன்று சென்னையில் நாகிரெட்டி காலமானார்.