குப்பை தொட்டியாக மாறிய உலகம் – செல்வராணி
குப்பை தொட்டியாக மாறிய உலகம்
(மனிதனும் அவனிடம் மாட்டிய இயற்கையும்)
இயற்கை உயிரினங்கள் வாழ அனைத்து சூழலையும் உருவாக்கி காத்திருக்கு. மத்த உயிர்கள் இயற்கையுடன் இயைந்து வாழுது. ஆனா மனிதன் இயற்கையையும் அழித்து உடன் மற்ற உயிரினங்களையும் அழிக்கிறான். அப்படி செய்யறவன் வாழவாவது செய்யறானா அதுவும் இல்லை.
கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு சூரியனிலிருந்து சிதறி விழுந்த பூமியின் குளிர்ந்த மேற்பகுதியை மட்டுமே பயன்படுத்த வேண்டிய நாம் என்று கி.மீ கணக்கில் பள்ளம் தோண்டினோமோ அன்றே உலகம் சுகாதாரத்தை இழந்து குப்பையாகி விட்டது.
நமக்கு வேண்டிய வசதி எல்லாம் உணவு, நீர், காற்று, அழகான காட்சிகள் இப்படி எல்லாமே மேல்பகுதியில இருக்க பேராசை பிடித்து, அடி ஆழம்வரை கனிமவளங்களை எடுக்கிறேனென்று போய், பாலிதீன், மீத்தேன், சயனைடு, சல்பர்னு இயற்கை உயிர்களுக்கு ஒவ்வாதுனு புதைச்சு வச்ச விசப் பொருளைலாம் மேல கொண்டு வந்த்துமில்லாமல், ஒன்றுடன் ஒன்று இணைச்சு வேதிவினை நடத்தி புது புது விசப் பொருள்களை கண்டு புடிச்சு பயன்பாட்டுக்கு விட்டா மண்ணால அத அழிக்க முடியல.
அதனாலதான் அவ்வளவு பெரிய பசுபிக் பெருங்கடல்லயே குப்பை சேர்ந்து தனி தீவா மாறிடுச்சாம் ஆகா எவ்ளோ பெருமையா இருக்குல்ல. இனி வருங்காலத்துல கூகுள்ள பூமினு சர்ச் பண்ணா பெரிய குப்பைத்தொட்டினுதா வரும்போல.
ஒன்னு தெரிஞ்சுக்கங்க பிறக்கும்போது யாரும் எதும் கொண்டு வரல. எல்லாம் இங்க இருந்துதான் எடுக்கப்பட்டது. ஆனா எத எடுக்கறன்றதுதா முக்கியம். நீ எடுக்க, பயன்படுத்தனு ஒரு எல்லை இருக்கு. அதை மீறி செயல்பட்டா அதற்கான பலனை அறுவடை செஞ்சுதா ஆகணும்.
உனக்கான எல்லைகளை மீறும்போதெல்லாம் இயற்கை சுனாமி, பூகம்பம், கொள்ளைநோய்னு எச்சரிக்கை குடுத்துட்டுதா இருக்கு. புரியலியா தோண்டும்போது வெளிப்படும் அதிர்வாலும், விசவாயுக்களாலுமே பெரும்பாலும் பருவநிலைகள் மாறுகின்றன. உயிர்சமநிலையில் மாற்றம் ஏற்பட்டு உணவுச் சங்கிலியிலிருநந்து பல உயிரினங்கள் விடுபட்டு அழிகின்றன.
பிரபஞ்சத்தில் ஏற்படும் கெமிக்கல் மாற்றத்தால் பல புது உயிரினங்கள அதாவது இப்போது இருக்கும் உயிர் சமநிலைக்கு ஒவ்வாத உயிரினங்கள் உருவாகின்றன. அதே கெமிக்கல் மாற்றத்தால் சூழல் அனைத்தும் மாறுபட்டு இயற்கையை விட்டு வெகுதூரம் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே விலகிவிட்ட மனிதனுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு பெயர் தெரியாத மர்ம நோய்கள் உருவாகி கொத்து கொத்தாக உயிரிழப்பு ஏற்படுகிறது.