வாட்ஸ்அப் – பிப்ரவரி 24, 2009
வாட்ஸ்அப்
இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில் தொழில்நுட்ப இன்றியமையாத ஒரு தகவல் தொடர்பு மென்பொருளாகும்.
அலைபேசி இருந்தால் வாட்ஸ்அப் இல்லை என்றால் அது அலைபேசியை இல்லை என்ற அளவிற்கு அனைத்து கட்ட மக்களின் ஒரு இணைப்புப் பாலமாக இன்றியமையா அஞ்சல் துறையாக வேரூன்றிவிட்டது.
ஒரு காலகட்டத்தில் விசேஷ காலங்களில் தீபாவளி பொங்கல் கிறிஸ்துமஸ் புத்தாண்டு எப்படி இப்படி விழாக்காலங்களில் நம் உறவுகளுக்கு வாழ்த்து சொல்வது எஸ்எம்எஸ் என்ற குறுஞ்செய்தி மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருந்தது.
அனுப்பிய ஒரு சில நொடிகளில் பெறுபவர்களை சென்றடைந்தது அதனால் உடனடியாக பதில் கிடைத்தும் சந்தோஷமான நிகழ்வுகள் அதைத் தொடர்ந்து அந்த விழா காலங்களில் அதிக கட்டணம் என்பது ஒரு அதீத சுமையாகவே இருந்தது அதற்கெல்லாம் முடிவு கட்டும் வகையில் தான் வாட்ஸ்அப் என்ற இந்த மாபெரும் ஒரு வரப்பிரசாதம் அறிமுகப்படுத்தப்பட்டது