இன்றைய ராசி பலன்கள் (டிசம்பர் 11 புதன்கிழமை 2024 )
‘தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் டிசம்பர் 11-ம் நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று நமது மின்கைத்தடியின் இப்பகுதியில் பார்க்கலாம்.
குரோதி வருடம் கார்த்திகை மாதம் 26 ஆம் தேதி புதன்கிழமை 11.12.2024 சந்திர பகவான் இன்று மேஷ ராசியில் பயணம் செய்கிறார். இன்று அதிகாலை 01.13 வரை தசமி. பின்னர் இரவு 10.54 வரை ஏகாதசி. பிறகு துவாதசி.இன்று காலை 09.57 வரை ரேவதி. பின்னர் அஸ்வினி.பூரம் உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்.சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
மேஷ ராசி அன்பர்களே!
இன்று கடினமான சூழ்நிலைகளை சந்திக்க நேரலாம். நீங்கள் இதில் முழு ஆற்றலையும் செலுத்த வேண்டியிருக்கும். பொழுதுபோக்கிற்கென சிறிது நேரமே ஒதுக்க வேண்டியிருக்கும். நீங்கள் இன்று அமைதியாக இருக்கவேண்டும். நீங்கள் கூடுதல் பொறுப்புகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் காணப்படும். இது உங்களுக்கு வருத்தம் அளிக்கும். மேலும் நீங்கள் பணிகளை கவனமாக கையாள வேண்டியிருக்கும். உங்களின் அஜாக்கிரதை காரணமாக இன்று பண இழப்பிற்கான வாய்ப்பு உள்ளது. இன்று உங்களுக்கு தொண்டை வலி ஏற்பட வாய்ப்புள்ளது. குளிர் பானங்கள் அருந்துவதை தவிர்க்கவும்.
ரிஷப ராசி அன்பர்களே!
இன்று பதட்டமான சூழ்நிலை காணப்படும். அவைகளை சாமார்த்தியமாக கையாள வேண்டும். இன்று வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் பிறரிடம் நட்புணர்வுடன் பழக வேண்டும். சிறந்த பாடல்கள் கேட்பதன் மூலம் சற்று ஆறதல் பெறலாம். இன்று கவனக் குறைவு காரணமாக திறமையாக பணியாற்ற இயலாது. உங்கள் வேலையில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று பணஇழப்புகள் காணப்படும். இன்று செலவுகளைத் தாண்டி பாதுகாப்பாக சேமிக்க இயலாது. இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும். தலைவலிக்கான வாய்ப்பு உள்ளது. பிரார்த்தனை மற்றும் தியானம் ஆறுதலான நல்ல பலன்களைத் தரும்.
மிதுன ராசி அன்பர்களே!
இன்று உங்கள் மனதில் தெளிவு காணப்படும். இதனால் உங்கள் செயல்களை திறமையாக ஆற்றுவீர்கள். பொருத்தமான செயல்களை செய்து உங்கள் நிலையை மேம்படுத்துவீர்கள். இனிமையான வார்த்தைகள் உங்களுக்கு பல நல்ல பலன்களை அளிக்கும். பணியிடத்தில் வெற்றிகரமான பலன்கள் கிடைக்கும். உங்கள் கடின உழைப்பிற்கு பதவி உயர்வு கிடைக்கும். இன்று நிதிநிலைமை மகிழ்ச்சிகரமாக இருக்கும். லாபம் தரும் முதலீட்டிற்கானபயனுள்ள திட்டங்களில் பங்கு கொள்ள இன்றைய நாளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். உங்களின் நம்பிக்கையான அணுகுமுறை காரணமாக நீங்கள் சிறந்த ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள்.
கடக ராசி அன்பர்களே!
இன்றைய நாள் சுமுகமாக காணப்படும்.உங்களுடைய இலட்சியத்தை விரைவாகவும் எளிதிலும் அடைவீர்கள்.இன்று மகிழ்ச்சியான நாளாக காணப்படும்.உங்கள் வீடு புணரமைத்தலுக்கோ அல்லது புதிய வீடு வாங்குவதற்கோ இந்த நாளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். பணிச்சூழலில் வளர்ச்சி வாய்ப்பு சாதகமாக உள்ளது. நீங்கள் சவால்களை திறமையாகக் கையாள்வீர்கள். இன்று நிதிநிலைமை சுதந்திரமாக இருக்கும்.நீங்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள்.சேமிப்பு நல்ல பலன்களைத் தரும். இன்று ஆரோக்கியம் சிறப்புடன் காணப்படும். மகிழ்ச்சியின் காரணமாக உங்கள் ஆரோக்கியம் திடமாக இருக்கும்.
சிம்ம ராசி அன்பர்களே!
இன்று அதிருப்தியான நிலை காணப்படும். அனுசரணையான போக்கு உங்களுக்கு வெற்றியை பெற்றுத் தரும். சிறந்த பலன் காண உங்கள் தன்னம்பிக்கையை அதிகரித்துக் கொள்ள வேண்டும். உங்கள் எதிர்காலத்திற்காக நீங்கள் திட்டமிட வேண்டும். சக பணியாளர்களுடன் நல்லுறவு பராமரிக்க நீங்கள் முயற்சி எடுக்க வேண்டும். பணியில் கவனமாக இருப்பதன் மூலம் தவறுகள் நேராமல் தவிர்க்கலாம். தவறுகள் செய்ய வாய்ப்புள்ளதால் கவனமாக பணியாற்றவும். பயணத்தின் போது பண இழப்பிற்கான வாய்ப்பு உள்ளது. இதனை தவிர்க்க பணத்தை கவனமாகக் கையாள வேண்டும். உங்களுக்கு பல் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. கண் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
கன்னி ராசி அன்பர்களே!
இன்று உங்களுக்கு சாதகமான நாள். பல வாய்ப்புகள் உங்களுக்கு வெற்றியை பெற்றுத் தரும். நேரத்தை நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். இன்றைய நாளின் பலன்கள் உங்களுக்கு திருப்தி அளிக்கும். நீங்கள் பொறுப்புடனும் சிரத்தையுடனும் பணியாற்றுவீர்கள். உங்கள் முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். கடினமான பணிகளை எளிதாக மேற்கொள்வீர்கள். இன்று நிதிநிலைமை சீராக இருக்கும். பணத்தை நீங்கள் பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள். இன்று உங்களிடம் சிறந்த ஆரோக்கியம் காணப்படும். உங்களிடம் ஆற்றல் நிறைந்து காணப்படும்.
துலா ராசி அன்பர்களே!
இன்றைய நிகழ்வுகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். கடினமான பணிகளையும் எளிதாக முடிப்பீர்கள். உங்கள் செயல்களில் கவனமாக இருக்க வேண்டும். இன்று நீங்கள் முக்கிய முடிவுகள் எடுக்கலாம். பணியிடச் சூழல் மகிழ்ச்சிகரமாக இருக்கும். நீங்கள் சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள். மொத்ததில் உங்கள் செயல்திறனில் திருப்தி காணப்படும். நிதிநிலைமை உங்களுக்கு சாதகமாகவும் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள போதுமானதாகவும் இருக்கும். உங்களால் சேமிப்பு நிலையை உயர்த்த இயலும். உங்களின் தைரியமான மனநிலை காரணமாக இன்று உங்களின் ஆரோக்கியம் சிறப்ப்பாக இருக்கும்.
விருச்சிக ராசி அன்பர்களே!
இன்று செயல்கள் சீராக நடக்க சாதகமாக இருக்காது. இன்று அதிக பொறுப்புகள் காணப்படும். இது உங்களுக்கு கவலை அளிக்கும். உங்களை மகிழ்ச்சியாக வைத்திருங்கள். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். இன்று உங்கள் பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க இயலாது. கூடுதல் பணிகள் காரணமாக திட்டமிட்டபடி பணிகளை செய்வது கடினமாக இருக்கும். இன்று பணப்புழக்கம் குறைந்து காணப்படும். உங்களுக்கு கூடுதல் செலவுகள் ஏற்படும். எனவே பணத்தை கவனமாகக் கையாள வேண்டும். ஆரோக்கியம் சிறப்பாக காணப்படாது. உங்களுக்கு கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.
தனுசு ராசி அன்பர்களே!
இன்று சாதகமான பலன்கள் கிடைக்காது. நீங்கள் சமநிலை இழப்பீர்கள். நற்பலன்கள் காண எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்ள வேண்டும். முக்கிய முடிவுகள் இன்று சிறந்த பலன் அளிக்காது. இன்று அதிகப் பணிகள் காணப்படும். பணிகள் சலிப்பூட்டுவதாக இருக்கும். நீங்கள் சிறந்த பணி மாற்றம் விரும்புவீர்கள். அது இன்று சாத்தியமில்லை, இன்று அதிக செலவுகள் செய்ய நேரலாம். இது உங்களுக்கு கூடுதல் சுமையாக இருக்கும். இது உங்களுக்கு வருத்தத்தை அளிக்கும். இன்று கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. ஆன்மீக ஈடுபாட்டின் மூலம் நீங்கள் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கலாம்
மகர ராசி அன்பர்களே!
இன்று சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும். முக்கிய இலக்குகளை அடைய திட்டமிடலாம். நீங்கள் எதிர்பார்த்ததை விட இன்று அதிகம் கிடைக்கும். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள். பணியிடத்தில் அதிக வாய்ப்புகள் காணப்படும். நீங்கள் பணிகளை திறமையாகவும் விரைவாகவும் ஆற்றுவீர்கள். உங்கள் அணுகுமுறையில் உறுதி காணப்படும். உங்களின் சேமிப்பு ஆற்றல் சிறந்த முறையில் அதிகரிக்கும். லாபம் தரும் புதிய முதலீடுகளில் நீங்கள் பங்கு பெறலாம். இன்று உங்களிடம் சிறந்த ஆரோக்கியம் காணப்படும். உங்களின் மன உறுதியே இதற்கு காரணம்.
கும்பராசி அன்பர்களே!
தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதரர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். மாலையில் குடும்பத் துடன் கோயில்களுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த சலுகை இன்று கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் பங்குதாரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். என்றாலும் அதனால் பாதிப்பு இல்லை.
மீனராசி அன்பர்களே!
உணவு கட்டுப்பாட்டுடன் உடற்பயிற்சியும் செய்து உடலை பிட்டாக வைத்திடுங்கள். பிசினஸ் கிரெடிட் கேட்டு அணுகுபவர்களை வெறுமனெ புறக்கணியுங்கள். மாற்றம் ஏற்படுத்தக் கூடிய மற்றும் முக்கியமானவர்களுடன் நட்பை மேம்படுத்த சமூக நிகழ்ச்சிகள் சரியான வாய்ப்பாக இருக்கும். உங்கள் அன்புக்கு உரியவரிடம் இருந்து அழைப்பு வரும் என்பதால் அருமையான நாள். தொழில் பிரச்சினைகளை சிரமம் இல்லாமல் தீர்க்க உங்களின் அனுபவத்தைப் பயன்படுத்துங்கள். பயணம் பலன் தரும், ஆனால் செலவுமிக்கதாக இருக்கும். நீங்கள் இன்று எடுக்கும் ஒரு சிறிய முயற்சி உங்கள் திருமண வாழ்வை மேலும் அழகாக்கும்.