பிப்.,14ல், கோவையை குலுக்கிய பயங்கரம்!

 பிப்.,14ல், கோவையை குலுக்கிய பயங்கரம்!
உலகம் முழுவதும் மகிழ்வுடன் காதலர் தினமாக கொண்டாடும் பிப்.,14., கோவை மக்களை பொறுத்தவரை பல ஆண்டுகளாக கறுப்பு தினமாகவே இருந்து வருகிறது. 1998 ம் ஆண்டு பிப்.,14 அன்று பல இடங்களில் அடுத்தடுத்து நடந்த தொடர் குண்டுவெடிப்புகள் கோவை நகரையே உலுக்கியது. இந்த பயங்கர தாக்குதலில் 58 பேர் உயிரிழந்தனர். 252 பேர் படுகாயம் அடைந்தனர். கோடிக்கணக்கில் பொருட் சேதம் ஏற்பட்டது. இந்த தொடர் கொண்டு வெடிப்பு, உலகத்தின் கவனத்தை கோவை பக்கம் திருப்பியது.

அப்போதைய லோக்சபா தேர்தல் பிரசாரத்திற்காக பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான அத்வானி கோவை வருவதாக இருந்தது. ஆர்.எஸ்.புரத்தில் பிரசார பொதுக் கூட்டத்தில் பேசுவதற்காக வந்த அத்வானியை குறிவைத்து தாக்கவும் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் விமானம் அரை மணி நேரம் தாமதமாக வந்ததால் அத்வானி உயிர் தப்பினார்.

1998 முதல் இன்று வரை பிப்.,14 என்பது காதலர் தினமாக மட்டுமல்லாது, கோவை மக்களால் மறக்க முடியாத துக்க தினமாகவும் அனுசரிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் உயிரிழக்க காரணமான பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு இந்திய அளவிலும் பிப்.,14 கறுப்பு தினமாகவும் பார்க்கப்படுகிறது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...