மத்திய அரசின் பொருளாதார கொள்கையை கண்டித்து போராட்டம்
மத்திய அரசின் பொருளாதார கொள்கையை கண்டித்து இன்று நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம்: அரசு மற்றும் தனியார் தொழிற்சங்கங்கள் பங்கேற்பு.மத்திய அரசின் பொருளாதார கொள்கையை கண்டித்தும், பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட எதிர்கட்சிகள் சார்பாக வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அதன்படி, இன்று வேலை நிறுத்தம் மற்றும் மறியல், ஆர்ப்பாட்டம் போன்றவை நடைபெறுகின்றன. இதில் அரசு ஊழியர் சங்கம் மற்றும் தனியார் தொழிற்சங்கங்களை சேர்ந்த 20 கோடி பேர் வரை பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.இதனால், அரசு அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களின் இயக்கமும் பாதிக்கப்படலாம் என தெரிகிறது. நாடு தழுவிய வேலை நிறுத்தத்தால் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான பணிகள் பாதிக்கப்படும்.
இதனிடையே, வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்கள் பின்விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்று மத்திய அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனிடையே, வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்கள் பின்விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்று மத்திய அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.