வரலாற்றில் இன்று – 07.01.2020 – சடாகோ சசாகி

 வரலாற்றில் இன்று – 07.01.2020 – சடாகோ சசாகி
ஜப்பானிய சிறுமி சடாகோ சசாகி 1943ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி ஜப்பானில் பிறந்தார்.
1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி ஹிரோசிமாவில் அணுகுண்டு வசீ ப்பட்டதால், குருதிப்புற்று நோயால் பாதிக்கப்பட்டாள்.
சசாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் போது அவளுடைய தோழி ஒரு தங்கநிற தாளினை சதுரமாக வெட்டி, அதை காகித கொக்காக மடித்து, யாரேனும் ஆயிரம் கொக்குகளை மடித்தால் அவரின் வேண்டுதலை கடவுள் நிறைவேற்றுவார் என்னும் பண்டைய ஜப்பானிய கதையின் நம்பிக்கையை கூறினாள்.
அதற்கேற்ப அவளும் 1000 கொக்குகளை மடிக்கத் தொடங்கினாள். இறப்பதற்கு முன்புவரை 644 கொக்குகளை மடித்திருந்தாள், பின் எஞ்சிய கொக்குகள் அவளின் நண்பர்களால் மடிக்கப்பட்டு அவளின் உடலுடன் சேர்த்து புதைக்கப்பட்டது.
ஆயிரம் கொக்குகளின் கதைக்காக இன்றுவரை அறியப்படும் சசாகி தன்னுடைய 12வது வயதில், 1955ஆம் ஆண்டு மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்

  • 1610ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி கலீலியோ கலிலி ஜூபிட்டர் கோளின் துணைக்கோள்களை கண்டறிந்தார்.
  • 1938ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி அபிநய சரஸ்வதி என அழைக்கப்படும் சரோஜாதேவி பெங்கள10ரில் பிறந்தார்.
  • 1968ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி நாசாவின் சேர்வயர் 7 விண்கலம் ஏவப்பட்டது.
  • 1925ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி சைவத்துக்கும், தமிழுக்கும் பெரும் தொண்டாற்றிய தங்கம்மா அப்பாக்குட்டி பிறந்தார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...