இன்றைய முக்கிய செய்திகள்
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு முடிவுகள் வெளியீடு. 181 பணியிடங்களுக்கு இன்று காலை நடைபெற்ற நேர்முகத்தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது டி.என்.பி.எஸ்.சி.
அனுமதியில்லாத கட்டடங்களை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கால அவகாசம் நீட்டிப்பு. கட்டடங்களை வரன்முறைப்படுத்த கால அவகாசம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு – தமிழக அரசு.
கடலூர், தூத்துக்குடி, நாகை, தேனி, மதுரை மாவட்டங்களில் உள்ள 9 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு – மாநில தேர்தல் ஆணையம். கடலூரில் விலங்கல்பட்டு ஊராட்சியில் 242வது வாக்குச்சாவடி, தூத்துக்குடி நாலுமாவடியில் 67, 68, 69, 70, 71வது வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு. நாகை தாணிக்கோட்டகத்தில் 119வது வாக்குச்சாவடி, தேனி உப்புக்கோட்டையில் 52வது வாக்குச்சாவடி, மதுரை வஞ்சிநகரத்தில் 91வது வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு.
ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை வெளியிட தடை விதிக்க கோரி சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு. நகர்ப்புறங்களில் தேர்தல் நடத்தாமல் ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது என முறையீடு. இது தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்திருந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு.
2024-25ம் ஆண்டில், 5 ட்ரில்லியன் என்ற பொருளாதார இலக்கை இந்தியா எட்டிவிடும். ரூ.102 கோடிக்கு உள்கட்டமைப்பு திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன- மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
ஏர் இந்தியா நிறுவனம் விரைவில் தனியார் மயமாக்கப்படும்.காலக்கெடுவுக்கு நாங்கள் அடிமையாக விரும்பவில்லை; ஏர் இந்தியாவை தனியாராக்க தீவிரமாக முயற்சிக்கிறோம்.- விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி.
“அரசு ஊழியர்கள் பரிசு பொருட்கள் வாங்கக் கூடாது” அனைத்து துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்புமாறு கோரி வழக்கு. தமிழக அரசு 2 வாரங்களில் பதிலளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு. அரசு ஊழியர் நடத்தை விதிகளை அமல்படுத்துமாறு மனுவில் கோரிக்கை.