காப்புரிமை மீறியதாக ஆப்பிள் நிறுவனம் மீது வழக்கு
நியூயார்க்: அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் ‘ஆப்பிள்’ நிறுவனம் மீது காப்புரிமை மீறியதாக வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.அவர் தனது மனுவில், ‘ஆப்பிள் நிறுவனம் தங்களது புதிய தயாரிப்பான”ஆப்பிள் 3 வாட்சில்’ ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் ஐக் (ஒழுங்கற்ற இதயத்துடிப்பை) கண்டறியப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுளளனர்.
அதன்படி தனது காப்புரிமையை மீறியுள்ளனர்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.நியூயார்க் பல்கலைக்கழக இருதயநோய் நிபுணர் டாக்டர் ஜோசப் வீசலுக்கு, மார்ச் 28, 2006 அன்று மாறுபட்ட இதயத்துடிப்பை கண்டறிவதற்கான முறை மற்றும் அதை கண்டறியும் எந்திரத்திற்கான” காப்புரிமை வழங்கப்பட்டது, ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 வெளியானதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20, 2017 அன்று நிறுவனத்திடம் தனது காப்புரிமை குறித்து அறிவித்ததாக டாக்டர் வீசல் கூறினார்.
அவர் விரிவான விளக்கப்படங்களுடன் தனது உரிமை மீறப் பட்டுள்ளதை எடுத்துக்கூறிய பிறகும், அந்நிறுவனம் அவருடன் பேச்சுவார்த்தை நடத்த மறுத்துவிட்டதாக கூறியுள்ளார்.ஒரு நபர் உண்மையிலேயே ஒழுங்கற்ற இதயத்துடிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து ஆப்பிள் வாட்ச் ஒரு இறுதி முடிவை வழங்கவில்லை என்றாலும், இதனால் ரத்தம் உறைதல், மூளைப்பக்கவாதம் போன்ற விளைவுகள் ஏற்படும்.
எனவே, ஆப்பிள் வாட்ச் மூலம் ஒருவருக்கு இப்பிரச்னை இருப்பது தெரிந்தால் மருத்துவரை அனுகும் படி நோயாளிக்கு தகவல் கிடைக்கும்.ஈ.சி.ஜி., போன்று செயல்படும் இக்கருவி மூலம் நோயாளி வாட்சில் உள்ள டிஜிட்டல் கிரவுனை விரலால் பிடித்ததும் சமிக்ஞைகள் மூலம் இதயத்துடிப்பு அளவிடப்படுகிறது. 30 விநாடிக்குள் நோயாளிக்கு இதயத்துடிப்பு குறித்த தகவல்கள் இதன் மூலம் கிடைத்து விடும். இருப்பினும் வளர்ச்சியடைந்த நாடுகளில் ஒரு சதவீதத்தினருக்கு மட்டுமே ஒழுங்கற்ற இதயத்துடிப்பு பிரச்னை இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.