சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன் எது?

 சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன் எது?
இந்த ஆண்டு வெளியான சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன் எது? 
Best Budget Smartphones In India in 2019 under Rs. 11,000 :  இந்த ஆண்டில் வெளியான சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் பற்றிய கட்டுரை இது. 
2019ம் ஆண்டில் ரூ.6000 முதல் ரூ.11 ஆயிரம் வரை விற்பனைக்கு வைக்கப்பட்ட போன்கள் குறித்து நீங்கள் இங்கே அறிந்து கொள்ளலாம். 
ரியல்மீ 3 – Realme 3:-  நிறைய சிறப்பம்சங்களுடன் இந்த ஆண்டு வெளியான பட்ஜெட் போன்களில் மிகவும் முக்கியமான ஸ்மார்ட்போன் இதுவாகும். டூயல் ரியல் கேமரா செட்-அப் மற்றும் ஹேலியோவின் பி70 ப்ரோசசர் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டது. இதன் விலை ரூ. 10 ஆயிரத்திற்கும் குறைவு தான்.

ரியல்மீ 3ஐ – Realme 3:- i
ரியல்மீ 3 ஸ்மார்ட்போனின் குறைந்த பட்ஜெட் வெர்ஷனாக அறிமுகமானது இந்த ஸ்மார்ட்போன். இது ரியல்மீ 3 மற்றும் ரியல்மீ சி2-வுக்கு இடையிலான சிறப்பம்சங்கள் மற்றும் வடிவமைப்புடன் வெளியானது. டைமன்ட் ஷேப்புடன் வெளியான சிவப்பு கலர் ஸ்மார்ட்போனில் மயங்காதவர்கள் யாரும் இல்லை என்று தான் கூற வேண்டும். இதன் விலை ரூ. 7999 ஆகும்.

சாம்சங் கேலக்ஸி எம்30 – Samsung Galaxy M30:- 
இந்த ஸ்மார்ட்போன் எம் சீரியஸில் வெளியான மிகவும் காஸ்ட்லியான போன்களில் ஒன்றாகும். ஃபுல் எச்.டி. திரை மற்றும் சூப்பர் ஏம்.எம்.ஓ.எல்.ஈ.டி டிஸ்பிளே, 5,000mAh பேட்டரி, மூன்று பின்பக்க கேமரா என அசத்தலாக வெளியானது.

ரெட்மி நோட் 8 – Redmi Note 8:- 
ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் என்றால் நாங்கள் தான் என்பதை மறுபடியும் நிரூபித்தது ரெட்மி நிறுவனம். 48 எம்.பி. குவாட் ரியர் கேமரா, ஸ்நாப்ட்ராகன் 665 ப்ரோசசர் என சிறப்பம்சங்களை கொண்டு ரூ. 9999க்கு வெளியானது இந்த ஸ்மார்ட்போன்.

விவோ யூ10 – Vivo U10:- 
இந்த ஆண்டில் வெளியான விவோவின் ஆன்லைன் எக்ஸ்க்ளூசிவ் யூ சீரிஸ் ஸ்மார்ட்போன் இதுவாகும். ப்ரீமியம் வடிவமைப்பு மற்றும் சிறப்பம்சங்களுடன் வெளியான இந்த  ஸ்மார்ட்போனின் விலை ரூ. 8,990 ஆகும். மூன்று பின்பக்க கேமராக்களையும், ஸ்நாப்ட்ராகன் 665 ப்ரோசசரையும் இந்த ஸ்மார்ட்போன் பெற்றுள்ளது. 5,000mAh பேட்டரி இதன் ஹைலைட் ஆகும்

ரெட்மி 7S – Redmi 7S:- 
8 எம்.பி. கேமராவுடன் வெளியான இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலையே ரூ.10 ஆயிரத்திற்கும் குறைவாகவே தான் இருந்தது. இந்த ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட வெர்சனாகும். ரெட்மி நோட் 7, 12 எம்.பி கேமராவுடன் வெளியான ஸ்மார்ட்போன் என்பது குறிப்பிடத்தக்கது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...