ஏன் இந்த சட்டம்?” – கமல் ஹாசன்

 ஏன் இந்த சட்டம்?” – கமல் ஹாசன்
“பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை; பொருளாதாரம் சரியில்லை; பிறகு ஏன் இந்த சட்டம்?”
மாணவனுக்கு பதிலில்லை, விவசாயிக்கு வாழ வழியில்லை; பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை; பொருளாதாரம் சரியில்லை. குற்றங்கள் கட்டுக்குள் இல்லை; வேலைவாய்ப்பு இல்லவே இல்லை எதை சாதிக்க இத்தனை அவசரமாக இந்த சட்டம் என்ற கேள்விக்கு நேர்மையான பதிலும் இல்லை என நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் ஹாசன் கேள்வி எழுப்புயுள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த கமல் ஹாசன், டெல்லி ஜாமியாவில் நடைபெற்ற வன்முறை குறித்தும், இலங்கை தமிழ்கள் குடியுரிமை திருத்த சட்டத்தில் இடம்பெறாதது குறித்தும் அவர் பேசினார்.”முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின் போது தப்பித்து தமிழகத்தில் தஞ்சம் அடைந்தவர்களின் நிலை இனி என்ன?” என்று அவர் வினவினார்.

“கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட்டுவிட்டு கேள்வி கேட்பவர்களை ஒடுக்குவதுதான் டெல்லியிலும், அசாமிலும், அலிகரிலும் நடைபெறுகிற அரச பயங்கரவாதம்.” “இப்போது 
அரசியலில் இருப்பவர்களும் இளமைக் காலத்தில் போராட்டங்களில் ஈடுபட்டுவர்கள்தாம். இளைஞர்களுக்கு அரசியல் விழிப்புணர்வு தேவை. அவர்கள் அரசியல்வாதிகளாக வேண்டும்,” “மாணவனுக்கு பதிலில்லை, விவசாயிக்கு வாழ வழியில்லை; பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை; பொருளாதாரம் சரியில்லை. குற்றங்கள் கட்டுக்குள் இல்லை; வேலைவாய்ப்பு இல்லவே இல்லை, எதை சாதிக்க இத்தனை அவசரமாக இந்த சட்டம் என்ற கேள்விக்கு நேர்மையான பதிலும் இல்லை.” “இந்த அரசு செய்யும் வேலைகளையெல்லாம் உலக வரலாறு முன்பே கண்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் மக்கள் நீதி மய்யத்தின் அடுத்த கட்டம் என்ன என்று கேட்டபோது, என்ஆர்சி வரும்போது நாங்கள் களத்தில் இறங்கி போராடுவோம் என்று கமல் ஹாசன் தெரிவித்தார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...