இப்போது கோடீஸ்வரர்: வெங்காயத்தால் வாழ்க்கை மாறியது எப்படி?
அப்போது கடனாளி, இப்போது கோடீஸ்வரர்: வெங்காயத்தால் இவரது வாழ்க்கை மாறியது எப்படி?
இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம். தி டைம்ஸ் ஆஃப் இந்தியா – வெங்காயத்தால் மாறிய வாழ்க்கை சமீப நாட்களில் வெங்காய விலை அனைவரையும் கவலைக்குள்ளாக்கிய நிலையில், விவசாயி ஒருவரை கோடீஸ்வரராக்கியுள்ளது அதே வெங்காயம் என்கிறது தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் செய்தி. 42 வயதாகும் அந்த விவசாயி கடன் வாங்கி தனது நிலத்தில் வெங்காயம் பயிரிட்டுள்ளார்.
15லட்சம் முதலீடு செய்து ஏதோ 5-10 லட்சம்
லாபம் பார்த்தால் பெரிய விஷயம் என்று முடிவு செய்து வெங்காயத்தை பயிர் செய்த அந்த விவசாயிக்கு அடித்தது ஜாக்பாட். அவர் நிலத்தில் விளைந்துள்ள 240 டன் வெங்காயம் கிலோ 200 ரூபாய் வரை விற்பனையாகிறது. பெங்களூருவில் இருந்து 200கிமீ தொலைவில் உள்ள சித்ரதுர்கா என்ற அந்த கிராமத்தில் வசிக்கும் மல்லிகார்ஜுனா என்ற அந்த விவசாயியை தற்போது வியப்புடன் பார்த்து வருகின்றனர் அந்த கிராம மக்கள். கடந்த காலங்களில் அதிகம் நஷ்டத்தையே சந்தித்த தான், மேலும் ஐந்து லட்சம் கடன் வாங்கியே தனது நிலத்தில் பயிரிட்டதாகத் தெரிவிக்கிறார் அந்த விவசாயி.