இன்றைய ராசி பலன்கள் – 25.11.2019 – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

இன்றைய ராசி பலன்கள் 25.11.2019
—————————————
மேஷம் :
வெளிவட்டாரங்களில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும்.வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம். சாதுர்யமான செயல்களின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். உடல்சோர்வு அவ்வப்போது ஏற்பட்டு மறையும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
அஸ்வினி : மரியாதை அதிகரிக்கும்.
பரணி : மாற்றமான நாள்.
கிருத்திகை : வெற்றி கிடைக்கும்.
—————————————
ரிஷபம் :
கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளின் மூலம் பெருமை உண்டாகும். தொழில் முன்னேற்றத்திற்கான செயல்பாடுகளை மேற்கொள்வீர்கள். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளின் மூலம் புதுவிதமான அனுபவங்கள் ஏற்படும் புத்துணர்ச்சியுடன் செயல்பட்டாலும் சில நேரங்களில் காலதாமதம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : ஒற்றுமை அதிகரிக்கும்.
ரோகிணி : முன்னேற்றமான நாள்.
மிருகசீரிஷம் : காலதாமதம் உண்டாகும்.
—————————————
மிதுனம் :
வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்விற்கான வாய்ப்புகள் உண்டாகும். சாமர்த்தியமான பேச்சுக்களின் மூலம் எண்ணிய செயல்களை செய்து முடிப்பீர்கள். நண்பர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் அகலும். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
மிருகசீரிஷம் : வாய்ப்புகள் உண்டாகும்.
திருவாதிரை : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
புனர்பூசம் : அறிமுகம் கிடைக்கும்.
—————————————
கடகம் :
மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். மற்றவர்களை எதிர்பார்த்து செயல்படுவதை தவிர்க்கவும். மனதிற்கு விரும்பியவர்களிடம் அனுசரித்து செல்லவும். எதிர்பார்த்த இடமாற்றங்கள் சாதகமாக அமையும். ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். தந்தையிடம் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
புனர்பூசம் : முன்னேற்றம் உண்டாகும்.
பூசம் : அனுசரித்து செல்லவும்.
ஆயில்யம் : வாதங்களை தவிர்க்கவும்.
—————————————
சிம்மம் :
வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் புத்திக்கூர்மை வெளிப்படும். வெளியூர் தொடர்பான வேலைவாய்ப்புகளில் புதுவிதமான அனுபவங்கள் கிடைக்கும். புதிய முயற்சிகள் சில தடைகளுக்குப்பின் சாதகமாக அமையும். கலை சார்ந்த துறைகளில் கீர்த்தி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
மகம் : புத்திக்கூர்மை வெளிப்படும்.
பூரம் : சாதகமான நாள்.
உத்திரம் : கீர்த்தி உண்டாகும்.
—————————————
கன்னி :
தாய்வழி உறவினர்களின் மூலம் சாதகமான சூழல் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான எண்ணங்களும், முயற்சிகளும் மேம்படும். உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் பயணங்களை மேற்கொண்டு மனம் மகிழ்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
உத்திரம் : எண்ணங்கள் மேம்படும்.
அஸ்தம் : வாய்ப்புகள் உண்டாகும்.
சித்திரை : அறிமுகம் கிடைக்கும்.
—————————————
துலாம் :
உத்தியோகம் தொடர்பான முயற்சிகளில் எண்ணிய வெற்றி கிடைக்கும். மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். இளைய சகோதரர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் நன்மை உண்டாகும். உடல் தோற்றப்பொலிவு பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனை சார்ந்த விவகாரங்களில் சற்று நிதானத்துடன் செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
சித்திரை : வெற்றி கிடைக்கும்.
சுவாதி : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
விசாகம் : சிந்தனைகள் மேம்படும்.
—————————————
விருச்சிகம் :
குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். பார்வை தொடர்பான இன்னல்கள் நீங்கி சுபிட்சம் ஏற்படும். பேச்சுத்திறமைகளின் மூலம் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். எதிர்காலம் சார்ந்த புதிய இலக்கை நிர்ணயம் செய்து அதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
விசாகம் : கலகலப்பான நாள்.
அனுஷம் : சுபிட்சம் உண்டாகும்.
கேட்டை : லட்சியம் பிறக்கும்.
—————————————
தனுசு :
சிந்தனைகளின் போக்கில் மாற்றங்கள் உண்டாகும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். உறவினர்களின் மத்தியில் செல்வாக்கு மேம்படும். பெருந்தன்மையான குணத்தினால் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள் புதிய ஆடைகளை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மூலம் : புத்துணர்ச்சி அடைவீர்கள்.
பூராடம் : செல்வாக்கு மேம்படும்.
உத்திராடம் : பாராட்டப்படுவீர்கள்.
—————————————
மகரம் :
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திருப்திகரமான சூழல் அமையும். ஆபரணங்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். சவாலான செயல்களில் ஈடுபட்டு செய்து முடிப்பீர்கள். செய்யும் பணிகளில் மேன்மைக்கான முயற்சிகள் மேம்படும். கடன் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திராடம் : திருப்திகரமான நாள்.
திருவோணம் : முயற்சிகள் மேம்படும்.
அவிட்டம் : தீர்வு கிடைக்கும்.
—————————————
கும்பம் :
தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். நிர்வாகம் சார்ந்த புதிய முடிவுகளை எடுப்பீர்கள். நண்பர்களின் மூலம் புதிய வாய்ப்புகள் உண்டாகும். மனைவியின் உடல் ஆரோக்கியம் மேம்படும். பொதுநலத்திற்கான செயல்பாடுகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அவிட்டம் : பணவரவு கிடைக்கும்.
சதயம் : நம்பிக்கை மேம்படும்.
பூரட்டாதி : வாய்ப்புகள் உண்டாகும்.
—————————————
மீனம் :
அக்கம்-பக்கத்தினர்களிடம் பழகும்போது கவனம் தேவை. முக்கிய முடிவுகளில் நிதானம் வேண்டும். தேவையற்ற சிந்தனைகளினால் செயல்பாடுகளில் சோர்வு உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் சிறு தடைகளுக்கு பின் கிடைக்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும். உறவினர்கள் இடையே வீண்விவாதங்கள் தோன்றி மறையும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
பூரட்டாதி : நிதானம் வேண்டும்.
உத்திரட்டாதி : சோர்வு உண்டாகும்.
ரேவதி : அனுசரித்து செல்லவும்.
—————————————
   – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...