கோபித்துக் கொண்டு போன மனைவியை குடும்பத்தோடு எரித்த கணவர்; 6 பேர் கவலைக்கிடம்

 கோபித்துக் கொண்டு போன மனைவியை குடும்பத்தோடு எரித்த கணவர்; 6 பேர் கவலைக்கிடம்

கோபித்துக் கொண்டு போன மனைவியை குடும்பத்தோடு எரித்த கணவர்; 6 பேர் கவலைக்கிடம்.

             சித்திப்பெட்: கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்குச் சென்ற மனைவி மற்றும் அவரது குடும்பத்தினரை கணவர், தீயிட்டு எரித்தச் சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் சித்திப்பெட் மாவட்டம் கம்மம்பள்ளி கிராமத்தில் 40 வயது நபர், தனது மனைவி, குழந்தைகள், மாமனார், மாமியார் மீது தின்னர் ஊற்றி தீவைத்ததில், 6 பேர் கவலைக்கிடமான வகையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

படுகாயங்களுடன் ஹைதராபாத் அரசு உதவி பெறும் மருத்துவமனையில் ஆறு பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

   இன்று அதிகாலை நடந்த இந்த பயங்கர சம்பவம் பற்றி கூறப்படுவதாவது, லஷ்மிராஜம் (40) – விமலா இருவருக்கும் 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ராஜம் தொடர்ந்து வரதட்சணை கேட்டு மனைவியை துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கடந்த 10 ஆண்டுகளாக இருவரும் பிரிந்துவாழ்ந்து வந்தனர்.

    இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு விசாரணை நீதிமன்றம், இருவருக்கும் கவுன்சிலிங் வழங்கி சேர்ந்து வாழுமாறு கூறியதை அடுத்து இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இருவருக்கும் 12 வயதில் மகளும், 8 வயதில் மகனும் இருக்கிறார்கள்.

   இந்த நிலையில், இரு நாட்களுக்கு முன்பு தம்பதிக்கு இடையே மீண்டும் பிரச்னை ஏற்பட்டு, விமலா பிள்ளைகளுடன் தனது சகோதரன் வீட்டுக்குச் சென்றுவிட்டார். 

    கடந்த வியாழக்கிழமை இரவு லஷ்மி ராஜம், விமலாவின் சகோதரர் வீட்டுக்குச் சென்று அவர்களது வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றுள்ளார். அங்கே உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது தின்னர் ஆயிலை ஊற்றி தீவைத்துள்ளார். வீட்டில் இருந்து விமலா உள்ளிட்ட ஆறு பேரும் தீயில் சிக்கி படுகாயம் அடைந்தனர்.

    உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆறு பேரும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

குற்றவாளி ராஜத்தை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.
 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...