பிடிபட்டது காட்டு யானை அரிசி ராஜா
பிடிபட்டது காட்டு யானை அரிசி ராஜா
கோவையை அடுத்துள்ள பொள்ளாச்சி பகுதியில் பல மாதங்களாக சுற்றித்திரிந்த அரிசி ராஜா என்ற காட்டுயானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. அர்த்தனாரி பாளையம் பகுதியில் 4 நாட்களாக முகாமிட்டு இருந்த வனத்துறையினர், அரிசி ராஜாவை 2 கும்கி யானைகள் உதவியுடன் பிடித்தனர். மயக்க ஊசி செலுத்தப்பட்ட பிறகு சலீம், கபில்தேவ் ஆகிய காட்டு யானைகள் அரிசி ராஜாவின் கழுத்தில் கயிறுகளை கட்டி அதனை கட்டுப்படுத்தியது.
பருத்தியூரில் பிடிபட்ட காட்டுயானை அரிசி ராஜா அரைமணி நேர போராட்டத்திற்கு பிறகு கும்கி யானை கலீம் உதவியுடன் லாரியில் ஏற்றப்பட்டது.
பொள்ளாச்சி அருகே டாப்சிலிப் வனப்பகுதியில் உள்ள வரகளியாறு முகாமிற்கு அரிசி ராஜா யானை கொண்டு செல்லபடவுள்ளது.