பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் நலமுடன் இருக்கிறார்

பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் நலமுடன் இருப்பதாக அவரது குடும்பத்தார் தகவல் அளித்துள்ளனர்.

90 வயதான பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் இன்று அதிகாலை மூச்சுத் திணறல் பிரச்னையின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நெஞ்சுப் பகுதியில் ஏற்பட்ட தொற்றின் காரணமாக இந்தப் பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் லதா மங்கேஷ்கரின் உறவினரான பாடகி ரச்சனா ஷா வெளியிட்டுள்ள விளக்கத்தில், “லதா மங்கேஷ்கர் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தற்போது நல்ல உடல்நலத்தோடு உள்ளார்.

தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு வருவார். அவரது வயதின் காரணமாக அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம். மற்றபடி அவர் நலமுடனே உள்ளார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!