மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த இடதுசாரி நாட்டுப்புறக் கலைஞர் தோழர். பத்ரப்பனுக்கு பத்மஶ்ரீ விருது

மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த இடதுசாரி நாட்டுப்புறக் கலைஞர் தோழர். பத்ரப்பனுக்கு பத்மஶ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது..

தோழருக்கு வாழ்த்துகள்

தோழர் பத்ரப்பன்

ஐம்பதாண்டு காலமாக

கலை இலக்கியப்பெருமன்ற மேடைகளிலும், தொழிற்சங்க மேடைகளிலும் அறியப்பட்ட கலைஞர், நாட்டுப்புறக்கலைகளோடு,

தோழர் ஜீவா போன்றவர்கள் எழுதிய உழைக்கும் மக்களுக்கான பாடல்களையும் பாடும் கலைஞர்

வள்ளிகும்மி பாடகருக்கு பத்மஶ்ரீ என்று செய்தி வெளியானதால்,

அவர் குறிப்பிட்ட சாதியைச் சார்ந்தவர், அதனால் விருது வழங்கப்பட்டது என்பதான தவறான புரிதல் ஏற்பட்டுள்ளதாக அறிகிறேன்

தோழர் உழைக்கும் மக்களின் பாடகர்..இடதுசாரிக்கலைஞர், சாதிச்சங்கத்தின் பாடகரன்று‌.. குறிப்பாக வள்ளிகும்மியால் குறிப்பிடப்படும் சாதியில் பிறந்தவரன்று..

வள்ளிகும்மி என்னும் வடிவமும் குறிப்பிட்ட ஒரு சாதிக்கு சொந்தமானதன்று

தோழர் பத்ரப்பன் குறித்து

தோழர் தா.பாண்டியன்,

கவிஞர் புவியரசு போன்றோரின் கருத்துரையோடு வெளியான ஆவணப்படம் வெளியாகி உள்ளது.

-கவிதா பாரதி

May be an image of 1 person and temple

All reactions:

33

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!