சீமான் கட்சியினர் மாற வேண்டும்

 சீமான் கட்சியினர் மாற வேண்டும்
சீமான் கட்சி மாற வேண்டும்


 
 தமிழக இளைஞர்கள் மத்தியில்  எதிர்பார்ப்பை உருவாக்கிய தலைவராக சீமான் மாறினார் என்பது நிகழ் கால பதிவு .ஆனால் அது தொடருமா என்றால் கேள்விக்குறிதான் முன் நிற்கிறது ….
       தமிழர்களை பெரிதும் பாதிக்கும் பலவிடயங்களை குறித்து சீமான் முன்னெடுக்கும் வாதங்கள் அவரை சிறப்புற காட்டினாலும் ,நாம் தமிழர் இயக்கத்தில் சீமானை தவிர வேறு எந்த தலைவர்களையும் முன்னிலைப்படுத்த அக்கட்சி விரும்பவில்லையோ என்ற தோற்றத்தை உருவாக்கி உள்ளது .இரண்டாம் கட்ட தலைவர்கள் இன்றி தேர்தல் பிரசாத்தை அக்கட்சி தடுமாறியது கண் கூடாக தெரிந்தது .
   காங்கிரஸ் கட்சியை விமர்சிக்கும் அளவிற்கு ,பாரதீய ஜனதா கட்சியை நாம் தமிழர் இயக்கம் விமர்சிக்கவில்லை ,பாரதிய ஜனதாவின் கிளை கட்சியாக நாம் தமிழர் கட்சி உருவாகிவிட்டது  என்ற குற்றசாட்டு  மேலோங்கிய  நிலையில் ,நடந்த இரண்டு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி ,எந்த இடத்திலும் மோடிக்கு எதிரான வாதத்தை முன் வைக்கவில்லை.மதவாதியான கட்சியின் நிலைப்பாட்டை நாம் தமிழர் கட்சியும்  ஏற்று கொண்டுவிட்டதோ என்ற ஐயம் நடுநிலை மக்களிடம்  ஏற்பட்டு விட்டது .
    சீமான் தமிழர்களின் நலனுக்கான கட்சியாக நாம் தமிழர் கட்சியை அடையாளபடுத்த முயன்றாலும் ,எங்கோ  சில இடங்களில் அது தவறான பாதையில் பயணத்தை கொண்டு உள்ளதோ என்ற சந்தேகம்  பதிவாக்கி கொண்டே இருக்கிறது ..
    தமிழர்கள் தன்மானத்தோடு வாழ வேண்டும் என்றால் ,தமிழை நேசிக்கும் உண்மையான தலைமை தமிழகத்திற்கு தேவை .தேவை அறிந்து  மக்கள் சீமானை தேடினார்கள் ,தேடுகிறார்கள் .ஆனால்  தமிழன் மத்திய அரசால் வஞ்சிக்கப்பட்ட பல இடங்களில் சீமான் அமைதி காத்து வியப்பான விடயமாக உள்ளது .
      நடிகர் ராதாரவி தெலுங்கரை புறக்கணித்து விட்டு ,தமிழகத்தில் யாரும் ஆளமுடியாது.தமிழகத்தின் வளர்ச்சிக்கு தெலுங்கர்கள்தான் காரணம் என்ற கருத்தை முன்வைத்தபோது .ஒரு சாடலோடு நிறுத்திக் கொண்ட சீமான்,அதற்கு எதிராக வினை ஆற்றாமல் மௌனம் காத்ததுகூட  இன்றுவரை விளங்கா மர்மமாக உள்ளது .
   சீமானின்  பல கொள்கைகள் சிறப்பானதாக இருந்தாலும் ,அவைகள் மேடைப்பேச்சோடு நின்றுவிடுகின்றன .நாம் தமிழர் தொண்டர்கள் கூட அதை கடைபிடிப்பது இல்லை .புதிய ரத்தங்கள் பாச்சப்பாடாத  எந்த இயக்கும் வளர்ச்சியை கண்டது இல்லை .சீமானின்  நாம் தமிழ தம்பிமார்கள்  ,புதியவர்களை கட்சியில் சேர்க்க அஞ்சிக் கொண்டு இருக்கிறார்கள் .வருகின்றவர்கள் வளர்ச்சியடைந்து ,தங்கள் முக்கியத்துவம் குறைந்து விடுமோ  என்ற அச்சத்தில் புதியவர்கள் பக்கம் எட்டிக்கூட பார்ப்பது இல்லை .
    ஒரு இயக்கம் வளர்ச்சி பாதையில் தொடர வேண்டும் என்றால் ,பொது நிகழ்வுகளில் அக்கட்சியின் தலைமை கலந்து கொள்ள வேண்டும் .சீமான் விருப்பப்பட்டாலும் அவருடைய தம்பிமார்கள் பொது நிகழ்வுகளில் சீமான் கலந்து கொள்ளாமல் பார்த்துக் கொள்கிறார்கள் .
   சீமான் என்ற கோப தமிழன்  இந்த மண்ணை  ஆள வேண்டும் என பெரும்பாலான இளைஞர்கள் விரும்புகிறார்கள் .அதற்கான களத்தையும் உருவாக்க துடிக்கிறார்கள் .ஆனால் சீமான்தான் புதியவர்களுக்கு வாசலை திறந்து தரவேண்டும் .அதுப்போல தமிழனுக்கு எதிரான விடயங்களில் முன்பு போல சீமான் தீரம் கட்ட வேண்டும் .தமிழ் நாட்டில் ஒரு தலைவனாவது தமிழனுக்காகஇருக்கட்டும் என  மக்கள் விரும்புகிறார்கள் ..
இன்பா 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...