மத்திய அமைச்சரவை இந்தியாவில் கூடுகிறது …மோடி இந்தியாவில் இருப்பாராம்

 மத்திய அமைச்சரவை இந்தியாவில் கூடுகிறது …மோடி இந்தியாவில் இருப்பாராம்

டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கூடவுள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறவுள்ளது


நாடாளுமன்றம் நடைபெறும் தேதிகளை நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக்குழு கூடி முடிவு செய்யும். அதன்படி, நடப்பாண்டுக்கான குளிர்கால கூட்டத் தொடரை நடத்துவதற்கான தேதியை இறுதி செய்வதற்காக, நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை குழுக் கூட்டம் அண்மையில் டெல்லியில் நடைபெற்றது.


பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற அந்த கூட்டத்தில் குளிர்கால கூட்டத் தொடரை நவம்பர் 18ஆம் தேதி தொடங்கி ஒரு மாதத்திற்கு நடத்தலாம் என முடிவெடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.


இதையடுத்து, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வருகிற நவம்பர் 18ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.

மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த இ-சிகரெட்டுகளுக்கு தடை விதிப்பு, உள்நாட்டு கம்பெனிகளுக்கான கார்ப்பரேட் வரிக்குறைப்பு ஆகிய இரண்டு அவசர சட்டங்களை சட்டமாக மாற்றும் முயற்சியில் மத்திய அரசு இந்த கூட்டத் தொடரில் ஈடுபடும் என தெரிகிறது.

அத்துடன், பொருளாதார மந்தநிலையை சரி கட்ட சில அறிவிப்புகளை வெளியிடுவதுடன், நிலுவையில் உள்ள மசோதாக்களை நிறைவேற்ற இந்த கூட்டத்தொடரின் போது மத்திய முனைப்பு காட்டும் என கூறப்படுகிறது.

பிரதமர் மோடியுடன் சந்திப்பு: என்ன பேசினோம்.?மனம் திறந்த அபிஜித் பானர்ஜி

அதேசமயம், நாட்டில் நிலவும் பொருளாதார மந்தநிலை, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்டவைகளை கையில் எடுத்து எதிர்க்கட்சிகள் அமலியில் ஈடுபட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

பிரதமர் மோடி தலைமையிலான அரசு இரண்டாவது முறையாக பதவியேற்ற பின்னர் கூடிய முதல் கூட்டத்தொடரில் 36 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன என்பதும், பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் அமர்ந்திருப்பதால் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு இருந்தாலும் மசோதாக்களை மத்திய அரசால் எளிதில் நிறைவேற்றி விட முடியும் என்பது கவனிக்கத்தகக்து.

இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று (அக்.,23ஆம் தேதி) கூடவுள்ளது. இந்த கூட்டத்தின் போது, நாடாளுமன்ற கூட்டத்தொடரில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள், தாக்கல் செய்யப்பட வேண்டிய மசோதாக்கள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...