கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை சொல்லும் ரகசியம்
தனது கடின உழைப்பாலும் விடாமுயற்சியாலும் உயரம் தொட்டு இருக்கும் தமிழர் கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ. சுந்தர்பிச்சை விழி உயர்த்தி பார்க்கவைக்கிறது. இன்றைய இளைஞர்களுக்கும், சிறு தொழில் முனைவோர், தொழில் புரிவோர் என பலருக்கும் வாழ்வின் வெற்றியைக் குறித்த ரகசியங்களை பற்றி சிறப்புரை ஆற்றி வருகிறார். சமீபத்தில் கல்லூரி ஒன்றில் மாணவர்களிடம் அவர் பேசியவை.
என் இளமை பருவத்தில் என் கல்லூரி மற்றும் பள்ளி படிப்பை பற்றி பலவிதமாக விமர்சித்துள்ளனர். இந்த கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை அப்படி இப்படி என ஏகப்பட்ட கருத்துக்கள். ஆனால் வாழ்க்கை வெறும் கல்லூரி படிப்பை மற்றும் சார்ந்தது இல்லை. வாழ்க்கை அதிலிருந்து மிகவும் வித்தியாசமானது, எனவே உங்கள் நம்பிக்கையை நிலைநிறுத்துவதும், உங்கள் கனவுகளை பின் தொடர்வதும் அவற்றைப் பின்பற்ற முயற்சிப்பது மட்டுமே முக்கியம் என்று நான் நினைக்கிறேன். உங்கள் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்ற முடிவு உங்கள் கையில். நீங்கள் தான் அதை தேர்ந்தெடுக்க வேண்டும் சரியான பாதையில். வெளி உலகத்தின் பார்வையை பற்றி அதிகம் யோசிக்காதீர்கள்”
உங்களுக்கான கனவுகளை நீங்களே தேர்ந்தெடுங்கள். அது கனவாய் மற்றும் நின்று விட கூடாது நிஜ உலகில் அதை செயல்படுத்த வேண்டும். அதற்கு முயற்சி விடா முயற்சி மிகவும் அவசியம். நீங்கள் உங்களின் வெற்றியை அடைய வேண்டுமென்றால் அதற்கு நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்பது அவசியமற்றது உங்களின் நோக்கம் எதுவரை சென்றது என்பதே முக்கியம். என்றார்