தானாகவே அழியும் வாட்ஸ் அப் மெசேஜ் – புதிய அப்டேட்

 தானாகவே அழியும் வாட்ஸ் அப் மெசேஜ் – புதிய அப்டேட்

குறிப்பிட்ட நேரத்துக்குப் பின் மெசேஜ் தானாகவே அழியும் புதிய வசதியை அறிமுகம் செய்ய, ‘வாட்ஸ்ஆப்’ சமூக வலைதளம் திட்டமிட்டுள்ளது. வாட்ஸ் அப் சமூக வலைத்தளத்தில், ஒருவர் மற்றவர்களுக்கு அனுப்பும் செய்தி நிரந்தரமாக இருக்கும். இதையடுத்து, 2 வருடத்திற்கு முன்பு செய்தி அனுப்பிய 7 நிமிடத்திற்குள் அந்தச் செய்தியை பெறுபவர் பார்ப்பதற்கு முன் அழிக்கும் வசதி (delete for everyone) அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் அந்தக் கால நேரம் ஒருமணி நேரமாக மாற்றப்பட்டது. 

இந்நிலையில், நம்முடைய செய்தியை பெறுபவர் படிக்க வேண்டும். ஆனால், குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு, அந்தச் செய்தி, தானாகவே அழியும் வகையிலான வசதியை அறிமுகம் செய்ய, வாட்ஸ் அப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மிகவும் முக்கியமான செய்திகளை அனுப்பும்போது, பாதுகாப்பு கருதி, அது நீண்ட நாட்கள் மற்றவர்களிடம் இருக்க வேண்டாம் என நினைப்பவர்களுக்கு இந்த வசதி உதவும் எனவும் செய்தியை நாம் அனுப்பும்போது, ஐந்து விநாடிகள் அல்லது ஒரு மணி நேரத்துக்குப் பிறகு, அந்தச் செய்தி தானாகவே அழியும் வசதியை தேர்வு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது குரூப் மெசேஜில் மட்டுமே செயல்படும் எனவும் வருங்காலத்தில் பிரைவேட் மெசேஜ்-க்கும் செயல்படுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், சோதனை முயற்சி வெற்றி பெற்ற நிலையில் எப்போது இந்த வசதி அறிமுகம் செய்யப்படும் என்ற தகவல் வெளியாகவில்லை. 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...