இன்றைய முக்கிய செய்திகள்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன். தூத்துக்குடியில் உள்ள அலுவலகத்தில், நாளை ஆஜராக அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் சம்மன்.
சென்னையில் போலி கால்சென்டர் நடத்திய 5 பெண்கள் உட்பட 12 நபர்கள் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது. பிரபல நிறுவனங்கள் மற்றும் அரசு வங்கிகளில் கடன் வாங்கி தருவதாக கூறி அவர்களின் விவரங்களை பெற்று அதை வைத்து மிகப்பெரிய அளவில் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
உங்கள் வீட்டு மருமகளை வரவேற்க மற்றொரு மகளை கொன்றுவிட்டீர்கள் – உயர்நீதிமன்றம். பேனர் விழுந்த விவகாரத்தில் ஜெயகோபால் முன் ஜாமீன் வழக்கு நாளை மறுநாளுக்கு ஒத்திவைப்பு.
ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் சிபிஐ பதில் மனு தாக்கல்.நிதியமைச்சக அலுவலக அதிகாரத்தை சிதம்பரம் தவறாக பயன்படுத்தினார் என சிபிஐ குற்றச்சாட்டு. மகனின் நலனுக்காக நிதியமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தினார் எனவும் குற்றச்சாட்டு.
அறிக்கை கேட்டது, தேர்தல் ஆணையம், சீமான் சர்ச்சை பேச்சு – அறிக்கை கேட்டது, தேர்தல் ஆணையம். ராஜீவ் காந்தி குறித்து பேசியது பற்றி விழுப்புரம் ஆட்சியர் அறிக்கை தர வேண்டும் – சத்ய பிரத சாஹு.
சிலிண்டர் டெலிவரி செய்யும்போது டிப்ஸ் வசூலிக்கப்படுவதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? நவம்பர் 1ம் தேதிக்குள் பதிலளிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ரவிச்சந்திரன் தாக்கல் செய்த பரோல் மனு மீது 3 வாரத்துக்குள் பரிசீலித்து முடிவு எடுக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ளதையடுத்து தமிழகம், ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தல்.
இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதிக்கு மன உளைச்சல் ஏற்படுத்திய புகாரில் சிறப்பு எஸ்.ஐ, காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்
இடி தாக்கியதில் புதுக்கோட்டையில் விவசாயத் தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழப்பு! 20க்கும் மேற்பட்டடோர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி
ஜம்முகாஷ்மீர்: பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி துப்பாக்கிச்சூடு – பெண் ஒருவர் உயிரிழப்பு.
திருச்சி நகைக்கடையில் கொள்ளை போன ரூ.13 கோடி மதிப்பிலான நகைகள், பெங்களூருவில் மீட்பு . பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை சரி பார்த்து வரும் காவல் துறையினர்.