இன்றைய ராசி பலன் வெள்ளிக்கிழமை 01 செப்டம்பர் 2023)

சோபகிருது வருடம் ஆவணி மாதம் 15 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 1.9.2023, சந்திர பகவான் இன்று கும்ப ராசியில் பயணம் செய்கிறார். இன்று அதிகாலை 03.40 வரை பிரதமை. பின்னர் துவிதியை இன்று மாலை 06.49 வரை பூரட்டாதி. பிறகு உத்திரட்டாதி. ஆயில்யம் மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

மேஷம் : உயரதிகாரிகளின் கோபத்தால் மன உளைச்சலுக்கு உள்ளாவீர்கள். குடும்ப பிரச்சனைகளால் மனநிம்மதி இழப்பீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு பெறுவீர்கள். சந்தை நிலவரங்கள் உங்களுக்கு எதிராக இருப்பதால் சங்கட்டப்படுவீர்கள். பங்குச்சந்தை வியாபாரத்தில் சாதகமான நிலையை காண மாட்டீர்கள். ஏற்றுமதித் துறையில் எச்சரிக்கையாக இருக்க தவறாதீர்கள்.

ரிஷபம் : வீண் செலவுகள் குறைந்து நிதிநிலைமையை சீர்படுத்துவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறந்த முறையில் அக்கறை காட்டுவீர்கள். திருமணத்திற்கு நல்ல வரன் தேடுவீர்கள். விற்பனையில் அதிசயத்தக்க முன்னேற்றம் காண்பீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள் அரசியல் செல்வாக்குள்ள ஒருவரின் தொடர்பால் முன்னேற்றம் அடைவீர்கள்.

மிதுனம் :  மாறி வரும் சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப உற்பத்தியை பெருக்குவீர்கள். சிறு வியாபாரிகள் அதிக லாபம் அடைவீர்கள். ரியல் எஸ்டேட் தொழிலை சீராக கொண்டு செல்வீர்கள். ஷேர் மார்க்கெட்டில் ஊக்கத்துடன் ஈடுபடுவீர்கள். அலைச்சல் அதிகம் இருந்தாலும் அதன் மூலம் ஆதாயம் பெறுவீர்கள். வங்கியில் இருந்து சுலபமாக கடன் வாங்குவீர்கள்.

கடகம் : நண்பர்களை தேர்ந்தெடுப்பதில் எச்சரிக்கையாக இருக்க தவறாதீர்கள். தேவையில்லாமல் கெட்ட பெயர்களை சம்பாதிக்காதீர்கள். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமாக செயல்படுவீர்கள். பணம் நகைகள் வைக்கும் இடத்தை கவனமாக பார்த்துக் கொள்ள மறக்காதீர்கள். பேச்சுவார்த்தையில் நிதானம் இழக்காதீர்கள். வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக் கொள்ளாதீர்கள்.

சிம்மம் : வியாபாரத்தை விரிவுபடுத்த வீணாக செலவு செய்யாதீர்கள். வெளியூர் பயணங்கள் அவ்வளவு சாதகம் அடைய மாட்டீர்கள். கேட்ட இடத்தில் பணம் வர தாமதமாகி தடுமாற்றம் அடைவீர்கள். உறவினர்களுக்காக அதிகம் செலவு செய்வீர்கள். உடல்நிலை பாதிப்புக்கு மருத்துவமனை செல்வீர்கள். பெற்றோர் வகையில் பணம் விரையம் ஏற்பட்டு நண்பரின் உதவியை நாடுவீர்கள்.

கன்னி : வருமானம் போதிய அளவுக்கு பெருகி மகிழ்ச்சியடைவீர்கள். குடும்ப நிர்வாகத்தில் பிரச்சனை இல்லாமல் பார்த்துக் கொள்வீர்கள். கணவன் மனைவி உறவை சிறப்பாக பேணுவீர்கள். வாகனம் ஓட்டும்போது எச்சரிக்கை தவறாதீர்கள். உற்பத்தி அதிகரித்து உற்சாகமடைவீர்கள். காலத்திற்கு ஏற்ற மாதிரி புதிய திட்டங்களை தீட்டி வியாபாரத்தை மாற்றுவீர்கள்.

துலாம் : பணி சுமை அதிகமாக இருந்தாலும் அதற்கேற்ற ஊதியம் பெறுவீர்கள். வேலைக்காக கடல்தாண்டிப் போக ஏற்பாடு செய்வீர்கள். கடன் வாங்க வேண்டிய அவசியம் இல்லாமல் பண வரவை காண்பீர்கள். தங்கம் வெள்ளி போன்றவற்றில் முதலீடு செய்வீர்கள். வியாபார உத்திகளால் லாபத்தைக் காண்பீர்கள். குடும்பப் பிரச்சனைகளால் மனநிலை பாதிப்படைவீர்கள்.

விருச்சிகம் : அவசியமில்லாத செலவுகளால் அல்லல் படுவீர்கள். பணத்தின் மதிப்பை இந்த காலத்தில் நன்கு உணர்வீர்கள். ஏதாவது பிரச்சனை தோன்றி தொழிலுக்கு இடையூறை சந்திப்பீர்கள். பூர்வீக சொத்துக்கள் பற்றிய பேச்சுவார்த்தை நடத்துவீர்கள். கொடுத்த வாக்குறுதியை சிரமப்பட்டு காப்பாற்றுவீர்கள். சங்கடங்களுக்கு இடையில் குடும்பத்தில் சுப நிகழ்ச்சியை நடத்துவீர்கள்.

தனுசு : புத்திசாலித்தனத்தால் வருமானத்தை உயர்த்துவீர்கள். எந்த பிரச்சனையானாலும் சொந்த முயற்சியால் தாண்டுவீர்கள். பூர்வீக சொத்துக்கள் பற்றி பேச்சுவார்த்தையை இப்போது நடத்தாதீர்கள். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்வீர்கள். கடந்தகால நெருக்கடியில் இருந்து விடுபடுவீர்கள். நீங்கள் எதிர்பார்த்த நன்மைகள் அனைத்தையும் அடைவீர்கள்.

மகரம் : வாழ்க்கைக்கு தேவையான வருமானத்தை தடையின்றிப் பெறுவீர்கள். அசையா சொத்துக்களில் முதலீடு செய்வீர்கள். அரசுத் துறை பணியாளர்கள் சிறப்பான பெயரை எடுப்பீர்கள். வியாபாரிகள் கணிசமான லாபம் பெறுவீர்கள். தொழிலில் தடை ஏற்பட்டாலும் சாமர்த்தியமாக விலக்குவீர்கள். கணவன் மனைவி இருவரும் அனுசரித்துப் போய் பிரச்சனையை தவிர்ப்பீர்கள்.

கும்பம் : வீட்டிலும் வெளியிலும் புகழும் செல்வாக்கும் அதிகரித்து உறவினர்களை பொறாமைப்பட வைப்பீர்கள். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். திருமணப் பேச்சுவார்த்தை நடத்துவீர்கள். தொழிலுக்காக நண்பரின் ஆலோசனையை நாடுவீர்கள். சகோதர வழிகளில் ஆதாயம் பெறுவீர்கள். அலைச்சலால் உடல் சோர்வு அடைவீர்கள்.

மீனம் : தொழில் முன்னேற்றம் தொய்வான நிலையில் இருப்பதால் கவலைப்படுவீர்கள். குடும்பத்தினருடன் சேர்ந்திருக்கும் நேரம் குறைவதால் நிம்மதி இழப்பீர்கள். கணவன் மனைவி உறவில் புரிந்துணர்வை நிலை நாட்டுவீர்கள். கல்வியில் அக்கறை காட்ட பிள்ளைகளை அறிவுறுத்துவீர்கள். அரசுப் பணியாளர்கள் அழுத்தம் காரணமாக டென்ஷனாகவே இருப்பீர்கள்‌.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!