இன்றைய ராசி பலன் (வியாழக்கிழமை 10 ஆகஸ்டு 2023)

சோபகிருது வருடம் ஆடி மாதம் 25 ஆம் தேதி வியாழக்கிழமை 10.8.2023, சந்திர பகவான் இன்று ரிஷப ராசியில் பயணம் செய்கிறார். இன்று காலை 09.04 வரை நவமி. பின்னர் தசமி. இன்று காலை 07.44 மணி வரை கிருத்திகை. பின்னர் ரோகிணி. சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

மேஷம் : சீட்டுப் போட்டு சேர்த்த பணத்தைக் கொண்டு நகைகள் வாங்குவீர்கள். ரியல் எஸ்டேட் தொழிலில் எதிர்பாராத முன்னேற்றம் அடைவீர்கள். ஆன்லைன் வர்த்தகங்களில் லாபத்தை அள்ளுவீர்கள். பைனான்ஸ் தொழிலில் பக்குவமாக நடந்து கொள்வீர்கள். மனைவி பெயரில் புதிய இடம் வாங்கி பத்திரம் போடுவீர்கள். முதுகு வலிக்கு வைத்தியம் பார்ப்பீர்கள்.

ரிஷபம் : அடுத்தவர் பேச்சை நம்பி அதிக முதலீடு செய்யாதீர்கள். எதிர்பார்த்த காரியம் நடக்கவில்லை என்று வருந்தாதீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்திகளை தாமதமாகப் பெறுவீர்கள். சகோதர உறவுகளால் சச்சரவுகளை சந்திப்பீர்கள். இனம் தெரியாத வேதனையில் இம்சைப்படுவீர்கள். தொழிலுக்குத் தேவையான பணத்தை கடுமையாக முயற்சி செய்து சேகரிப்பீர்கள்.

மிதுனம் : தேவையில்லாத பிரச்சனைகளில் மூக்கை நுழைக்காதீர்கள். அடிதடி சம்பவங்களில் மாட்டி கொள்ளாதீர்கள். காவல்துறை விசாரணைக்கு உட்படுவீர்கள். வாகனங்களில் செல்லும்போது கவனத்தை சிதற விடாதீர்கள். தொண்டை வலிக்காக மருந்து எடுத்துக் கொள்வீர்கள். வாக்குவாதம் வளர்ந்து காதலியோடு சண்டை போட்டு பிரிந்து செல்வீர்கள்.

கடகம் : மங்களகரமான நிகழ்ச்சியை மனம் இனிக்க நடத்துவீர்கள். விவசாய வேலைகளில் முனைப்புடன் இறங்குவீர்கள். பழைய கடனை அடைப்பீர்கள். வியாபாரிகள் பொருட்களைச் சுலபமாக விற்பீர்கள். தொழிலில் மிகச்சிறந்த முன்னேற்றம் அடைவீர்கள். ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்தை நேர்த்தியாக நடத்துவீர்கள்.

சிம்மம் : சாதுரியமாகப் பேசி சம்பாத்தியத்தை அதிகரிப்பீர்கள். அரசு வேலையில் அக்கறையாக நடந்து பாராட்டுச் சான்றிதழ் பெறுவீர்கள். முதலாளிகளின் உற்சாகமான பாராட்டை பெறுவீர்கள். போட்டி போட்டு அரசாங்க ஒப்பந்தங்களை அடைவீர்கள். நிலம் வாங்கி விற்கும் தொழிலை நேர்த்தியாக நடத்துவீர்கள். பிரியமானவர்களிடம் இருந்து நல்ல தகவல்கள் பெறுவீர்கள்.

கன்னி : குடும்பத்துடன் கொடைக்கானல் போன்ற இடங்களுக்குச் செல்வீர்கள். தந்தையார் வழியில் கணிசமான பண வரவை அடைவீர்கள். இழுபறியாக இருந்த வழக்குகளை உங்களுக்குச் சாதகமாக முடிப்பீர்கள். சகோதரியின் திருமணம் குறித்து முடிவெடுக்க முடியாமல் தடுமாறுவீர்கள். மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் தொழிலை சிறப்பாக நடத்தி சாதனை படைப்பீர்கள்.

துலாம் : நண்பருக்கு இடையே எழுந்த சின்ன வாக்குவாதத்தால் பெரிய பிளவை சந்திப்பீர்கள். வேலை காரணமாக குடும்பத்தைப் பிரிந்து வெளியூர் செல்வீர்கள். வியாபாரத்தில் சறுக்கல் நிலையால் சங்கடப்படுவீர்கள். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் சுணக்க நிலையால் பாதிக்கப்படுவீர்கள். யாரிடமும் கோபமாக பேசாதீர்கள். சந்திராஷ்டம நாள். எச்சரிக்கை தேவை.

விருச்சிகம் : மற்றவர்கள் விமர்சனங்களை ஊதித் தள்ளுவீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகளைப் பேசிக் களைவீர்கள். உறவுகளைத் தேடிச் சென்று வீட்டிற்கு அழைப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளுக்கான ஆயத்த ஏற்பாடுகளைச் செய்வீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்த திட்டம் போடுவீர்கள். அந்நியரின் தலையீட்டை அனுமதிக்க மாட்டீர்கள். வெளிநாட்டில் இருந்து பண உதவியை பெறுவீர்கள்.

தனுசு : குடும்பத்திலுள்ளவர்களிடம் கோபத்தைக் காட்டாதீர்கள் ஆத்திரப்பட்டால் அவஸ்தைப்படுவீர்கள். உங்கள் நிம்மதியைக் கெடுக்க சிலர் சிலர் செய்யும் முயற்சிகளுக்கு இடம் கொடுக்காதீர்கள். வெளியூர் பயணங்களின்போது பணத்தை பத்திரமாக வைக்க மறக்காதீர்கள். கண்ட இடத்தில் சாப்பிடாதீர்கள். வயிற்று வலியால் அவதிப்படுவீர்கள்.

மகரம் : உங்கள் வேலைக்கு உலை வைக்க நினைப்பவர்களை அடையாளம் காண்பீர்கள். பொறுப்பாக நடந்து பொல்லாப்பில் இருந்து விடுபடுவீர்கள். அவசியத் தேவைக்காக அலைச்சல் அதிகமாகி உடல்நிலை பாதிப்பு அடைவீர்கள். மருத்துவரிடம் ஆலோசனை கேட்டுக் மருந்து சாப்பிடுவீர்கள். தொழிலில் இருந்த தடைகளை விலக்குவீர்கள்.

கும்பம் : பொருளாதார முன்னேற்றத்தால் மகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரத்தில் இரண்டு மடங்கு லாபத்தைப் பார்ப்பீர்கள். நடைபாதை வருமானத்தை பெருக்குவீர்கள். உத்தியோகம் பார்ப்பவர்கள் முதலாளியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். புதிய வாகனம் மாற்றுவீர்கள்.

மீனம் :  திடீர் செலவால் நெருக்கடியைச் சந்திப்பீர்கள். திருமண வயதினருக்கு அதற்கான ஏற்பாட்டை செய்வீர்கள். வசதிக்கேற்ப புதிய வீடு மாறுவீர்கள். மனக்குழப்பம் நீங்கி தெளிவு பெறுவீர்கள். தொழில் போட்டிகளைத் துடைத்து ஒழிப்பீர்கள். நண்பர்கள் மூலம் புதிய ஆர்டர்களைப் பெறுவீர்கள். பக்குவமாகப் பேசி வராமல் கிடந்த பழைய கடன்களை வசூல் செய்வீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!