நள்ளிரவில் வெளியாகவுள்ள கேப்டன் மில்லர் டீசர்..!

 நள்ளிரவில் வெளியாகவுள்ள கேப்டன் மில்லர் டீசர்..!

இந்த வருடம் அடுத்தடுத்து டாப் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் ஆகி பட்டையை கிளப்ப இருக்கிறது. தற்போது ஜெயிலர் படத்திற்காக காத்திருக்கும் ரசிகர்கள் அடுத்ததாக லியோ படத்தை தெறிக்க விடவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கு இடையில் இந்தியன் 2, ஜப்பான், அயலான், கேப்டன் மில்லர், கங்குவா போன்ற படங்களும் வரிசை கட்டி நிற்கின்றன. இப்படி அடுத்தடுத்து வெளியாக இருக்கும் இந்த படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் தூண்டி வருகின்றது. அதில் சமீபத்தில் சூர்யாவின் கங்குவா படத்தின் கிளிம்ஸ் காட்சிகள் வெளியாகி இருந்தது. சூர்யாவின் பிறந்தநாள் ட்ரீட்டாக நள்ளிரவு 12.01க்கு வெளியான இந்த வீடியோ இப்போது சோஷியல் மீடியாவை ஆதிக்கம் செய்து வருகிறது.

அதில் முற்றிலும் வித்தியாசமான கெட்டப்பில் இருந்த சூர்யாவை பார்த்து பலரும் அரண்டு தான் போனார்கள். அது மட்டும் இன்றி 3டி தொழில்நுட்பம் கொண்டு பத்து மொழிகளில் வெளியாகும் இப்படம் உலக அளவில் சாதனை படைக்கவும் தயாராகி வருகிறது. இந்நிலையில் இதே பாணியில் கேப்டன் மில்லர் பட குழுவும் ஒரு சம்பவம் செய்ய தயாராகி வருகின்றனர். அதாவது வரும் 28ஆம் தேதி தனுஷின் பிறந்த நாளன்று கேப்டன் மில்லர் படத்தின் டீசர் வெளிவர இருக்கிறது.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘கேப்டன் மில்லர்’. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார்.இந்த படம் 3 பாகங்களாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. ரசிகர்களின் மிக நீண்ட எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இந்தப்படம் உருவாகி வருகிறது. இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

சமீபத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அத்திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்தியஜோதி பிலீம்ஸ் நிறுவனத்தின் வெளியிட்டு சமூக வலைதளங்களில் வைரலானது. அண்மையில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஜூலை 28 சம்பவம் இருக்கு.. கில்லர் கில்லர் என்று பதிவிட்டிருந்தார். இந்த கேப்டன் மில்லர் படத்தின் அப்டேட்டாக இருக்கலாம் என பேசப்பட்டது.

அந்த வகையில் சத்தியஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தற்போது மற்றொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாளை (ஜூலை 28) நள்ளிரவு 12.01-க்கு ‘கேப்டன் மில்லர்’ படத்தின் டீசர் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...