“ஜவான் திரைப்படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியானது”

 “ஜவான் திரைப்படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியானது”

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் திரைப்படத்தின் முன்னோட்ட விடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.தமிழில் விஜய்யை வைத்து பிகில், மெர்சல், தெறி என்று மூன்று சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியில் இயக்குநராக அறிமுகமாகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில், நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படம் செப்.7 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இதன் ஓடிடி, இசை மற்றும் திரையரங்க வெளியீட்டு உரிமம் ஆகியவை ரூ.400 கோடிக்கும் மேல் விற்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. இதன் காரணமாக, இந்தாண்டின் மிகப்பெரிய படமாக ஜவான் உருவெடுத்துள்ளது.சமீபத்தில்  இப்படத்தின் இசை உரிமத்தை டீ – சீரியஸ் நிறுவனம் ரூ.36 கோடிக்கு வாங்கியுள்ளதாகவும் ஜவான் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், படத்தின் முன்னோட்ட விடியோ இன்று காலை வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகின்றது. ஜவான்படத்தில் நடிகர் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். படத்தின் முதல் டீசர் (Prevue) இன்று  வெளியானது.
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் சமீபத்தில் நடித்து வெளிவந்த ‘பதான்’ மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து தமிழ் இயக்குநர் அட்லி இயக்கத்தில் ‘ஜவான்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் முதல் டீசர் வெளியாகவிருக்கிறது. சரிவில் இருக்கும் பாலிவுட்டிற்கு ஷாருக்கின் ‘பதான்’ படம்தான் ஒரு நம்பிக்கையை அளித்தது. சமீபத்தில் அங்கே தென்னிந்திய படங்கள்தான் பெரும் வரவேற்பைப் பெற்றன. இந்நிலையில் தென்னிந்திய இயக்குநர் ஒருவர் பாலிவுட்டின் சூப்பர்ஸ்டாரை இயக்குவதால் ‘ஜவான்’ படத்துக்குப் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இப்படத்தில் நடிப்பதன் மூலம் நயன்தாரா பாலிவுட்டிற்கு அறிமுகமாகிறார். நடிகை தீபிகா படுகோனேயும் இதில் கௌரவத் தோற்றத்தில் நடித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.அதோடு இதில் விஜய் சேதுபதி, சான்யா மல்ஹோத்ரா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  ஆனால் அத்தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...