இந்தியாவின் 10வது பிரதம மந்திரி வி. பி. சிங் பிறந்த நாளின்று
இந்தியாவின் 10வது பிரதம மந்திரி வி. பி. சிங் பிறந்த நாளின்று
1989-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் காங்கிரஸ் அரசு வீழ்த்தப்பட்டது. இடதுசாரிகள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவுடன் அமைந்த தேசிய முன்னணி அரசில் பிரதமராகப் பொறுப் பேற்றார் வி.பி.சிங். அவரது தலைமையிலான அரசுக்கு ஒருபுறம் ஆதரவு கொடுத்தாலும், மறுபுறம் தன்னுடைய இந்துத்துவச் செயல்திட்டங்கள் மூலம் நெருக்கடி கொடுத்துக்கொண்டே இருந்தது பாஜக.
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை ஏற்று, சிங் இடஒதுக்கீட்டை அமலாக்கியபோது, பாஜக நெருக்கடியை மேலும் அதிகரித்தது. அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரத யாத்திரை மேற்கொண்ட பாஜக தலைவர் அத்வானி கைது செய்யப்பட்டதும் இடஒதுக்கீடு விவகாரம் ஒன்றுசேர, சிங் அரசுக்குக் கொடுத்த ஆதரவை விலக்கிக்கொண்டது பாஜக. ஓராண்டு பிரதமர் காலத்தை நிறைவுசெய்வதற்கு 16 நாட்கள் முன்னதாக சிங் பிரதமர் பதவியை இழந்தார்.
நல்ல பேச்சாளரும் கவிஞரும் நாடாளுமன்றவாதியுமான சிங், பிரதமர் பதவியிலிருந்து விலகுவதற்கு முன் ஆற்றிய உரை வரலாற்றுப் புகழ்பெற்றது
காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழ கத்தின் உரிமைகள் நிலைநாட்டப்படவேண்டும் என்ற நோக்கில் நடுவர் மன்றத்தை அமைத்தவர் வி.பி.சிங்.
இலங்கைக்கு அனுப்பப்பட்ட இந்திய அமைதி காப்புபடை அங்கே தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது என்ற குற்றச் சாட்டு எழுந்ததால், வீண் கௌரவம் பாராமல் அந்தப் படையினை திரும்ப அழைத்துக் கொண்டார்