தீபாவளி கொண்டாட்டங்களும் காவல்துறை கட்டுப்பாடுகளும்
தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளன. தீபாவளிப் பண்டிகையில் வாகன ஓட்டிகள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை போக்குவரத்து காவல் துறை அறிவித்திருக்கிறது. அதன் விவரம் இங்கே.
தனிநபர் வாகனங்களில் சொந்த ஊர் செல்வோர் தாம்பரம் செங்கல்பட்டு பாதையை தவிர்த்து மாற்று பாதையில் செல்ல போக்குவரத்து துறை வலியுறுத்தப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட செல்லும் மக்கள் பஸ், ரயில்களில் முன்பதிவு செய்து பயணத்தைத் திட்டமிட்டுள்ளனர். சிறப்பு ரயில்கள் உள்பட அனைத்து ரயில்களிலும் இடங்கள் நிரம்பிவிட்டன.
தீபாவளிப் பண்டிகைக்காக சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்பவர்கள் 1.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். அதற்காக தமிழக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 16 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊரில் பண்டிகையைக் கொண்டாடச் செல்வது வழக்கம். அந்த வகையில் வெளியூர் செல்லும் பொதுமக்களுக்கு வசதியாக 21, 22, 23 ஆகிய தேதிகளில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் அரசு விரைவு பஸ்களின் முன்பதிவு பெரும்பாலும் நிறைவடைந்துவிட்டது. அதனால் தற்போது கோயம்பேடு மார்க்கெட், தாம்பரம், பூந்தமல்லி உள்ளிட்ட தற்காலிக பேருந்து நிலையங்களில் கடைசி நேர முன்பதிவு டிக்கெட் கவுண்டர்கள் தொடங்கப்பட்டு சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு டிக்கெட் விற்பனை நடைபெற்று வருகிறது.
தற்போது வரை சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு 61 ஆயிரம் பேரும் மற்ற மாவட்டங்களுக்கிடயே 89 ஆயிரம் பேரும் என 1.51 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் சொந்த ஊர் செல்வோர் சென்னை மாநகரப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் தாம்பரம் – பெருங்களத்தூர் வழியாக செல்வதைத் தவிர்த்து திருப்போரூர் – செங்கல்பட்டு அல்லது ஸ்ரீபெரும்புதூர் – செங்கல்பட்டு வழியாகப் பயணத்தை மேற்கொள்ளுமாறு போக்குவரத்துத் துறை வலியுறுத்தி உள்ளது.
வாகன ஓட்டிகளுக்குக் கட்டுப்பாடு
புதிய போக்குவரத்து விதியை நேற்று நள்ளிரவு முதல் அமல் படுத்தியது சென்னை போக்குவரத்து காவல் துறை!
- குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுடன் பயணிப்பவர்கள் மீதும் வழக்குப் பதிவு மற்றும் அபராதம் விதிக்கப்படும்.
- டூவீலர், கார்களில் குடிபோதை ஓட்டுநருடன் அமர்ந்து பயணிப்பவருக்கும் அபராதம் விதிக்கப்படும் இதற்கு அபராத்த தொகையாக ரூ.1000 முதல் ரூ.10000 வரை வசூலிக்கப்படும்.
- முகம் தெரியாத ஆட்டோ ஓட்டுனருடன் பயணம் செய்வோருக்கு அபராதம் இல்லை!
- சாலைகளில் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு உள்ளிட்ட அவசரகால வாகனங்களுக்கு வழிவிட மறுத்தால் அபராதம்
- தேயில்லாமல் தடை செய்யப்பட்ட இடங்களில், அதிக ஒலி எழுப்பும் ஹாரண்களைப் பயன்படுத்தினால் அபராதம்.
- அபாயகரமான விபத்துக்களை ஏற்படுத்தும் வகையில், வாகனத்தை ஓட்டினால் அபராதம்.
- வாகனப் பந்தையங்களில் ஈடுபட்டால் 10 ஆயிரம் அபராதம்.
- மாசு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை இயக்கினால் 10 ஆயிரம் அபராதம்.
சட்டம் ஒழுங்கு காவல்துறை பட்டாசு வெடிக்கும் நேரக் கட்டுப்பாட்டையும் சில தினங்களுக்கு முன் அறிவித்திருந்தது. அதன் விவரம் இங்கே.
தீபாவளிப் பண்டிகை அன்று தமிழகத்தில் பட்டாசு வெடிக்க காலை ஒர மணி நேரம் மாலை ஒரு மணி நேரம் அரசு அனுமதி அளித்துள்ளது.
தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கும நேரத்தை இரண்ட மணி நேரம் என நிர்ணயித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை மாநில அரசுகளே முடிவெடுக்கலாம் எனவும் நீதிமன்றம் கூறியிருந்தது. அதன்படி கடந்த ஆண்டு தமிழகத்தில் இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான அனுமதி நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் தீபாவளிக்கு காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கத் தமிழக அரசு அனுமுதி வழங்கியுள்ளது. மேலும் பள்ளிகள், நீதிமன்றங்கள் மருத்துவமனைகள் உள்ளிட்ட அமைதி காக்க வேண்டிய இடங்களில் பட்டாசு வெடிக்கக் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது. இதே போன்று குடிசைகள் இருக்கும் பகுதிகளில் நெரப்பு பற்றக்கூடிய வகையில் பட்டாசு வெடிக்கக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மகிழ்ச்சியாகக் கொண்டாடப்படுவது பண்டிகை. அதை ஆபத்தில்லாத அளவில் கொண்டாடவேண்டும். குறிப்பாக, குழந்தைகளின் பாதுகாப்பு மிகவும் முக்கியம். அவர்கள் மகிழ்ச்சி ரொம்ப முக்கியம். அதற்கு இந்தக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிப்பது ரொம்பவும் முக்கியம்.