இன்றைய ராசி பலன்கள் – 14.02.2022

 இன்றைய ராசி பலன்கள் – 14.02.2022

ராசி- பலன்கள்

🔯 மேஷம் -ராசி: 🐐
மனதில் நினைத்த காரியங்களை நினைத்த விதத்தில் செய்து முடிப்பீர்கள். நெருக்கமானவர்கள் இடத்திலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மற்றவர்களிடமிருந்து எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். வாழ்க்கைத்துணைவருடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் ஒற்றுமை மேம்படும். திறமைகள் வெளிப்படும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு.
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்.

⭐️அஸ்வினி : காரியங்கள் ஈடேறும்.
⭐️பரணி : வாய்ப்புகள் உண்டாகும்.
⭐️கிருத்திகை : ஒற்றுமை மேம்படும்.

🔯 ரிஷபம் -ராசி: 🐂
வியாபார பணிகளில் லாபம் மேம்படும். தந்தைவழி தொழிலின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சிறு தொழில் புரிபவர்களுக்கு மேன்மை உண்டாகும். பொருளாதார ரீதியான நெருக்கடிகள் குறைவதற்கான வாய்ப்புகள் அமையும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு.
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.

⭐️கிருத்திகை : அனுகூலம் உண்டாகும்.
⭐️ரோகிணி : ஒத்துழைப்பு கிடைக்கும்.
⭐️மிருகசீரிஷம் : மேன்மையான நாள்.

🔯 மிதுனம் -ராசி: 👫
புதுவிதமான ஆடைகளை அணிந்து மனம் மகிழ்வீர்கள். ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் படிப்படியாக குறையும். வியாபாரம் தொடர்பான பணிகளில் வாடிக்கையாளர்களின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அரசு தொடர்பான பணியில் இருப்பவர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும். உயர் அதிகாரிகளிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். லாபம் மேம்படும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு.
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு.

⭐️மிருகசீரிஷம் : இன்னல்கள் குறையும்.
⭐️திருவாதிரை : மகிழ்ச்சியான நாள்.
⭐️புனர்பூசம் : கவனத்துடன் செயல்படவும்.

🔯 கடகம் -ராசி: 🦀
குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் மூலம் தனவரவும், ஆதரவும் மேம்படும். விடாப்பிடியாக செயல்பட்டு எண்ணிய இலக்கை அடைவீர்கள். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மனதில் இருக்கும் எண்ணங்களை வெளிப்படுத்தும் பொழுது சூழ்நிலையை அறிந்து செயல்படவும். விரயம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு.
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்.

⭐️புனர்பூசம் : ஆதரவு மேம்படும்.
⭐️பூசம் : எண்ணங்கள் ஈடேறும்.
⭐️ஆயில்யம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.

🔯 சிம்மம் -ராசி: 🦁
உத்தியோகம் தொடர்பான விஷயங்களை மற்றவர்களிடம் பகிராமல் இருப்பது நல்லது. பலம் மற்றும் பலவீனத்தை அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். தவறிப்போன சில பொருட்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். நண்பர்களுடன் கலந்துரையாடி மனம் மகிழ்வீர்கள். நீண்ட நாட்களாக மனதில் இருந்துவந்த கவலைகள் குறைவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு.
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

⭐️மகம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
⭐️பூரம் : மகிழ்ச்சி உண்டாகும்.
⭐️உத்திரம் : கவலைகள் குறையும்.

🔯 கன்னி -ராசி: 🧛‍♀️
சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். நண்பர்களின் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் இருந்துவந்த தடைகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திருப்திகரமான சூழ்நிலைகள் அமையும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு.
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.

⭐️உத்திரம் : உதவிகள் கிடைக்கும்.
⭐️அஸ்தம் : திருப்திகரமான நாள்.
⭐️சித்திரை : வாய்ப்புகள் உண்டாகும்.

🔯 துலாம் -ராசி: ⚖
உறவினர்களின் வழியில் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். மனதில் நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். வழக்கு தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் சற்று விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். வெற்றி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு.
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.

⭐️சித்திரை : அனுகூலமான நாள்.
⭐️சுவாதி : எண்ணங்கள் ஈடேறும்.
⭐️விசாகம் : விழிப்புணர்வு வேண்டும்.

🔯 விருச்சிகம் -ராசி: 🦂
குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். திறமைக்கு ஏற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். பொதுமக்கள் தொடர்பான பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். விவசாயம் தொடர்பான விஷயங்களில் தகுந்த ஆலோசனைகளை பெற்று முடிவெடுக்கவும். நன்மை நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு.
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்.

⭐️விசாகம் : மகிழ்ச்சியான நாள்.
⭐️அனுஷம் : ஆர்வம் அதிகரிக்கும்.
⭐️கேட்டை : ஆலோசனைகள் வேண்டும்.

🔯 தனுசு -ராசி: 🏹
விலை உயர்ந்த பொருட்களை கையாளும்போது கவனத்துடன் இருக்க வேண்டும். மனதில் இருக்கும் ரகசியங்களை மற்றவர்களிடம் கூறுவதை குறைத்துக் கொள்வது நன்மையை ஏற்படுத்தும். எதிர்பாராத செலவுகளின் மூலம் கையிருப்பு குறையும். உடல்நிலையில் சோர்வும், சுறுசுறுப்பின்மையும் உண்டாகும். கால்நடைகள் தொடர்பான பணிகளில் விவேகம் வேண்டும். கவனம் வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு.
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.

⭐️மூலம் : கவனம் வேண்டும்.
⭐️பூராடம் : விரயம் உண்டாகும்.
⭐️உத்திராடம் : விவேகம் வேண்டும்.

🔯 மகரம் -ராசி: 🐏
கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மனதளவில் மாற்றம் ஏற்படும். பத்திரிக்கை தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். விவேகம் வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு.
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.

⭐️உத்திராடம் : கருத்து வேறுபாடுகள் மறையும்.
⭐️திருவோணம் : மாற்றம் ஏற்படும்.
⭐️அவிட்டம் : சாதகமான நாள்.

🔯 கும்பம் -ராசி: 👃
பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் காணப்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் அலைச்சலும், அதற்குண்டான ஆதரவான வாய்ப்புகளும் ஏற்படும். குடும்ப நபர்களிடம் பழைய விஷயங்களை உரையாடி மனக்கசப்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழ்நிலைகள் ஏற்படும். சிக்கல் குறையும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு.
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை.

⭐️அவிட்டம் : ஏற்ற, இறக்கமான நாள்.
⭐️சதயம் : வாய்ப்புகள் ஏற்படும்.
⭐️பூரட்டாதி : கலகலப்பான நாள்.

🔯 மீனம் -ராசி: 🐠
எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகளின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபாரம் தொடர்பான புதிய முயற்சிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அரசு தொடர்பாக எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாக அமையும். வித்தியாசமான சிந்தனைகள் மற்றும் கற்பனைகள் மனதில் அதிகரிக்கும். ஆதரவு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு.
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்.

⭐️பூரட்டாதி : ஆதரவான நாள்.
⭐️உத்திரட்டாதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.
⭐️ரேவதி : கற்பனைகள் மேம்படும்.

🤘ஓம் நமசிவாய🙏

 

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...