சத்தியசோதனையின் நாயகன்
இந்தியாவுக்குள் வியாபாரம் செய்யவந்த வெள்ளைக்கார வியாபார கம்பெனி கள்ளத்தனமாகத் தம் பண அதிகாரத்தைச் செலுத்தி பகுதி பகுதியாக நிலங்களை வாங்கிக் குவித்தது. இந்தியாவில் ஒற்றுமை இல்லை என்பதை உணர்ந்த வெள்ளைக்கார பிரிட்டிஷ் அரசு அந்த வியாபாரிகளின் மூலம் இந்திய நாட்டையே பிடிக்க ரகசிய திட்டம் போட்டு நாட்டைத் துண்டாடியது.
அப்போது துண்டுத் துண்டாக குறுநில மன்னர்களும் திவான்களும் பண்ணையார்களும் நிலக்கிழார்களும் இங்கு ஆண்டு கொண்டிருந்தனர். அவர் களிடம் உறவாடி, தந்திரமாகப் பேசி, தம் அடிமை வளைக்குள் சிக்க வைத் தனர். தமக்குக் கப்பம் கட்டவேண்டும் என்றும் இல்லை என்றால் சிறை பிடிப்போம் என்று மிரட்டி பல நாடுகளைக் கைப்பற்றினர். கப்பம் கட்ட மறுத்தவர்களை கைத செய்து சிரச்சேதம் செய்தனர். படிப்படியாக இப்படி கிட்டத்தட்ட இந்திய நாட்டையே தம் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டது ஆங்கில அரசு.
அப்போதுதான் இந்தியாவில் அரசியல்ரீதியாக கோபாலகிருஷ்ண கோகலே தலைமையில் ஒரு அணி திரண்டு ஆங்கில அரசு எதிராகப் போராட அமைந்தது.
தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய காந்தி இந்திய தேசிய காங்கிரசில் இணைந்து பணியாற்றத் தொடங்கினார்.
இந்திய விடுதலை வேள்வியில் முதன்மையாக நின்று போராடியவர் தலைவர்கள் ஆயிரக்கணக்கானவர்கள். அதில் மிதவாதிகள் தீவிரவாதிகள் என இரண்டாகப் பிரிந்து போராடினார்கள். வெள்ளையர்களைப் போராடி விரட்டி அடிக்க வேண்டும் என்று சுபாஷ் சந்திபோஸ் தலைமையில் ஒரு பிரிவின ரும், மிதவாதிகள் காந்தி தலைமையில் ஒரு பிரினரும் வெள்ளை யனை எதிர்ப்புப் போராடினர்.
1921-ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காந்தி அகிம்சை வழியில் பல போராட்டங்களை முன்னெடுத்து மக்களிடையே விடுதலை உணர்வைத் தூண்டி ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு நெருக்கடி கொடுத்தார்.
வாளேந்தி போரிட்ட இந்திய மன்னர்களையும் துப்பாக்கி ஏந்தி போரிட்ட நேதாஜி போன்ற வீரர்களையும் எளிதாக கையாண்ட ஆங்கிலேய அரசு காந்திஜியின் அகிம்சை வழி போராட்டங்களுக்குப் பதில் சொல்ல முடியாமல் திணறியது. காந்திஜியின் போராட்டங்கள் மிகவும் வித்தியாசமானவை. இந்தியாவில் இருந்துகொண்டே தனது போராட்டங்கள் மூலம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தைத் திணறடித்தார்.
காந்திஜியின் போராட்டங்களில் மிக முக்கியமான ஒன்று ஒத்துழையாமை இயக்கம். இதன்படி இந்தியர்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எந்த ஒத்துழைப்பும் கொடுக்கக்கூடாது, வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்குச் செல்லக் கூடாது, இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது, பிரிட்டிஷ்காரர்கள் தயாரித்த துணிகளை உடுத்த கூடாது என்று இந்திய மக்களுக்குக் கட்டளையிட்டார்.
இதுபோன்ற நடவடிக்கைகளால் இந்திய வாடிக்கையாளர்களை நம்பி இருந்த இங்கிலாந்து கம்பெனிகள் மூடும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. இங்கிலாந்து தொழிலாளர்கள் பெரும் வேலையிழப்பைச் சந்தித்தனர். கிட்டத் தட்ட இங்கிலாந்து பொருளாதாரமே ஆட்டம் கண்டது. இந்தியாவில் இருந்து கொண்டே இங்கிலாந்து பொருளாதாரத்தை ஆட்டம் காணச் செய்த காந்திஜி யின் அறிவுக்கூர்மையைக் கண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் வியந்து போனது.
காந்திஜியின் மற்றொரு முக்கியமான போராட்டம் தண்டி யாத்திரை. 1930-ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசு இந்தியாவில் உப்புக்கு வரி விதித்தது. என் நாட்டில் உற்பத்தியாகும் பொருளுக்கு பிரிட்டிஷ்காரர்கள் வரி விதிப்பதா என்று கொதித்தெழுந்த காந்தி அதனை எதிர்த்துப் போராட்டம் ஒன்றை அறிவித்தார். அதன்படி 1930-ஆம் ஆண்டு மார்ச் 2-ஆம் தேதி அகமதா பாத்திலிருந்து 240 மைல் தூரத்திலுள்ள தண்டிக்கு நடைபயணம் மேற்கொண்டார். மக்கள் கூட்டத்துடன் 23-நாள் பயணத்திற்குப் பின்னர் தண்டி சென்றடைந்த காந்தி அங்கேயே கடல் நீரில் உப்பு காய்ச்சி மக்களுக்கு விநியோகம் செய்தார். இதனைத் தொடர்ந்து இந்தியாவின் பல இடங்களுக்கும் இந்தப் போராட்டம் பரவியது. காந்திஜி உட்பட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால் போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்த ஆங்கிலேய அரசு காந்திஜியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரியைத் திரும்பப் பெற்றது.
1942-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதிர்த்து ஆகஸ்ட் புரட்சி என்ற பெயரில் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தைத் தொடங்கினார். இதன்படி எங்களை நாங்களே ஆண்டு கொள்கிறோம், அந்நியர்கள் இந்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று முழங்கினார். காந்திஜியின் மன உறுதியையும் போராட்ட குணத்தையும் கண்ட ஆங்கிலேய அரசு வேறு வழி இன்றி 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி இந்தியர்களிடம் அதிகாரத்தை ஒப்படைத்துவிட்டு வெளியேறியது.