வரலாற்றில் இன்று – 08.07.2021 சௌரவ் கங்குலி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சௌரவ் சந்திதாஸ் கங்குலி 1972ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி கல்கத்தாவில் பிறந்தார்.
இவர் வலது புறங்களில் பந்துகளை அடிப்பதில் சிறந்தவர். அதனால் இவர் காட் ஆஃப் தெ ஆஃப் சைட் (God of the Off Side) என அழைக்கப்படுகிறார்.
இவர் 2000ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராக இருந்தார். ஒருநாள் போட்டிகளில் பத்தாயிரத்திற்கும் அதிகமான ஓட்டங்களை பெற்றுள்ளார்.
2004ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது இவருக்கு வழங்கப்பட்டது. இவர் 2008ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். தற்போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக உள்ளார்.
முக்கிய நிகழ்வுகள்
- 1949ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரான ராஜசேகர ரெட்டி பிறந்தார்.
- 2007ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி முன்னாள் இந்திய பிரதமர் சந்திரசேகர் மறைந்தார்.
- 1920ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப் பணியாளரான (Indian civil servant) சந்திரிகா பிரசாத் ஸ்ரீவஸ்தவா பிறந்தார்.
- 1895ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி சோவியத் ரஷ்யாவை சேர்ந்த இயற்பியலாளரும், நோபல் பரிசு பெற்றவருமான இகார் டேம் (Igor Tamm) பிறந்தார்.
- 1497ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி வாஸ்கோட காமா, இந்தியாவுக்கான முதல் நேரடிப் பயணத்தை துவங்கினார்.