மாயா ஜால திரைப்பட மன்னன் பி. விட்டலாச்சாரியா பிறந்த தினம் இன்று
மாயா ஜால மன்னன் கர்நாடக தேசம் மங்களூர் ஜில்லா உடுபி தாலுக்கா உதயவரா என்ற ஊரில் பிறந்தார் குடும்பத்தில் இவர் ஏழாவது மகன்.
இவரது தந்தை ஆயுர்வேத மருத்துவர் இளம் வயதில் பாயலத யக்ஷ்கான போன்ற போன்ற நாட்டுப்புற கலைகளில் ஆர்வம் கொண்டிருந்தார்
தன்னிடம் இருந்த குறைந்த பணத்தை வைத்துக் கொண்டு தமிழ் தெலுங்கு சினிமாவில் பல அதிசயங்கள் செய்தவர்
எலும்புக் கூடுகள் கதை (gadhai)கத்தி கபட ஈட்டிஇரும்பு சங்கிலி கேடயம் பாம்பு தேளு இவைகள் தான் இவரது சொத்து
மாயா ஜாலம் மந்திரவாதி பாம்பு சூப் கரடி சண்டை இவைகள் இவரது தொழில் நுட்பம் ராஜநளாவின் உயிர் ஒரு கிளி கழுத்தில் இருக்கும் இந்த கிளி ஒரு ATM இதற்கு pass word இருக்கும்.
ஒரு சிறுவன் ஏழு கடலைக் கடந்து கிளியின் கழுத்தை திருக வேண்டும் திருகினால் ராஜநளா மடிவான் இப்படி கதையை வைத்துக் பெண் ரசிகர்களைக் கொண்டவர் அரண்மணை மணிமீது ஏறி சண்டை போடவேண்டும்
தற்காலத்தில் Steven Spielber போன்றவர்கள் உலக சினிமா சந்தையில் கோடிக் கணக்கில் பெரும் பண செலவில் செய்த பல சாதனைகளை சில லட்சம் பண செலவில் எடுத்து சாதனை செய்தவர்
இவர் என் டி ராமராவ், ராஜநளா, காந்த ராவ், ரேலங்கி, பாரதி, ராஜ்ஸ்ரீ, கிருஷ்ணவேணி, ஜெய மாலினி, விஜயலலிதா இப்படி பலருக்கு வாழ்வு தந்தவர்
இவர்கள் இவரது படங்களில் நிரந்தர நடிகர்கள் பெண்கள் அழ வேண்டும் குழந்தைகள் சிரிக்க வேண்டும் டங்க டக்கர டங்க டக்கர டான்ஸ் காட்சி வேண்டும்.
படம் முடிந்து வீட்டிற்குச் செல்லும்போது மன மகிழ்வுடன் செல்லவேண்டும் அளவுடன் கொண்ட ஆபாசம் இது இவரது கண்ணியம்.
விஜயா வாஹிணி ஸ்டுடியோ இதில் நிரந்தரமாக செட் வைத்திருந்தவர்கள் இருவர் ஒருவர் சாண்டோ சின்னப்பா தேவர் மற்றவர் விட்டலாச்சார்யா இவர்கள் இருவரும் சினிமாவில் புதிய உத்திகள் கண்டுபிடித்து உழைத்து வாளர்ந்தவர்கள்
விட்டலாச்சார்யா சிறந்த திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் தமிழ் கன்னடம் தெலுங்கு ஆகிய மொழிகளில் நிறைய திரைப்படங்களை தயாரித்து இயக்கியிருக்கிறார் ஜானபாத பிரம்மா மாயாஜால மன்னன் போன்ற பெயர்களால் பாராட்டப்பட்டவர்
1953ல் ராஜ்ஜிய லெட்சுமி என்னும் கன்னடத் திரைப்படத்தை தயாரித்து இயக்கினார்1954ல் தெலுங்கு மொழியில் கன்னியாதானம் என்னும் திரைப்படத்தை இயக்கினார்
பின்னர் திரைப்படங்களை இயக்க சென்னைக்கு நிறந்தரமாக குடிபெயர்ந்தார். பத்தொன்பது படங்களில் என். டி. ராமராவை கதாநாயகனாகக் கொண்டு தெலுங்குத் திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவரது தெலுங்கு மற்றும் கன்னடத் திரைப்படங்கள் தமிழ் மொழியில் மொழி மாற்றம் செய்து வெளியிட்டிருக்கிறார்
கோடம்பாக்கம் லிபர்ட்டி தியேட்டர் இங்கே எந்தவொரு சினிமாவும் ஒரு வாரம்தான் ஓடும் இவரது ஜெகன் மோகினி திரைப்படம் இந்த தியேட்டரில் அரங்கு நிறைந்த காட்சிகளாக இருநூறு தினங்களுக்கு மேல் திரையிடப்பட்டது மதராஸ் ராஜதானி வரலாற்றில் இந்த தியேட்டரில் கள்ள மார்க்கெட்டில் டிக்கட் விற்ற திரைப் படம் இதுதான்
விட்டலாச்சார்யா ஒரு மாபெரும் சாதனையாளர் எழுபத்தி ஒன்பது வயதில் (28-05-1999) அன்று காலமானார்