நவம்பர் மாத ராசிபலன்கள்…!! ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :

மனதில் எண்ணிய செயல்பாடுகளில் வெற்றி உண்டாகும். தொழிலில் அலைச்சல்கள் அதிகரிக்கும். வேலைக்காக அவ்வப்போது வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். வருமான நிலை உயர்ந்து காணப்படும். வரவுக்கு ஏற்ற செலவுகள் இருந்து கொண்டே இருக்கும். திடீர் அதிர்ஷ;ட வாய்ப்புகள் கிடைக்கும். மற்றவர்களுக்கு வாக்குறுதிகளை கொடுக்காமல் இருப்பதன் மூலம் பல இன்னல்களில் இருந்து விடுபட முடியும். குடும்ப உறுப்பினர்களிடம் எப்போதும் மகிழ்ச்சியுடன் பழகுவது சிறப்பு. தந்தையின் உடல்நலனில் கவனம் வேண்டும். பழைய கடன்களை பூர்த்தி செய்வீர்கள். சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.

வழிபாடு :
வெள்ளிக்கிழமைதோறும் மகாலட்சுமியை வழிபாடு செய்து வர குடும்பத்தில் உள்ள வாக்குவாதங்கள் குறைந்து சுபிட்சம் உண்டாகும்.

ரிஷபம் :

உறவினர்களுக்கிடையே நிதானத்துடன் செயல்படவும். வெளிவட்டாரத்தில் தங்களுக்கென்று தனிப்பெயர் கிடைக்கும். மனதில் இனம்புரியாத குழப்பமான நிலை இருந்து கொண்டே இருக்கும். ஆதலால் தங்கள் மனதிற்கு பிடித்த நபர்களிடம் சற்று நேரம் உரையாடுவதன் மூலம் தெளிவு கிடைக்கும். குடும்பத்தில் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். நிலுவையில் இருந்துவந்த பழைய வழக்குகளுக்கு சமரச பேச்சின் மூலம் வெற்றி கிடைக்கும். வாழ்க்கைத்துணைவரின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். மூத்த சகோதரர்களிடம் பேசும்போது கவனமாக பேசவும். இல்லையெனில் மனக்கசப்பை சந்திக்க நேரிடும்.

வழிபாடு :
புதன்கிழமைதோறும் பெருமாளை வழிபாடு செய்து வர தனவரவுகளில் இருந்துவந்த ஏற்ற, இறக்கங்கள் குறையும்.

மிதுனம் :

புதிய தொழில் சார்ந்த முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். எதிர்காலத்திற்கு தேவையான புதிய செயல்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும். தம்பதிகளுக்கிடையே விட்டுக்கொடுத்து செல்வது நன்மை அளிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வாகனப் பயணங்களின் போது கவனம் சிதறாமல் பார்த்து செல்வது நல்லது. கடன் தொடர்பான உதவிகள் கிடைக்கும். மனதிற்கு பிடித்த இடங்களுக்கு சுற்று பயணங்கள் மேற்கொள்வதன் மூலம் மனநிம்மதி கிடைக்கும். முயற்சிக்கேற்ப பதவி உயர்வு கிடைக்கும். புதிய இலட்சியத்தை அடைவதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு ஊதியம் தொடர்பான செயல்பாடுகளில் விழிப்புணர்வுடன் இருக்கவும்.

வழிபாடு :
புதன்கிழமைதோறும் குலதெய்வத்தை வழிபாடு செய்து வர நம்பிக்கையும், புத்துணர்ச்சியும் கிடைக்கும்.

கடகம் :

உடல் உபாதைகள் நீங்கி ஆரோக்கியம் மேம்படும். எதிர்பாராத திடீர் செலவுகள் ஏற்பட்டாலும் மனமகிழ்ச்சிக்கு மட்டும் ஒரு குறையும் இருக்காது. திருமண வாய்ப்புகள் துரிதமாக நிறைவேறும். தம்பதிகளுக்கிடையே சிறு சிறு சண்டைகள் ஏற்பட்டு நீங்கும். சகோதரர்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். எந்தவொரு சூழ்நிலைகளிலும் நிதானப்போக்கை கடைபிடிக்கவும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவும், உறவுகளின் பக்கபலமும் மனநிறைவை ஏற்படுத்தும். நீண்ட நாள் புனித யாத்திரை சென்று வருவீர்கள். புத்திரர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பிரியமானவர்களிடம் எதையும் எதிர்பார்த்து இருப்பதை குறைத்து கொள்ளவும்.

வழிபாடு :
சரபேஸ்வரரை வழிபாடு செய்துவர எண்ணத்தெளிவு உண்டாகும் மற்றும் உடல் சோர்வு நீங்கும்.

சிம்மம் :

எண்ணிய எண்ணங்கள் சற்று மந்தத்தன்மையுடன் நிறைவேறும். புதிய வேலைவாய்ப்புகளை தேடி செல்வீர்கள். வயிறு சார்ந்த உபாதைகளை ஆரம்பத்திலேயே கவனிப்பது சிறப்பு. மனைவியிடம் விட்டுக்கொடுத்து செல்வது சிறப்பு. தாயின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உறவினர்களிடம் வரவு செலவுகளில் பொறுமையை காப்பது நல்லது. மூத்த சகோதரர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கான பணிகளை செய்து முடிப்பீர்கள். வீண் அலைச்சல்களால் காரியத்தடை ஏற்படும். கூட்டுத்தொழிலில் இருப்பவர்கள் எதையும் கவனமாக செய்வது நன்மையை தரும்.

வழிபாடு :
சனிக்கிழமைதோறும் ஆஞ்சநேயரை வழிபாடு செய்து வர உயர் அதிகாரிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி அனுகூலம் உண்டாகும்.

கன்னி :

வியாபாரம் மற்றும் தொழில் போன்றவற்றை விரிவாக்கம் செய்ய புதிய திட்டங்களை பற்றி ஆலோசனைகளை செய்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். வீட்டிற்கு ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் தனவரவுகள் அதிகரிக்கும். குணநலன்களில் மாற்றங்கள் உண்டாகும். முயற்சிகளில் காலதாமதம் உண்டாகும். தாயின் உடல்நலனில் கவனம் செலுத்துவது சிறப்பு. பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த பங்காளிகளின் சண்டைகளில் பொறுமை வேண்டும். வாக்குவாதங்களில் நிதானம் வேண்டும். தொழில் சம்பந்தமான அரசாங்க வழியில் அனுகூலம் உண்டாகும்.

வழிபாடு :
திங்கட்கிழமைதோறும் அம்பிக்கையை வழிபாடு செய்து வர குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும்.

துலாம் :

எண்ணிய எண்ணங்களை நிறைவேற்றி வெற்றி பெறுவீர்கள். ஆன்மிக பயணங்கள் சென்று வருவீர்கள். குடும்பத்தில் புதிய நபர்களால் சில சஞ்சலங்கள் உண்டாகும். புதுவிதமான தொழில் முயற்சி கைகூடும். ஆராய்ச்சி சார்ந்த படிப்பு மேற்கொள்பவர்களுக்கு படிப்பில் நாட்டம் குறையும். கவனமுடன் படிப்பது சிறப்பு. திருமண வாழ்வில் அனுசரித்து செல்லவும். புதிய வீடு, மனை வாங்கும் யோகம் ஏற்படும். திட்டமிட்ட பணியை செய்து முடிப்பீர்கள். உறவுகளில் இருந்துவந்த இடைவெளிகள் குறையும். கலைஞர்களுக்கு முயற்சிக்கேற்ற அங்கீகாரம் காலதாமதமாகும். வாழ்க்கை பற்றிய புரிதல் உணர்வு உண்டாகும். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும்.

வழிபாடு :
நரசிம்ம அவதாரத்தை புதன்கிழமைதோறும் வழிபாடு செய்து வர எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக கிடைக்கும்.

விருச்சிகம் :

குடும்பத்தில் புதிய உறுப்பினர்களின் வருகைகள் ஏற்படும். ஆன்மிக பயணங்களை மேற்கொள்வீர்கள். எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். மனதில் புதிய தொழில் சார்ந்த திட்டங்கள் அதிகரிக்கும். வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். சுய முயற்சியால் முன்னேற்றமான சூழல் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். புதிய நபர்களிடம் தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நன்மை அளிக்கும். புதிய பொறுப்புகளும், அதனால் வருமானமும் உண்டாகும். வாழ்க்கைத்துணைக்கு தேவையான வசதிகளை செய்து தருவீர்கள். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்க இயலும்.

வழிபாடு :
செவ்வாய்க்கிழமைதோறும் முருகனை வழிபாடு செய்து வர பெரியோர்களின் ஆசிகளும், வழிகாட்டுதல்களும் கிடைக்கும்.

தனுசு :

மனமும், உடலும் புண்ணியம் சார்ந்த செயலில் ஈடுபடும். எதிர்பார்த்த செயல்கள் காலதாமதமாக நிறைவேறும். பணவரவுகள் நன்மை அளிக்கும். குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். புதிய உறுப்பினர்களின் வருகையின் மூலம் மனநிம்மதி கிடைக்கும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. மனை வாங்கும் யோகம் சிலருக்கு கிடைக்கும். ஆனால் வாங்கும் மனையை நன்கு ஆராய்ந்து அதன் பின் வாங்குவது சிறப்பு. திருமண வாய்ப்புகள் கைகூடும். நண்பர்களுடன் இணைந்து கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு இலாபம் கிடைக்கும். தந்தையின் ஆதரவும், அன்பும் அதிகரிக்கும். நீண்ட நாள் வைப்பு நிதி தக்க சமயத்தில் வந்து உதவும். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் ஒத்துழைப்பு நீடித்து காணப்படும்.

வழிபாடு :
புதன்கிழமைதோறும் சயன கோலத்தில் இருக்கக்கூடிய பெருமாளை வழிபாடு செய்து வர தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

மகரம் :

நினைத்த செயலை நினைத்தபடி நிறைவேற்றி மகிழ்வீர்கள். தனவரவுகள் சீராக இருக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். வாகனப் பராமரிப்பு செலவுகள் நேரிடும். எதிர்பாராத சில செயல்களின் மூலம் மகிழ்ச்சியான சூழல் அமையும். கலைப்பொருட்களை வைத்து வேலை செய்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். பூர்வீகத்தை விட்டு வேறு புதிய இடத்திற்கு செல்ல வாய்ப்புகள் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். ஆன்மிகம் சார்ந்த பணிகளில் உள்ளவர்களுக்கு குருமார்களின் வழிகாட்டுதல் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். வாழ்க்கைத்துணைவர்வழி உறவினர்களால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.

வழிபாடு :
வெள்ளிக்கிழமைதோறும் துர்க்காதேவியை வழிபாடு செய்து வர மனதில் நினைத்த எண்ணங்கள் ஈடேறும்.

கும்பம் :

கால் சம்பந்தமான உபாதைகளுக்காக மருத்துவ செலவுகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடையே வாக்குவாதங்களை தவிர்ப்பது நம்மை அளிக்கும். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு படிப்பில் கவனம் வேண்டும். மனைவி மற்றும் மனைவிவழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பொருளாதாரம் சார்ந்த செயல்பாடுகளில் முன்னேற்றம் உண்டாகும். கட்டிட பணியை செய்து கொண்டிருப்பவர்கள் சூழ்நிலைகள் அறிந்து செயல்படுவது நல்லது. கணினி சார்ந்த கல்வி பயில்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும். ஆன்மிக பணியில் இருப்பவர்களுக்கு நல்ல பேரும், புகழும் கிடைக்கும்.

வழிபாடு :
வராகிதேவியை செவ்வாய்க்கிழமைதோறும் வழிபாடு செய்து வர தொழில் தொடர்பான இன்னல்கள் குறையும்.

மீனம் :

மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கும். தொழில் சார்ந்த முயற்சிகளை துரிதப்படுத்துவது அவசியம். பெரியவர்களின் ஆலோசனைகள் உங்களுக்கு உறுதுணையாக அமையும். வேலை தேடுபவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். பணியில் இருப்பவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். மகான்களின் தரிசனம் கிடைக்கும். மனதில் பக்தி நெறி மேலோங்கும். மறைமுகமான திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். வெளிவட்டார பயணங்களால் அனுகூலம் ஏற்படும். ஆசிரியர்களின் பாராட்டுகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள்.

வழிபாடு :
வெள்ளிக்கிழமைதோறும் மகாலட்சுமியை வழிபாடு செய்துவர முயற்சிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் அகலும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!