வரலாற்றில் இன்று – 23.10.2020 கிட்டூர் ராணி சென்னம்மா

இந்திய சுதந்திரப் போராட்டம் தொடங்குவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டு வீரமரணம் அடைந்த கிட்டூர் ராணி சென்னம்மா 1778ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி கர்நாடகத்தில் பெல்காம் அருகே உள்ள ககதி கிராமத்தில் பிறந்தார்.

சிறு வயதிலேயே குதிரை ஏற்றம், வாள் வீச்சு, வில்வித்தையில் தேர்ச்சி பெற்றார். துணிச்சல்காரப் பெண் என்று பெயர் பெற்றார். மிகவும் செழிப்பாக இருந்த கிட்டூர் ராஜ்ஜியத்தைக் கைப்பற்ற ஆங்கில அரசு முடிவு செய்தது.

நவீன போர்க் கருவிகள், அதிக வீரர்கள் என்று அதிக வலிமையுடன் இருந்த ஆங்கிலேயப் படையை எதிர்த்து போராடிய ராணியின் வீரர்களால் ஆங்கிலேய வீரர்களை தாக்குப்பிடிக்க முடியவில்லை. ஆனாலும், முயற்சியை விடாமல் தொடர்ந்து போராடிய சென்னம்மா சிறைபிடிக்கப்பட்டார்.

புனித நூல்களைப் படித்தும், பூஜைகளில் ஈடுபட்டும் சென்னம்மா தனது சிறை வாழ்வைக் கழித்தார். இவர் 1829ஆம் ஆண்டு சிறையிலேயே மறைந்தார்.

விடுதலைப் போராட்டத்திற்கு வித்திட்ட முன்னணி வீராங்கனையாகவும், இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் வீரச் சின்னமாகவும் இன்றளவும் சென்னம்மா கொண்டாடப்படுகிறார்.

அரவிந்த் அடிகா

சிறந்த மொழித் திறமையும், எழுத்துத் திறமையும் ஒருங்கே பெற்ற அரவிந்த் அடிகா 1974ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி சென்னையில் பிறந்தார்.

இவர் 1990ஆம் ஆண்டு நடந்த எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றார்.

இவரது முதல் புதினம் தி ஒயிட் டைகர் (The White Tiger) 2008ஆம் ஆண்டு மேன் புக்கர் பரிசு பெற்றது. இவர் நாவல்கள் மட்டும் இல்லாமல் சிறுகதைகள் எழுதுவதிலும் சிறப்புபெற்று விளங்குகிறார்.

முக்கிய நிகழ்வுகள்

1920ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி சூறாவளி காற்றின் வலிமையை அளவிடும் (ஃபுஜிதா அளவீடு) நுட்பத்தைக் கண்டறிந்த ஃபுஜிதா டெட்சுயா (Fujita Tetsuya) ஜப்பானில் பிறந்தார்.

1911ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி முதல்முறையாக போரில் விமானம் பயன்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!