வரலாற்றில் இன்று – 14.10.2020 உலகத் தர நிர்ணய தினம்

 வரலாற்றில் இன்று – 14.10.2020 உலகத் தர நிர்ணய தினம்

உலகத் தர நிர்ணய தினம் (World Standard Day) என்பது ஆண்டுதோறும் அக்டோபர் 14ஆம் தேதி உலகளாவிய முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது.

உலகில் மனிதனால் உற்பத்தி செய்யப்படும் அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளின் தரம் மற்றும் தர நிர்ணயம் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு புகுத்தவே சர்வதேச தர நிர்ணய நிறுவனம், IEC, ISO (International Organization for Standardization) மற்றும் ITU அமைப்புகளும் ஒன்று சேர்ந்து 1970ஆம் ஆண்டிலிருந்து, அக்டோபர் 14ஆம் தேதியை உலகத்தர நிர்ணய நாளாக அனுசரித்து வருகின்றன.

லாலா ஹர்தயாள்

விடுதலைப் போராட்ட வீரரும், சிறந்த படைப்பாளியுமான லாலா ஹர்தயாள் 1884ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி டெல்லியில் பிறந்தார்.

அமெரிக்கா சென்ற இவர் சிலருடன் இணைந்து ‘கதர்’ (Ghadar) என்ற பத்திரிக்கையை வெளியிட்டார். மேலும் இவர்கள் ஒன்றிணைந்து அமெரிக்க பசிபிக் பிராந்திய ஹிந்த் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினர்.

இந்தியாவில் ஆங்கில அரசு செய்து வந்த கொடுமைகளை இப்பத்திரிக்கை உலகுக்கு வெளிப்படுத்தியது. உலகின் கவனம் இந்தியா பக்கம் திரும்பியது. இந்தியா விடுதலை பெற ஆயுதப் புரட்சிக்கான முனைப்புகளை மேற்கொண்டார்.

பல்வேறு நாடுகளுக்குச் சென்று இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு திரட்டிய லாலா ஹர்தயாள், 1939ஆம் ஆண்டு மறைந்தார்.

முக்கிய நிகழ்வுகள்

1643ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி இந்தியாவை ஆட்சி செய்த முகலாயப் பேரரசின் பேரரசர் முதலாம் பகதூர் சா பிறந்தார்.

2009ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி இந்தியக் குடிமைப் பணிகள் தேர்வு என்று அழைக்கப்படும் ஐசிஎஸ் தேர்வில் முதன்முதலாக வெற்றிபெற்ற பெண் சி.பி. முத்தம்மா மறைந்தார்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...