வரலாற்றில் இன்று – 24.07.2020 அலெக்ஸாண்டர் டூமாஸ்

 வரலாற்றில் இன்று – 24.07.2020 அலெக்ஸாண்டர் டூமாஸ்

உலகிலேயே அதிக நூல்களை எழுதிய எழுத்தாளர் அலெக்ஸாண்டர் டூமாஸ் 1802ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் தேதி பிரான்ஸின் பிகார்டி பகுதியில் உள்ள வில்லர்ஸ் காட்டரட்ஸ் கிராமத்தில் பிறந்தார்.

தனது 20 வயதில் பத்திரிகைகளுக்கு கதை எழுத தொடங்கினார். இயல்பாகவே இவருக்கு எழுத்தாற்றல் இருந்ததால், விரைவில் பிரபலமானார்.

‘தி கவுன்ட் ஆஃப் மான்ட் கிறிஸ்டோ’,’தி த்ரீ மஸ்கிடேர்ஸ்’,’ட்வென்டி இயர்ஸ் ஆஃப்டர்’ ஆகிய புதினங்கள் ஆரம்பத்தில் தொடர்கதையாக வெளிவந்து பிறகு நாவல்களாக புகழ்பெற்றன.

சாகசங்கள் நிரம்பிய வரலாற்று நாடகங்கள், கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள், பயணக் கட்டுரைகள் எனப் பல நூல்களை எழுதியுள்ளார்.

எழுத்துலகின் சிகரம் என்று போற்றப்பட்ட அலெக்ஸாண்டர் டூமாஸ் 1870ஆம் ஆண்டு மறைந்தார்.

முக்கிய நிகழ்வுகள்

1985ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் தேதி சென்னை வண்டலூர் மிருகக்காட்சி சாலை தொடங்கப்பட்டது.

1974ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் தேதி நியூட்ரானை கண்டுபிடித்த சர் ஜேம்ஸ் சாட்விக் மறைந்தார்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...