அண்மை செய்திகள்
பிரபாஸ் நடிக்கும், “சலார்” படத்தின் டீசர் !!!தனுஜா ஜெயராமன்
Hombale Films வழங்கும் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும், “சலார்” . இந்த திரைப் படத்தின் டீசர் ஜூலை 6 வெளியாகிறது . *Hombale Films நிறுவனம் இந்த வருடத்தின் மிகப்பிரமாண்ட படைப்பான, இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், பிரபாஸ் நடிக்கும், “சலார்” படத்தின் டீசரை ஜூலை 6 ஆம் தேதி வெளியிடுவதாக அறிவித்துள்ளது . இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைத்த கேஜிஎஃப் படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் பிரபாஸ் […]
சமூக நீதி பேசும் கழுவேத்தி மூர்க்கன் – விடுதலை சிறுத்தைகள் தலைவர் திரு. தொல். திருமாவளவன் !!!-தனுஜா ஜெயராமன்
தலித் சமூகத்திலும் தலித் அல்லாதவர் சமூகத்திலும் அரசியல்வாதிகள் தங்கள் சாதியை தங்கள் ஆதாயத்திற்கு பயன்படுத்துகிறார்கள் என்ற உரையாடலை எடுத்து வைத்திருக்கிறார் இயக்குனர் – கழுவேத்தி மூர்க்கன் திரைப்படம் பார்த்த விடுதலை சிறுத்தைகள் தலைவர் திரு. தொல். திருமாவளவன் அவர்கள் பேட்டி. இன்றைக்கு தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே தேவையான திரை சித்திரம் கழுவேத்தி மூர்க்கன். அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட வேண்டிய திரைப்படம், சமூகத்தில் கெட்டிப்பட்டு போயிருக்கும் சாதிய அடுக்குகளின் மீது தாக்குதல் நடத்தும் அளவிற்கு இந்த திரைப்படத்தின் […]
“பிரான்ஸ் கலவரம் ஒரு பார்வை”
பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் அருகே நான்டெர்ரே நகரில் உள்ள போக்குவரத்து சிக்னலில் கடந்த வாரம் சிவப்பு நிற எச்சரிக்கையை மீறி வேகமாக ஒரு கார் சென்றது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த காரை துரத்தி சென்றனர். அப்போது அந்த காரை நிறுத்துவதற்காக போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். சுட்டதில் காரை ஓட்டி சென்ற நகேல் என்ற 17 வயது ஆப்பிரிக்க வம்சாவளியை சேர்ந்த சிறுவன் இறந்தான். போலீசாரின் இந்த நடவடிக்கையை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனால் […]
“தக்காளியைப்போல் அதிகரித்து வரும் இதற காய்கறிகளின் விலை..!”
சென்னையில் தக்காளி விலை தற்போது 110 முதல் 130 ரூபாய் வரை விற்பனையாகிறது. ஆப்பிள் போல் தக்காளி விற்பனையாக முக்கிய காரணம் வரத்து குறைவு தான். தக்காளியை தொடர்ந்து பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம் விலையும் பெரிய அளவில் உயரும் அபாயம் எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் தக்காளி விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது.அண்மையில் வரத்து அதிகரிப்பால் சற்று குறைந்த தக்காளி விலை, அதன்பின்னர் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு உயர்ந்துவிட்டது. 130 ரூபாய் வரை சில்லறை விலையில் சென்னையில் தக்காளி […]
அண்ணாமலையாரை தரிசித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..!!!
திருவண்ணாமலை சென்ற நடிகர் ரஜினிகாந்த் அண்ணாமலையாரை தரிசனம் செய்தார் . இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது. ரஜினி என்றாலே பரபரப்புற்கு பஞ்சமேது.. அவர் நின்றாலே நடந்தாலே செய்தி தானே…! தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘லால் சலாம்’ படப்பிடிப்பு திருவண்ணாமலை அருகே செஞ்சியில் நடப்பதால் தனது படப்பிடிப்பை முடித்துவிட்டு திருவண்ணாமலை கோவிலுக்கு சென்று அண்ணாமலையாரை தரிசனம் செய்து வந்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் மகளும், இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது லால் சலாம் என்ற படத்தை […]
போர் தொழில் திரைப்பட வெற்றி விழா!
அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட், எப்ரியஸ் ஸ்டுடியோ எல்எல்பி, E4 எக்ஸ்ப்ரிமண்ட்ஸ் எல் எல் பி ஆகிய நிறுவனங்கள் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில், சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல் நடிப்பில் வெளியான பரபரப்பான சைக்கோ திரில்லர் படம் “போர் தொழில்”. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம் திரையரங்குகளை திருவிழாக்கோலமாக மாற்றியிருக்கிறது. இன்று வரையிலும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாகத் திரையரங்குகளை ஆக்கிரமித்திருக்கும் இப்படத்தின் வெற்றி விழா, இன்று சென்னையில் உள்ள முன்னணி நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. […]
பாலமுரளி நாத மகோத்சவ் 2023-கான விருது!
Dr.M.பாலமுரளிகிருஷ்ணா அவர்களின் 93-வது நட்சத்திர பிறந்த நாளை முன்னிட்டு Dr.M.பாலமுரளிகிருஷ்ணா நினைவு அறக்கட்டளையின் கலையில் சிறந்தவருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2023-கான முரளீ நாத லஹரி விருது மற்றும் ஒரு லட்ச ரூபாய் பரிசினை பரதநாட்டிய கலைஞர் Dr.பத்மா சுப்பிரமணியம் அவர்களுக்கு வழங்குவதில் பெருமை கொள்கிறது. இந்த விருது நிகழ்ச்சியினை Dr.M.பாலமுரளி கிருஷ்ணா நினைவு அறக்கட்டளையுடன் சென்னை பாரதீய வித்யா பவன் இணைந்து வருகின்ற ஜூலை 6-ந்தேதி மாலை 6 மணிக்கு மைலாப்பூர் பாரதீய வித்ய பவன் […]
இயக்குனர் மணிரத்னம் ‘ஆஸ்கர் விருதுகள்’ உறுப்பினராக தேர்வு……..
2023ம் ஆண்டு ‘ஆஸ்கர் விருதுகள்’ தேர்வுக்குழுவுக்கு இந்தியர்கள் உட்பட 398 பேர் உறுப்பினராக தேர்வு. இயக்குனர் மணிரத்னம், இசையமைப்பாளர் கீரவாணி, நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் தேர்வு. ஒளிப்பதிவாளர் கே.கே.செந்தில்குமார், தயாரிப்பாளர் கரண் ஜோகர் ஆகியோரும் உறுப்பினர்களாக தேர்வு. ஏற்கனவே தமிழகத்தில் இருந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நடிகர் சூர்யா ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நெகிழ்ச்சியான பதிவு
மும்பை சாலைகளில் கனமழையில் நனைந்தபடி பூ விற்றுக் கொண்டிருந்த சிறுமியை தான் சந்தித்தது குறித்து பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். தனது இணையதளத்தில் இது குறித்து அவர் பகிர்ந்த சேதி இதோ: அடைமழையில் பாதி நனைந்தபடி தன் கையில் சிவப்பு நிற ரோஜா மலர்களுடன் அவள் அங்கே நின்று கொண்டிருந்தாள். பூக்களை பிளாஸ்டிக் கவரில் சுற்றியபடி, டிராபிக்கில் ஒவ்வொரு கார் கண்ணாடியாக சென்று கொண்டிருந்தாள். அந்த பூக்களை விற்பதன் மூலம் தனது […]
“தலைநகரம் 2” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!
Right Eye Theatres சார்பில் தயாரிப்பாளர் பிரபாகரன் மற்றும் இயக்குநர் V Z துரை தயாரிப்பில், மிகப்பெரும் ப்ளாக்பஸ்டர் திரைப்படமான தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகமாக உருவான படம் தலைநகரம் 2. சுந்தர் சி, பாலக் லல்வாணி நடிப்பில், இயக்குநர் V Z துரை இயக்கியிருந்த இப்படம் கடந்த 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று, 350 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், படக்குழுவினர் […]