30 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் பா.ஜனதா கூட்டணிக்கும்,காங்கிரஸ் – தி.மு.க. கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதுதவிர நாம் தமிழர் கட்சி, த.வெ.க. -நேயம் மக்கள் கழகம் கூட்டணியும் களத்தில் உள்ளன. இதனால் புதுச்சேரியில் 4 முனை போட்டி நிலவுகிறது. இங்கு மொத்தம் 294 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில் புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி தனது இரு சக்கர வாகனத்தில் சென்று தனது வாக்கை பதிவு செய்தார்.

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முதல்-அமைச்சர் ரங்கசாமி, “இரண்டு தொகுதிகளிலும் நான் வெற்றி பெறுவேன். எண்ணிக்கையை விட, ஆட்சி அமைப்பதுதான் எனக்கு முக்கியம். நாங்கள் எப்போதும் மக்களுக்காகவே இருக்கிறோம். மக்களோடு இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
கேரள கண்ணூரில் முதல்-மந்திரி பினராயி விஜயன் தனது வாக்கைச் செலுத்தினார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “பொய் பிரச்சாரத்தால் இடதுசாரி ஜனநாயக முன்னணியை தோற்கடிக்க முடியாது. நாங்கள் எப்போதும் மக்களை நம்புகிறோம், மக்களும் எங்களை நம்புகிறார்கள்.. கடந்த பத்து ஆண்டுகளாக நாங்கள் மக்களுடன் பயணித்து வருகிறோம், அந்த பயணம் தொடர வேண்டும். நாங்கள் மக்களுடன் இருக்கிறோம், மக்களும் எங்களுடன் இருக்கிறார்கள்… மதவாதப் பிரச்சாரத்தால் எங்களைத் தோற்கடிக்க முடியாது” என்று கூறினார்.

அசாம் மாநில சட்டசபை தேர்தலுக்க்கன வாக்குப்பதிவு நடைபெற்று வரும்நிலையில், பல்வேறு வாக்குச்சாவடியில் வாக்களிப்பதற்காக வாக்காளர்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர்.
