ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோவில், செங்கோட்டை, துாத்துக்குடிக்கு, சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
நாகர்கோவில் – தாம்பரம் செப். 28 முதல் அக். 26 வரை ஞாயிறு தோறும் இரவு 11:15 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06012), மறுநாள் மதியம் 12:30 மணிக்கு தாம்பரம் செல்கிறது. மறுமார்க்கத்தில், செப். 29 முதல் அக். 27 வரை திங்கள் தோறும் மதியம் 3:30 மணிக்கு புறப்படும் ரயில் (06011), மறுநாள் அதிகாலை 5:15 மணிக்கு நாகர்கோவில் செல்கிறது.
இரு ரயில்களும் வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்துார், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், பண்ருட்டி, விழுப்புரம், மேல்மருவத்துார், செங்கல்பட்டு வழியாக செல்கின்றன. 2 ‘ஏசி’ இரண்டடுக்கு படுக்கை வசதிப் பெட்டி, 6 ‘ஏசி’ மூன்றடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள், 7 ‘ஸ்லீப்பர்’ பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகள், ஒரு சரக்குப் பெட்டி, ஒரு மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டியுடன் இயக்கப்படுகின்றன.

செங்கோட்டை – சென்னை சென்ட்ரல் செப். 24 முதல் அக். 22 வரை புதன் தோறும் மதியம் 3:10 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரயில் (06121), மறுநாள் காலை 6:30 மணிக்கு செங்கோட்டை செல்கிறது. மறுமார்க்கத்தில், செப். 25 முதல் அக். 23 வரை வியாழன் தோறும் இரவு 9:00 மணிக்கு புறப்படும் ரயில் (06122), மறுநாள் காலை 11:30 மணிக்கு சென்னை சென்ட்ரல் செல்கிறது.
இரு ரயில்களும் தென்காசி, அம்பாசமுத்திரம், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்துார், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் வழியாக செல்கின்றன. 15 ‘ஏசி’ மூன்றடுக்கு ‘எகனாமி’ படுக்கை வசதிப் பெட்டிகள், 2 சரக்குப் பெட்டிகளுடன் இயக்கப்படுகின்றன.
திருநெல்வேலி – சென்னை எழும்பூர் செப். 25 முதல் அக். 23 வரை வியாழன் தோறும் இரவு 9:30 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படும் ரயில் (06070), மறுநாள் காலை 10:00 மணிக்கு எழும்பூர் செல்கிறது. மறுமார்க்கத்தில், செப். 26 முதல் அக். 24 வரை வெள்ளி தோறும் மதியம் 12:30 மணிக்கு புறப்படும் ரயில் (06069), மறுநாள் அதிகாலை 1:30 மணிக்கு திருநெல்வேலி செல்கிறது.
