சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு புதிய கட்டணம்: இன்று முதல் அமல்..!

கோவை மதுக்கரை சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு இன்று (01-08-2025) முதல் புதிய கட்டணம் அமல்படுத்தப்படுகிறது.

கோவையை அடுத்த நீலாம்பூரில் இருந்து மதுக்கரை வரையிலான 27 கிலோமீட்டர் தூர கோவை பைபாஸ் சாலையை எல் அண்டு டி நிறுவனத்திடம் இருந்து தேசிய நெடுஞ்சாலைத்துறை ஏற்றுக் கொண்டுள்ளது. ஏற்கனவே அந்த சாலையில் இருந்த 6 சுங்கச்சாவடிகளில், 5 சுங்கச்சாவடிகள் மூடப்பட்டன. இதற்கு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்தனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், “தேசிய நெடுஞ்சாலை விதி 2008-ன்படி செயல்படுத்தப்படும் வாகனங்களுக்கான கட்டணமுறை அமல்படுத்தப்படுகிறது. மதுக்கரை சுங்கச்சாவடியில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வாகனங்களுக்கு புதிய கட்டணம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

குடியிருப்பாளர்களுக்கு குறிப்பிடத்தக்க நிவாரணமாக, சுங்கச்சாவடியில் இருந்து 20 கிலோ மீட்டர் சுற்றளவில் வசிக்கும் வணிகம் அல்லாத வாகனங்கள் ரூ.350 சலுகை விலையில் மாதாந்திர பாஸ் பெற தகுதி உடையவை.

கோவை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வணிக வாகனங்கள், இலகுரக வாகனங்களுக்கு ரூ.20 முதல் பெரிய வாகனங்களுக்கு ரூ.115 வரை சலுகை விலையில் கிடைக்கும். 24 மணி நேரத்திற்குள் திரும்பும் பயணங்களுக்கு 25 சதவீதம் சலுகை கிடைக்கும். அதே நேரத்தில் பணம் செலுத்தியதில் இருந்து ஒரு மாதத்திற்குள் மேற்கொள்ளப்படும் ஒற்றை பயணங்களுக்கு 33 சதவீதம் சலுகை கிடைக்கும்.

இதர கார், ஜீப், வேன் அல்லது இலகுரக மோட்டார் வாகனங்க ளுக்கு ஒரு பயணத்துக்கு ரூ.35, ஒரே நாளில் திரும்பும் பயண கட்டணமாக ரூ.55, மினி பஸ், இலகு ரக வணிக வாகனங்கள், இலகு ரக சரக்கு வாகனங்களுக்கு ஒரு பயணத்துக்கு ரூ.60, ஒரே நாளில் திரும்பும் பயணத்துக்கு ரூ.90,

பஸ் அல்லது டிரக் வாகனங்களுக்கு ஒரு பயண கட்டணமாக ரூ.125, ஒரே நாளில் திரும்பும் பயண கட்டணமாக ரூ.185, 3 அச்சு வணிக வாகனத்துக்கு ஒரு பயணத்துக்கு ரூ.135, ஒரே நாளில் திரும்பும் கட்டணமாக ரூ.200 நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

கனரக கட்டுமான எந்திர வாகனங்களுக்கு ஒரு பயணத்துக்கு ரூ.195, ஒரே நாளில் திரும்பும் பயண கட்டணமாக ரூ.290, 7 அல்லது அதற்கு மேற்பட்ட அச்சுகள் கொண்ட வாகனங்களுக்கு ஒரு பயணத்துக்கு ரூ.235, ஒரே நாளில் திரும்பும் பயண கட்டணமாக ரூ.350 வசூலிக்கப்பட உள்ளது” என்று தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!