மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெறுகிறது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.![]()
கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சார்பு அணிச் செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்வதாக கூறப்பட்டுள்ளது.
சமீபத்தில் தான் ’உடன்பிறப்பே வா’ என்ற தலைப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொகுதி வாரியாக நிர்வாகிகளை சந்தித்து கள நிலவரங்களை கேட்டறிந்தார். இந்த நிலையில், இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுவது முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வியூகங்கள், புதிய நியமனங்கள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும் அதிமுக – பாஜக கூட்டணி, தவெக குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரும் ஜூலை 7ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார் என அறிவிப்பு வெளியானது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், திமுக , அதிமுக கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை திவிரப்படுத்தியுள்ளது.
