இன்றைய ராசி பலன்கள் ( பிப்ரவரி 18 செவ்வாய்க்கிழமை 2025 )

‘தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் பிப்ரவரி 18-ம் நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று நமது மின்கைத்தடியின் இப்பகுதியில் பார்க்கலாம்.

மேஷ ராசி அன்பர்களே!

இன்றைய நாள் சாதகமான விளைவுகளையும் மகிழ்ச்சியான தருணங்களையும் அளிக்கும். நீங்கள் பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மகிழ்ச்சியடைவீர்கள். உங்கள் சக பணியாளர்களுடன் நல்லுறவு காணப்படும். அவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பணியில் உங்கள் செயல்திறன் திருப்திகரமாக இருக்கும். நிதிநிலை திருப்திகரமாக இருக்கும். பணத்தை உங்கள் தேவைக்கேற்ப பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள். உங்களிடம் காணப்படும் ஆற்றல் மற்றும் மன உறுதி காரணமாக உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

ரிஷப ராசி அன்பர்களே!

இன்று உற்சாகமாக இருப்பீர்கள். இன்று நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். புதிய மனிதர்களை சந்திப்பீர்கள். இன்று முக்கியமான முடிவுகள் எடுக்கலாம். . நீங்கள் பணிகளை குறித்தநேரத்தில் முடிப்பீர்கள்.உங்களின் சீரிய அணுகுமுறை மூலம் கடினமான பணிகளைக் கூட எளிதாக செய்து முடிப்பீர்கள். இன்று நிதிநிலை மிகவும் திருப்திகரமாக இருக்கும். அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆற்றல் மூலம் உங்கள் விருப்பங்களை பூர்த்தி செய்து கொள்வீர்கள். உங்களின் நேர்மறையான மன நிலை காரணமாக இன்று உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மிதுன ராசி அன்பர்களே!

உங்களின் ஆர்வத்தை மேம்படுத்தும் திட்டங்களை இன்று எடுக்கலாம். இசை கேட்பது மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடுவது போன்றவை ஆறுதல் அளிக்கும். நம்பிக்கையான அணுகுமுறை சிறந்த பலனளிக்கும். இன்று அதிகப் பணிகள் காணப்படுவதால் பணிகளை சரியான குறித்தநேரத்தில் முடிக்க இயலாது. திட்டமிட்டு கவனமுடன் பணியாற்றினால் சிறப்பாக பணியாற்றலாம். பணபுழக்கம் குறைவாக இருக்கும். வீண் விரயங்களை தவிர்க்க பணத்தை கவனமாக செலவு செய்ய வேண்டும். உங்களின் மன உளைச்சல் காரணமாக நீங்கள் கால் வலியால் அவதிப்படுவீர்கள்.

கடக ராசி அன்பர்களே!

இன்று உங்கள் செயல்களில் கவனம் தேவை. சிறப்பாக திட்டமிட்டால் பதட்டமின்றி செயல்படலாம். முக்கிய முடிவுகளை தள்ளிப்போடவும். பணியிடத்தில் சகபணியாளர்களுடனான உறவுமுறையில் சில குழப்பங்கள் காணப்படும். அதனை சமாளித்து பணியாற்ற இன்று பொறுமை அவசியம். நிதிநிலை சிறப்பாக இருக்காது. உங்கள் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள நீங்கள் பணத்தை கடனாக வாங்குவீர்கள். அஜீரணக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சரியான உணவு மற்றும் நேரத்திற்கு உணவு மேற்கொள்வது நல்ல பலனளிக்கும்.

சிம்ம ராசி அன்பர்களே!

உங்களின் திறமையான தகவல் பரிமாற்றம் மூலம் வெற்றிகரமான பலன் காண்பீர்கள். ஆன்மீக சொற்பொழிவு மற்றும் இறை மந்திரங்கள் ஜெபித்தல் ஆகியவற்றில் ஈடுபடுங்கள். இதன் மூலம் ஆறுதல் பெறலாம். உங்கள் பணியில் சிறந்த நல்ல பலன்கள் கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். நிதிநிலை திருப்திகரமாக இருக்கும். பணத்தை ஆன்மீக விஷயங்களுக்கு செலவு செய்யலாம். இன்று உங்களிடம் ஆற்றல் நிறைந்திருக்கும். ஆரோக்கியத்தில் எந்தப் பிரச்சினையும் இருக்காது.

கன்னி ராசி அன்பர்களே!

இன்று உங்களிடம் வருத்தமான மன நிலை காணப்படும். உங்கள் முயற்சிகள் மூலம் வெற்றிகரமான பலன்கள் கிடைக்காது. இதனை சுமையாகக் கருதுவீர்கள். முறையாக திட்டமிட்டால் வெற்றி பெறலாம். நல்ல வாய்ப்பு வழங்கும் வேலை மாற்றத்தை நீங்கள் வரவேற்கலாம். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அது உங்களுக்கு திருப்தியை அளிக்கும். தேவையற்ற செலவுகள் கவலையை அளிக்கும். பணத்தை முறையாக கையாள்வதன் மூலம் இதனை தவிர்க்கலாம். கண் சம்பந்தமான பிரச்சினை காணப்படும். இது உங்களுக்கு கவலையை அளிக்கும்.

துலா ராசி அன்பர்களே!

உங்களின் பர்சனாலிட்டி வாசனை திரவியம் போல இன்று செயல்படும். உங்கள் தேவைகளுக்கு நீங்கள் நினைத்ததைவிட அதிகமாக சகோதரர் ஆதரவாக இருப்பார். இன்று நீங்கள் பணிவாகவும் உதவிகரமாகவும் இருந்தால் உங்கள் பார்ட்னர்களிடம் இருந்து பாசிடிவ் ரெஸ்பான்ஸ் கிடைக்கும். உங்கள் வீட்டு இளைய உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிட நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் இதைச் செய்யாவிட்டால், நீங்கள் வீட்டில் நல்லெண்ணத்தை உருவாக்க முடியாது. இன்று முழுவதும் உங்கள் துணை சிறந்த எனர்ஜி மற்றும் காதலுடன் இருப்பார்.

விருச்சிக ராசி அன்பர்களே!

இன்று பதட்டமும் வருத்தமும் காணப்படும். நீங்கள் உணர்சிப்பூர்வமாகப் பேசுவீர்கள். இதனை தவிர்ப்பதன் மூலம் பாதகமான சூழ்நிலை ஏற்படாமல் இருக்கும். பிரார்த்தனை சிறந்த பலனைத் தரும். பணியிடத்தில் அதிகப் பணிகள் காணப்படும். அதனால் உங்கள் பணியில் தவறுகள் நேர வாய்ப்புள்ளது. இன்று அதிக பொறுப்புகள் காரணமாக பணப்பற்றாக்குறை காணப்படும். எனவே செலவுகளை சமாளிப்பதை கடினமாக உணர்வீர்கள். நரம்பு பாதிப்பு காரணமாக கணுக்கால் மற்றும் தோள்களில் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. தியானம் மேற்கொள்வதன் மூலம் சிறந்த பலன் காணலாம்.

தனுசு ராசி அன்பர்களே!

இன்று சிறந்த மனநிலை காணப்படும். உங்கள் பணிகளை எளிதில் முடிப்பீர்கள். உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். உங்கள் பணியில் வெற்றி பெறுவீர்கள். குறித்த நேரத்திற்கு முன்பே உங்கள் பணிகளை முடித்து விடுவீர்கள். உங்கள் பணியில் நேர்மையாக இருப்பீர்கள். உங்கள் கடின உழைப்பிற்கு ஊக்கத்தொகை வகையில் பணம் பெறுவீர்கள். உங்கள் சார்பாக செயல்படும் நல்ல நேரம் காரணமாக இன்று உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்

மகர ராசி அன்பர்களே!

இன்று உங்களிடம் ஆற்றலும் உறுதியும் நிறைந்து காணப்படும். உங்கள் புத்திசாலித்தனத்தால் இன்று வெற்றி காண்பீர்கள். இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாள். உங்கள் நேர்மை மற்றும் கடின உழைப்பு காரணமாக பணியிடச் சூழல் சுமூகமாக இருக்கும் உங்கள் செயல் திறன் திருப்திகரமாக இருக்கும். உங்கள் பணிகளை திறமையாக முடிப்பீர்கள். இன்று நிதி வளர்ச்சி சிறப்பாக இருக்கும். இன்றைய நாளை லாபகரமான முதலீடு செய்ய பயன்படுத்திக் கொள்ளுங்கள். இன்று உங்களிடம் காணப்படும் உற்சாகம் காரணமாக உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கும்பராசி அன்பர்களே!

ஆரோக்கியம் கருதி அதிக சப்தம் போடாதிருங்கள். இப்போது வரை யோசிக்காமல் பணத்தை செலவு செய்து கொண்டிருந்தவர்களுக்கு இன்று நிறைய பணம் தேவைப்படலாம், இன்று வாழ்க்கையில் பணத்தின் முக்கியத்துவம் என்ன என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம். உங்களில் சிலர் நகை அல்லது வீட்டு உபயோக பொருள் வாங்குவீர்கள். இன்று உங்கள் வேலையை உங்கள் பாஸ் பாராட்டக்கூடும். உங்கள் பங்குதாரர் உங்களிடமிருந்து சிறிது நேரம் மட்டுமே விரும்புகிறார், ஆனால் நீங்கள் அவர்களுக்கு நேரம் கொடுக்க முடியவில்லை, இது அவர்களை வருத்தப்படுத்துகிறது. இன்று, அவரது விரக்தி தெளிவுடன் முன்னுக்கு வரலாம். திருமண வாழ்வை இனிமையாக்கை நீங்கள் இது வரை எடுத்த முயற்சிகள் யாவும் இன்று உங்களுக்கு பலன் தரும்.

மீனராசி அன்பர்களே!

இன்று நீங்கள் சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும். இன்று சஞ்சலமான மனநிலையில் இருப்பீர்கள். இன்று தகுந்த முடிவுகளை எடுக்க இயலாது. இன்று பணிகள் அதிகமாக காணப்படும். குறித்தநேரத்தில் பணிகளை முடிப்பதை கடினமாகக் கருதுவீர்கள். திட்டமிட்டு பணிகளை ஒழுங்கமைத்து செயலாற்றுவது சிறந்தது. பணப்புழக்கம் குறைந்து காணப்படும். குடும்பத்திற்காக அதிக பணம் செலவு செய்ய வேண்டியிருக்கும். தாயின் உடல்நிலை குறித்த கவலை இருக்கும். அவரின் ஆரோக்கியத்திற்காக நீங்கள் பணம் செலவு செய்ய நேரும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!