இன்றைய ராசி பலன்கள் (டிசம்பர் 20 வெள்ளிக்கிழமை 2024 )

 இன்றைய ராசி பலன்கள் (டிசம்பர் 20 வெள்ளிக்கிழமை 2024 )

‘தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் டிசம்பர் 20-ம் நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று நமது மின்கைத்தடியின் இப்பகுதியில் பார்க்கலாம்.

குரோதி வருடம் மார்கழி மாதம் 05 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 20.12.2024 சந்திர பகவான் இன்று சிம்ம ராசியில் பயணம் செய்கிறார். இன்று பிற்பகல் 01.55 வரை பஞ்சமி. பிறகு சஷ்டி.இன்று அதிகாலை 05.07 வரை ஆயில்யம். பின்னர் மகம்.பூராடம் உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்.சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

மேஷ ராசி அன்பர்களே!

முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. மனதில் தேவையற்ற குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.உணவு விஷயத்தில் கவனம் தேவை. உறவினர்கள் வகையில் தேவையற்ற பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். ஒரு சிலருக்கு புண்ணியத் தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை இன்று கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்கள் ஒத்துழைப்பு தருவார்கள்.

ரிஷப ராசி அன்பர்களே!

மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். தேவையான பணம் கிடைக்கும். உறவினர்கள் சிலர் உங்கள் யோசனை கேட்டு வருவார்கள். சிலருக்கு உடல் ஆரோக்கியம் சிறிய அளவில் பாதித்தாலும் உடனே நிவாரணம் கிடைத்து விடும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். அலுவலகத்தில் பணிச்சுமை சற்று அதிகரிக்கும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள்.

மிதுன ராசி அன்பர்களே!

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். ஆனால்,குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகள் எதையும் எடுக்கவேண்டாம். உறவினர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அவர்களிடம் பேசும் போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிள்ளைகள் பிடிவாதம் பிடிப்பார்கள். அனுசரித்துச் செல்வது நல்லது. சிலருக்கு வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும்.

கடக ராசி அன்பர்களே!

சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படக் கூடும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் சந்தர்ப்பம் கூடிவரும். கணவன் – மனைவிக் கிடையே சிறுசிறு விவாதங்கள் ஏற்படும். பொறுமை அவசியம். பிள்ளைகள் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். விற்பனை அதிகரிக்கும்.

சிம்ம ராசி அன்பர்களே!

மனதில் இனம் தெரியாத உற்சாகம் பெருக்கெடுக்கும். ஆனால், புதிய முயற்சி எதையும் இன்று தொடங்கவேண்டாம். திடீர் செலவுகளால் கையிருப்பு கரைவதுடன் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். வாழ்க்கைத்துணை வழி உறவுகளால் சிறுசிறு சங்கடங்கள் ஏற்படக் கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக பணியாளர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வார்கள். வியாபாரத்தில் லாபம் கிடைத்தாலும் செலவுகளும் அதிகரிக்கும்.

கன்னி ராசி அன்பர்களே!

மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தொடங்கும் காரியம் அனுகூலமாக முடியும். உற்சாகமாகச் செயல்படுவீர்கள். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். உங்களுடைய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். அதிகாரிகளின் பாராட்டுகள் மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.

துலா ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது சாதகமாக முடியும். எதிரிகளால் மறைமுக ஆதாயம் உண்டாகும். அரசாங்கக் காரியம் அனுகூலமாக முடியும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் இழுபறிக்குப் பிறகுதான் முடியும். அலுவலகத்தில் பணிச்சுமை சற்று அதிகமாக இருக்கும். சக பணியாளர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். சிலருக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் ஏற்படும். உறவினர்களிடம் பக்குவமாக நடந்து கொள்ளவும். அலுவலகத்தில் உங்கள் பணிகளைக் குறிப்பிட்ட நேரத்துக்குள் முடித்து பாராட்டு பெறுவீர்கள். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் அனுகூலம் உண்டாகும்.

தனுசு ராசி அன்பர்களே!

காலையில் வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படக்கூடும். சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனம் தேவை. பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். மாலையில் பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். அலுவலகத்தில் சக பணியாளரின் பணியையும் நீங்கள் பார்க்கவேண்டி வரும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும்.

மகர ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் முடிவதில் தடைகளும் தாமதமும் ஏற்படக்கூடும். தந்தை வழி உறவுகளால் அலைச்சலும் செலவும் ஏற்படும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். தேவையற்ற வீண்செலவுகள் மனதை சஞ்சலப்படுத்தும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் பணியாளர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது.

கும்பராசி அன்பர்களே!

எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். வீட்டில் உள்ளவர்கள் உங்கள் ஆலோசனையைக் கேட்டுச் செயல்படுவார்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். ஒருவர் தேவையை மற்றவர் நிறைவேற்றி மகிழ்வீர்கள். மாலையில் வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறக்கூடும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரம் விறுவிறுப்பாக நடப்பதுடன், லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும்.

மீனராசி அன்பர்களே!

உற்சாகமான நாள். ஆனால், புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங் கும் வாய்ப்பு ஏற்படக்கூடும். அலுவலகத் தில் உங்கள் பணிகளை மற்றவர்களிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்வது அவசியம். வியாபாரத்தில் பணியாளர்களால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். சக வியாபாரிகளிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும்.

 

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...