பிப்ரவரி 19 – கோபர்நிகஸ் பிறந்த தினம் இன்று.
பிப்ரவரி 19 – கோபர்நிகஸ் பிறந்த தினம் இன்று.
உலகப் புகழ்பெற்ற முன்னோடி வானியலாளர் நிகோலஸ் கோபர்நிகஸ் 1473ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி போலந்து நாட்டின் தோர்ன் நகரில் பிறந்தார்.
எந்த தொலைநோக்கி கருவியும் இல்லாமலேயே இவரது ஆராய்ச்சிகள் நடைபெற்றன.
வானியல் குறித்து அதுவரை ஏற்றுக்கொள்ளப்பட்டு வந்த புவி மையக் கோட்பாட்டை மறுத்து சூரியனை மையமாகக் கொண்டே பூமி உள்ளிட்ட கோள்கள் சுற்றி வருகின்றன என்கிற சூரிய மையக் கோட்பாட்டை வகுத்தார்.
கோள்களின் பின்னோக்கிய நகர்வு அவற்றின் ஒளி வேறுபாடுகள் ஆகியவற்றையும் விளக்கினார்.
விண்மீன்கள் அமைந்துள்ள இடங்களை வரையறுத்துக் கூறினார்.
ஆன் தி ரெவல்யூஷன் ஆஃப் தி ஹெவன்லி ஸ்பியர்ஸ் என்ற நூலில் தனது ஆய்வுகள் குறித்து எழுதியுள்ளார்.
இதில் பூமி தனது அச்சில் சுழல்கிறது என்பதையும் பூமியை சந்திரன் சுற்றி வருகிறது என்றும் துல்லியமாக குறிப்பிட்டிருந்தார்.
வானியல் ஆய்வாளராக மட்டுமல்லாமல் சட்ட நிபுணர், மருத்துவர், பழங்கலை அறிஞர், மதகுரு, ஆளுநர், அரசு தூதர் என பல துறைகளில் தனது பங்களிப்பை வழங்கிய நிகோலஸ் கோபர்நிகஸ் தனது 70ஆவது வயதில் (1543) காலமானார்.
‘வானுலகக் கோள்களின் சுழற்சிபற்றிய’ தனது கண்டுபிடிப்பை 36 ஆண்டுகளுக்கு முன்பே நூலாக எழுதியும், கத்தோலிக்க கிறிஸ்தவ பழமை வாத திருச்சபையின் கொலை வெறிக்குப் பயந்துபோன கோப்பர்நிகஸ் இறுதியில் தனது மரணப்படுக்கையில் இருந்துதான் அதனை வெளியிட்டார்.▪