புதுச்சேரியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!
கனமழை காரணமாக புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கனமழை காரணமாக புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் நேற்றிரவு புதுச்சேரிக்கு அருகே கரையை கடந்த நிலையில், புதுச்சேரியில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. சுமார் 24 மணி நேரம் இடைவிடாது பெய்த மழையால், தாழ்வான இடங்களில் தண்ணீர் சூழ்ந்தது. முக்கிய சாலைகள் வெள்ளக்காடாக மாறின. புதுச்சேரி முழுவதும் சுமார் 50 ஆயிரம் வீடுகளில் தண்ணீர் சூழ்ந்தது.
இந்நிலையில், புதுச்சேரியில் அதிகனமழை தொடரும் என்றும் காரைக்காலில் மிக கனமழை பெய்யும் எனவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தது. இதனையடுத்து, நாளை (Dec 2) நாளை பள்ளி கல்லூரிகளுக்குவிடுமுறை அறிவிக்கப்பட்டது.