இன்றைய முக்கிய செய்திகள்
ஹெலிக்காப்டர் விபத்தில் தலைசிறந்த அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரர் கோபி பீன் பிரயன்ட் உயிரிழப்பு. தலைசிறந்த அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரர் கோபி பீன் பிரயன்ட் காலமானார். ஹெலிக்காப்டர் விபத்தில் கோபி பீன் பிரயன்ட் மற்றும் அவர் மகள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
திருப்பூர்: உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையில், முதலாம் மண்டல பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு: நீர் திறப்பு மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 94,521 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ், 239 புள்ளிகள் சரிந்து 41,376ல் வர்த்தகமாகி வருகிறது.தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிப்டி 75 புள்ளிகள் சரிந்து, 12,171ல் வணிகமாகிறது.
ஏர்இந்தியாவின் 100% பங்குகளையும் தனியாருக்கு விற்க போவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.ஏர்இந்தியா எக்ஸ்பிரஸில் 100%, இணைப்பு நிறுவனமான AISATSன் 50% பங்குகளும் விற்கப்படும் என அறிவிப்பு.
குரூப் 4 தேர்வு முறைகேட்டில் சிக்கிய அரசு ஊழியர்கள் 2 பேர் சஸ்பெண்ட். கல்வித்துறை, எரி சக்தி துறை அதிகாரிகள் அதிரடி.
தஞ்சை பெரியகோயிலில் குடமுழுக்கை சமஸ்கிருதத்தில் நடத்த தடைகோரி சரவணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு. தொல்லிய துறையின் அனுமதி பெறாமல் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு நடப்பதாக புகார்.
71வது குடியரசு தினத்தையொட்டி நேற்று , லடாக்கில், 17 ஆயிரம் அடி உயரத்தில் எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள் தேசிய கொடியை ஏற்றினர்.