இன்றைய முக்கிய செய்திகள்

 இன்றைய முக்கிய செய்திகள்

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு தேர்வு மையம்: புதிய அறிவிப்பு, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அந்தந்த பள்ளியிலேயே நடைபெறும்: தொடக்கக்கல்வி துறை இயக்குனர் பழனிச்சாமி அறிவிப்பு. மாணவர்கள் வேறு பள்ளிக்கு மாற்றபட மாட்டார்கள். ஆசிரியர்கள் மத்தியில், கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து திடீர் முடிவு.

ஜுன் 1ம் தேதி முதல் ஒரே தேசம் ஒரே ரேசன் திட்டம் அமல்: மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான்!

காவல்துறைக்கு, 3 மணி நேர ஷிப்ட்டு! புதுச்சேரியில் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்தில் பணிபுரியும் காவல்துறையினருக்கு, 3 மணி நேர ஷிப்ட்டு முறையில் பணிகளை ஒதுக்க துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவு.

பெயர்மாற்றம் செய்ய ஒப்புதல். மத்திய போலீஸ் கேண்டீனை ‘கேந்திரியா போலீஸ் கல்யாண் பந்தர்’ என்று பெயர்மாற்றம் செய்ய உள்துறை அமைச்சகம் ஒப்புதல்.

புதுச்சேரியில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம். மக்களிடம் கருத்து கேட்காமல் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்தது அரசியலமைப்புக்கு எதிரானது. மாநில அரசின் அங்கீகாரம் இல்லாமல் ஒரு திட்டத்தை நிறைவேற்ற இயலாது: முதல்வர் நாராயணசாமி.

பெரியார் பற்றி நான் பேசிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது: சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி அதிரடி “1971ம் ஆண்டு நடந்த சம்பவத்தையே பேசினேன், கற்பனையாக பேசவில்லை” “பத்திரிகைகளில் வந்த செய்தி அடிப்படையிலேயே நான் பேசினேன்”.

2017ல் அவுட்லுக் பத்திரிக்கையில் வந்ததைதான் நான் பேசினேன்  – ராமர் படத்திற்கு செருப்பு மாலை அணிந்தது உண்மைதான்.ராமர், சீதை உருவங்கள் உடை இல்லாமல் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது பத்திரிக்கையில் வெளிவந்தது. இது மறுக்க வேண்டிய சம்பவம் அல்ல மறக்க வேண்டிய சம்பவம் – நடிகர் ரஜினிகாந்த்.

அரசு பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்புகள் நிறுத்தம். அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடுவதில் சிக்கல். இனி மார்ச் மாதம் தான் நீட் பயிற்சி வகுப்புகள் நடக்கும் என தகவல்.

நீங்கள் முரசொலி இட மூலப்பத்திரத்தை காட்டுங்கள் – பாஜக எச் ராஜா டிவிட்டர் செய்தி. திரு. ரஜினிகாந்த் அவர்கள் பத்திரிகை செய்தியின் நகலைக் காட்டியதற்கு திக வினர் ஒரிஜினலை காட்டச் சொல்கின்றனர். முதலில் நீங்கள் முரசொலி இட மூலப்பத்திரத்தை காட்டுங்கள்.

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மத்திய அரசுக்கு அளிக்க வேண்டிய ரூ.92 ஆயிரம் கோடியை தவணை முறையில் செலுத்த அனுமதிக்கக்கோரி தாக்கல் செய்த வழக்கு. உச்சநீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு அடுத்த வாரம் விசாரிக்கும் – தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே

தீவிரவாதி காஜாமைதீன் சென்னை பெரியமேடு பகுதியில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை வாங்கி சென்றுள்ளதாக தகவல்.குடியரசு தினத்தன்று கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் மிகப் பெரிய அளவில் குண்டு வெடிப்பு ஏற்படுத்த முடிவு செய்திருந்ததாக விசாரணையில் தகவல்.

வேலம்மாள்
கல்விக் குழுமம் தொடர்புள்ள, 50 இடங்களில் வருமான வரித்துறை சோதனை!.

எம்.பி, எம்.எல்.ஏகளை தகுதி நீக்கம் செய்யும் அதிகாரம் சபாநாயகரிடம் இருக்க வேண்டுமா என்பதை பரிசீலிக்க வேண்டும்: நாடாளுமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை.

தஞ்சை, பெரிய கோவில் குடமுழுக்கு நடத்த தலைமை செயலாளர் தலைமையில், 21 பேர் கொண்ட உயர்மட்ட குழு அமைப்பு.

“ஆகம விதிப்படி தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு நடத்தப்படும்: உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தரப்பு பதில், தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலய நிர்வாகத்தினரை எதிர் மனுதாரராக சேர்க்க நீதிமன்றம் உத்தரவு, ஜனவரி 27ம் தேதிக்கு, வழக்கு ஒத்திவைப்பு.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...