இன்றைய முக்கிய செய்திகள்
கோவை தேக்கம்பட்டியில் கோவில் யானைகளுக்கான நலவாழ்வு முகாம் தொடக்கம். 48 நாட்கள் நடைபெறும் முகாமில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து 28 யானைகள் பங்கேற்பு.
இன்று முதல் பாஸ்டேக் முறை அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், இதற்கு விண்ணப்பிக்க மேலும் 1 மாத காலம் அவகாசம் வழங்கியுள்ளது மத்திய சாலை போக்குவரத்துத் துறை. மேலும் ஜனவரி 15ம் தேதி பாஸ்டேக் முறை நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டுக்கான உலக அழகிப் பட்டத்தை ஜமைக்காவைச் சேர்ந்த இளம்பெண் டோனி ஆன்சிங் வென்றுள்ளார். இந்தியாவைச் சேர்ந்த சுமன் ராவ் மூன்றாவது இடத்தைக் கைப்பற்றியுள்ளார்.
சென்னை ஐ.ஐ.டி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம். பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப், மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்த நிலையில் சிபிஐக்கு மாற்றம்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் மிண்டானாவ் பகுதியில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவு.
ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான மாவட்ட தேர்தல் பார்வையாளர்களாக, ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமித்தது மாநில தேர்தல் ஆணையம். சேலம் – காமராஜ், நாகப்பட்டினம் – ஞானசேகரன், நாமக்கல் – ஜெகநாதன், ராமநாதபுரம் – அதுல் ஆனந்த், நீலகிரி – ஜோதி நிர்மலா ஆகியோர் மாவட்ட தேர்தல் பார்வையாளர்களாக நியமனம்.
சபரிமலையில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம்: 14 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்.